Skip to main content

Posts

Showing posts from November, 2012

நல்ல மாணவர்களும் கெட்ட மாணவர்களும்

பொதுவாக கல்லூரியில் சில வகுப்புகள் பாடமெடுக்க கடுமையானவை என சொல்வார்கள். நான் படிக்கும் போது வரலாற்றுத் துறைக்கு போக ஆசிரியர்கள் பயப்படுவார்கள். பின்னர் ஆசிரியராக சேர்ந்த பிறகு அது பொருளாதாரம், கார்ப்பரேட் செக்ரடிஷிப் போன்றவையாக இருந்தது. இத்துறை மாணவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள், கூச்சலிடுவார்கள், கவனிக்க மாட்டார்கள், பண்பற்று நடந்து கொள்ளுவார்கள் என சக ஆசிரியர்கள் சதா நீளமான புகார் பட்டியல் வைத்திருப்பார்கள். இந்த வகுப்புகளை விட நல்ல வகுப்புகளுக்கு போவதையே விரும்புவார்கள்

இந்தியர்களின் விதிக் கோட்பாடும் கிரிக்கெட்டின் DRS சர்ச்சையும்

இந்திய அணி வீரர்கள் ஏன் DRS தொழில்நுட்பத்தை தவிர்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் பெருங்குழப்பதை ஏற்படுத்துகிறது. சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் டெஸ்டு தொடர் ஒன்றை இழந்தோம். அப்போது DRS பயன்படுத்தப்பட்ட போது பல எல்.பி.டபிள்யோ முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக போனதாக சொல்லப்படுகிறது.

கூட்டங்களை நிகழ்ச்சிகளை எப்படி ஜனநாயகபூர்வமாக்குவது?

இப்போது இலக்கிய பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் அரங்குகள் கட்டாய வதை முகாம்கள் போல இருக்கின்றன. பிடிக்கவில்லை என்றால் எழுந்து வீட்டுக்குத் தான் போக  வேண்டும். இவ்வளவு தூரம் வந்து விட்டு என்ற சலிப்பில் பலரும் அப்படியே அமர்ந்து விடுகிறார்கள்.

கசாபின் தூக்குத்தண்டனையை முன்வைத்து

- மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் அவசர அவசரமாக தூக்கிக் கொல்லப்பட்ட நிலையில் ஊடகங்களில் மனித உரிமைக்கான குரல்கள் மிக பலவீனமாக ஒலித்தன. அவர்களின் வாதமான மனித உயிரைப் பறிக்கும் உயிர் அரசுக்கு இல்லை என்பது பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மீடியாக்காரர்களுக்கு ஏற்கும்படியாய் இல்லை. தாக்குதலில் இறந்த நூற்றுக்கணக்கான பேர்களின் குடும்பத்துக்கு இதனால் நியாயம் கிடைக்கும் எனும் ஒரு அசட்டு வாதம் தூக்குத்தண்டனை ஆதரவாளர்களால் வைக்கப்படுகிறது. கசாப் எனும் ஒரு தனிநபர் இறப்பதால் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. இந்த உலகில் நமக்கு சம்மந்தமில்லாமல் பறிபோகும் எத்தனையோ உயிர்களில் ஒன்று தான் கசாபினுடையதும். இவ்விசயத்தில் நியாயம் என்பதன் பொருளை தவறாகவே புரிந்து கொள்கிறோம்.

ஏன் எழுத்தாளர்களைப் பார்த்தால் பயப்படுகிறேன்?

எனக்கு எழுத்தாளர்களை பார்த்தாலே குலை நடுங்கும். ஏன் என விளக்கி விடுகிறேன்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்டு 1: ஆடுதளத்தின் விந்தை

இந்த டெஸ்டுக்கான ஆடுதளம் எவ்வளவோ சர்ச்சைகளை அதில் அணிகள் ஆடும் முன்னரே தோற்றுவித்தது. அதிகப்படியாக சுழலை ஆதரிக்கும், சீக்கிரம் நொறுங்கி ஆடுவதே சிரமமாகும் என்றெல்லாம் இங்கிலாந்து ஆதரவாளர்கள் பயந்தார்கள்.

சந்தர்ப்பம்

எனக்கு புது வேலை கிடைத்திருந்தது. அந்த செய்தி எந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.. மர்ம ஸ்தானத்தில் சின்னதாய் புண் வந்தது போல இருந்தது. அப்போதைய வேலையில் ஓரளவு அதிருப்தி இருந்தது; அதேவேளை புதிய வேலை முழுக்க திருப்திகரமாகவும் இல்லை. ஆனாலும் அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் விருப்பம் என்னை ஆட்கொண்டது.

சொந்தக்காரர்களும் சாதியமும்

தந்துகி: சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் எனும் கட்டுரையில் ஆதவன் தீட்சண்யா தன் கொள்கைக்கு எதிராக சடங்குகளை பின்பற்ற நேரும் சிக்கலை பேசுகிறார். உண்மை தான். ஆனால் இதற்கு எளிய தீர்வு அவர் சொல்லுவது போல மேலும் வலுவான கொள்கைப்பிடிப்பு அல்ல.

ஓசியில் எழுதலாமா?

மனுஷ்யபுத்திரன் உடனான சச்சரவில் சில இடங்களில் ஓசியில் எழுதும் எழுத்தாளர்கள் என லீனா மணிமேகலை திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது குறித்த சில விசயங்களை தெளிவு படுத்த வேண்டும்.

தர்மபுரி கலவரம் : கொள்ளையுடன் நடந்த ஜாதிவெறி துவம்சம்.

[தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த உண்மை அறியும் குழுவின் (கம்பீரன், யாக்கன், யாழன் ஆதி, கு. உமாதேவி, ஸ்ரீதர் கண்ணன், நீரை.மகேந்திரன்) அறிக்கை.] “எப்படிங்கன்னா நாங்க ஒண்ணா படிப்போம்; எங்க பிரண்ட்ஸுங்க அம்மாங்கதான் அந்தச் சேரிக்காரனுங்க வீட்டயெல்லாம் கொளுத்துங்கடான்னு கெட்ட கெட்ட வார ்த்தாயா திட்டினு வந்தாங்க;எங்கூட படிக்கிற பசங்க எல்லாம் வந்து எங்கவீட்ட கொளுத்துனாங்க, பேச்சுப்போட்டியில நான் வாங்குன ப்ரைஸ் சர்டிபிக்கேட் எல்லாம் எரிஞ்சி போச்சு அதோ அந்த கொல்லையில நின்னுட்டுதான் நாங்க எல்லாத்தையும் பாத்தோம் .இப்ப எப்படி போய் ஸ்கூல்ல ஒண்ணா படிப்போம்” - விசாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,9ம் வகுப்பு மாணவி, அண்ணாநகர், தர்மபுரி ஜாதிக் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்

கலவர விருந்தின் சுவை

நான் தினத்தந்தியில் வேலை பார்த்த சமயம் சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளுக்கு விழா எடுத்து பிரியாணி போட்டார்கள். மட்டன் பிரியாணி.  ஊரில் இருந்து கூட்டங்கூட்டமாக சாதிசனம் மற்றும் ஊழியர்கள் வந்து சண்டை போட்டபடி நான்கு ஐந்து பிளேட்டுகள் முழுங்கினார்கள். இதென்ன ஸ்பாஞ்சு மாதிரி என்று ரசமலாயை தூக்கி போட்டு விட்டு குடித்தார்கள். இந்த ரகளை மத்தியில் நானும் நண்பர்களும் ஆளுக்கு ரெண்டு பிளேட் சாப்பிட்டோம்.  வாழ்க்கையில் பி றகு எவ்வளவோ ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டேன். ஆனால் அப்படி ஒரு பிரியாணி உண்டதே இல்லை. கை வைத்தால் ஒரு சுவையூறும் கறித்துண்டு வரும். மீண்டும் கை வைத்தாலும் சோறு வராது. கூட அந்த பழங்குடி அட்டகாச சூழலும். உண்மையான விருந்தென்றால் அந்த ஆவேசமும் வண்ணங்களும் வேணும். அடித்து பிடித்து சண்டை போட்டு மனிதர்கள் வாரித்தின்பது பார்ப்பதே ஜாலி தான். நேற்று நான் முதன்முறை மட்டன் பிரியாணி பண்ணிப் பார்த்தேன். நன்றாக வந்திருந்தது - சைவமான என் மனைவியே சுவைத்து உண்டாள். எனக்கு மட்டும் ஏதோ வெஜிடேரியன் சாப்பிடுவது போல இருந்தது.

Fire in Babylon: மேற்கிந்திய தீவுகள் அணியின் பண்பாட்டு அரசியல் எழுச்சி

மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று வெகுவாக மாறி விட்டது. எந்தளவுக்கு என்றால் இன்று அவர்களின் பிரதான பந்து வீச்சாளர் ஒரு சுழல் பந்தாளர். ஒரு இந்தியவர். ராம்நரைன். அவரைக் காட்டித் தான் எதிரணியை அச்சுறுத்துகிறார்கள். இன்னொருவர் வேகவீச்சாளர் தான். ஆனால் அவரும் இந்தியர் தான். ராம்பால். பல-இன சமூக அடையாளத்தை பிரதிநுத்துவப்படுத்தும் இந்த அணி 1975இல் துவங்கி 15 வருட காலம் ஒரு டெஸ்ட் ஆட்டத்தைக் கூட தோற்காமல் உலக சாதனையை நிறுவிய ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், லாயிட், ராபர்ட்ஸ் ஆகியோரின் செவ்வியல் அணியிலிருந்து இருவிதங்களில் வேறுபடுகிறது: வேகப்பந்து வீச்சு மற்றும் கறுப்படையாள அரசியல். அந்த செவ்வியல் மேற்கிந்திய அணியின் இந்த இரு பிரதான கூறுகளையும் வரலாற்றுபூர்வமாய் விளக்கும், கலாச்சார பூர்வமாய் கொண்டாடும் ஒரு ஆவணப்படம் தான் Fire in Babylon. இது 2010இல் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டு வெளியானது. சிறந்த ஆவணப்படத்துக்கான British Independent Film விருதை வென்றது. இரண்டு வருடங்களுக்குப் பின் சமீபமாக இந்தியாவில் இப்படம் வெளியாகி வெகுவான கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.