Skip to main content

Posts

Showing posts from January, 2025

கோலியின் தடுமாற்றம்

விராத் கோலி தில்லிக்காக ரஞ்சி ஆட்டத்தில் 6 ஓட்டங்களில் அவுட் ஆன காணொளியைப் பார்த்தேன். நியுசிலாந்து டெஸ்ட் தொடர் முதலே அவரிடம் ஒரு பிரச்சினையை கவனிக்கிறேன் - அவர் பந்தின் நீளத்தை சரியாகப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் பந்தின் திசையையும் கணிப்பதில்லை. இந்த பந்து ஆறாவது குச்சியில் விழுந்து உள்ளே வருகிறது. அதை கோலி கவர் டிரைவ் செய்யும் நோக்கில் மட்டையைத் தூக்கிக் கொண்டு லெக் ஆண்ட் மிடிலில் நிற்பதைப் பாருங்கள். உள்ளே வரும் பந்தை யாரும் அப்படி விரட்ட மாட்டார்கள். அதுவும் பந்துவீச்சாளர் குச்சிகளுக்கு நேராக வரும்போது பந்து நேராகவோ உள்ளாகவோ தாம் வரும். இது பாலபாடம். சரி அதையும் விடுவோம். பந்து ஸ்விங் ஆகாது என்று அவர் நினைத்தால் கவர் பகுதியில் ஆடும்படி அவரது தலை முன்னங்காலை நோக்கி கவர் பக்கமாகத் தானே போக வேண்டும். ஆனால் கோலியின் தலை அவரது இடப்பக்கம் சரிகிறது. மட்டையின் இறக்கமோ கீப்பரின் பக்கமிருந்து கீழே வருகிறது. அது கவர் டிரைவுக்கானது என்றால் ஷாட் நேரான டிரைவுக்கானது. இப்படி அவர் ஒரு ஷாட்டை அடித்தால் கையும் தலையும் வேறிரு ஷாட்களுக்காக தயாராகின்றன. முக்கியமாக அவர் பந்தின் திசையை பந்து விழும் ம...

இங்கிலாந்து டி20 அணியின் வேகப்பந்து வீச்சும் இந்திய மட்டையாட்டத்தின் பிரச்சினையும்

இங்கிலாந்து தன் டி 20 அணியில் இம்முறை இரண்டு முழுநேர சுழலர்களை மட்டுமே கொண்டு வந்தனர் . ஆனால் இந்தியாவோ தன் அணியில் நான்கு சுழலர்களைக் கொண்டு ஆடுகிறது . ஆகையால் இங்கிலாந்தின் அணித்தேர்வு முட்டாள்தனமானது என்று ஶ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கூறினர் . நானும் அப்படியே கருதினேன் . ஆனால் அவர்களுடைய தேர்விற்குப் பின்னால் அபாரமான திட்டமொன்று இருந்தது என்பதை தொடரின் இரண்டாவது ஆட்டத்தின்போதே புரிந்துகொண்டேன் .  கடந்த சில ஆண்டுகளாகவே நமது மட்டையாளர்கள் ஆஸ்திரேலியா , தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் ஆடப் போகும்போது பந்தை நான்காவது , ஐந்தாவது குச்சிகளில் தொடர்ந்து வீசி அவர்களை வெளியேற்றுகிறார்கள் . பந்தை உள்ளே வீசுவதே இல்லை . ஏனென்றால் உள்ளே வரும் பந்தைக் கூட இந்திய மட்டையாளர்கள் காலை நகர்த்தி ஆப் பக்கமாக அடித்தார்கள் . பந்தை வெளியே வீசினால் அவர்கள் அதை மட்டையால் தொடும் நோக்கில் நகர்ந்து வருவர்கள் எனக் கருதி வைடாக வீசி சற்றே உள்ளே கொண்டு வந்தோ நேராகச் செல்ல வைத்தோ தடுப்பாட வைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்...