Skip to main content

Posts

Showing posts from April, 2023

ஒரு இதயம்

  நான் குடும்ப நல மீது மன்றத்தில் வழக்கில் சிக்கித் தவிக்கும் போது எனக்கு என் மிக மிக நெருங்கின உறவுகளிடம் இருந்து ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை கூட கிடைக்கவில்லை என்று கடந்த பதிவொன்றில் வருந்தினேன் அல்லவா அப்போது ஒரு பெயரை குறிப்பிட மறந்து விட்டேன் - அவர் இரா.முருகவேள். அவர் வக்கீலும் கூட என்பதால் அவரிடமே மணிக்கணக்கில் ஐயங்களை கேட்டு தெளிவுபெறுவேன், புலம்புவேன். மனிதர் அவ்வளவு பொறுமையாக எனக்கு மீண்டும் மீண்டும் விளக்குவார். அது எவ்வளவு சிரமம் என்பதை என்னிடம் இப்போது மற்றவர்கள் வந்து புலம்பும்போது புரிகிறது. நொந்து போயிருக்கும் அந்த சமயத்தில் ஒரு ஆணாக நமக்குத் தேவை பொறுமையாக நாம் சொல்வதைக் கேட்டு தைரியமூட்ட ஒரு ஆள். சட்ட நுணுக்கங்களை சொல்லித் தர முடிந்தால் இன்னும் நல்லது. நாம் குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பது இந்த முதலாவது விசயத்தை. மேலும் அப்போது இவர் நம்மை முழுமையாக ஆதரிக்கிறார், நம்புகிறார் எனும் எண்ணமும் வர வேண்டும். நம்மிடம் காதுகொடுத்துக் கொண்டே உள்ளுக்குள் நம் எதிர்க்கட்சியை ஆதரிக்கிறார் என அவர்களுடைய சொற்கள் காட்டிக் கொடுத்தால் செருப்பால் அடித்ததைப் போலிருக்கும். அதுவும் ந...

என்னவொரு பொல்லாத காலம்!

அருள் துமிலன் பேட்டி நியூஸ் செவன் பேட்டியில் அருள் துமிலன் இங்கு சொல்வது 100% உண்மை என்பதை நான் என் அனுபவத்தில் கண்டுகொண்டேன். ஒருவேளை நானும் வழக்காடு மன்றம் ஏறி இறங்கவில்லை என்றால் இது ஏதோ ஒரு வேடிக்கை என்று இக்கருத்தை கடந்து போயிருப்பேன். ஆனால் எனக்கு கிடைத்த அனுபவம் என்னை காலைப் பற்றி அடித்து வீழ்த்தியது. எனக்கான பணத்தை நான் எப்பாடு பட்டேனும் சம்பாதித்துக் கொள்வேன், நானே பயணிப்பேன், எல்லா வேலைகளையும் செய்யத் தயார், எனக்கு அது குறித்து புகார் இல்லை. நான் எதிர்பார்த்தது ஒரு ஆறுதல், அக்கறை, நாங்கள் கூட இருக்கிறோம் எனும் மன ஆதரவு (moral support). ஆனால் அதை வழங்க எனக்கு என் குடும்ப வட்டத்தில் யாருமே இல்லை. நான் அந்தளவுக்கு தனிமையை இந்த அமைப்பின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட போதே முதன்முதலில் உணர்ந்தேன். ஆணென்ன பெண்ண நான் ஒரு மனிதன் தானே என நினைத்தது தவறு, இந்த சமூகமும் சட்டமும் நம்மை பாலினத்தின் அடிப்படையிலே டீல் செய்கிறது எனும் அடிப்படை உண்மையை புரிந்து கொண்டேன். அடேய் கல்யாணத்தின் போது இத்தனை பேர் வந்தீர்களே, இப்போ எங்க போனீங்க என எனக்குள் கேட்டுக்கேட்டு சோர்ந்து போனேன். நீதிமன்...

'ஊழல் ஒழிப்பு' எனும் அபத்தம்

ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை. நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இருப்பதனால் தான் முறையற்று சம்பாதிக்கும் முறை வருகிறது என்கிறோம். நான் இதை திருப்பி பார்க்கிறேன் - ஊழல் எனும் வழக்கம் இருப்பதே முறையற்று சம்பாதிக்கும் நிலை உள்ளதாலே. ஆக இந்த பொருளாதார கட்டமைப்பிலேயே அடிப்படையான பிழை உள்ளது. அது என்னவென்று அறிய நாம் ஏன் ஒப்பந்த பணிகளை ஒரு அரசே எடுத்து நடத்த முடியாது என யோசிக்க வேண்டும். ஒரே காரணம் ...

சுயாஷ் ஷர்மா

  இந்த ஐ.பில்.எல் பருவத்தின் கண்டுபிடிப்பே சுயாஷ் ஷர்மாதான். இப்போதெல்லாம் வேகமாக பந்தை சுழற்றும் கூக்ளி பந்துவீச்சாளர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். அனேகமாக எல்லா பந்துகளும் உள்ளே வர, லெக்ஸ்பின் பந்து ஒரு வெரைட்டியாக ஆச்சரியப் பந்தாக பயன்படுத்தப்படும். இன்றைய வலதுகை மட்டையாளர்கள் காலை முன்பு போல் நகரத்துவதில்லை என்பதாலும், இடதுகை மட்டையாளர்கள் பந்தை கால்பக்கம் சிக்ஸ் அடிக்க முயலும் அளவுக்கு கவர், எக்டிரா கவருக்கு மேல் அடிப்பதில்லை என்பதாலும் இத்தகைய பந்துவீச்சு எடுபடுகிறது. வலதுகையாளர்கள் பவுல்ட், இடதுகையாளர்கள் பாயிண்ட், கவர் பகுதிகளில் என லெக் ஸ்பின்னரின் கூக்ளிக்கு அவுட் ஆவது மாமூலாகி வருகிறது. சுயாஷும் அவ்வாறுதான் விக்கெட்டுகளை ஐ.பி.எல்லில் எடுக்கிறார். கூடுதலாக, அவரது ரன் அப், உடலின் அசைவுடன் ஒத்தியங்காத கை சுழற்சி , கையை அகலமாக ஒரு நிலைகுலைந்து விழும் பறவை போல அசைத்து பந்தை வெளிப்படுத்துவது ஆகிய காரணங்களால் இவரது கூக்ளிக்கும் லெக் பிரேக்குக்கும் வித்தியாசம் காண்பது சிரமம். இவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை, பந்தை தைரியமாக தூக்கிப் போடும் பாங்கு, அதிரடி ஆட்டம் என்னை வெகுவாக கவர...

ஏன் குடிக்கக் கூடாது?

மது போதை, அதனால் உற்பத்தி திறன், ஆரோக்கியம் அழிகிறது, மக்கள் ஏழைகள் ஆகிறார்கள், குடும்பம் நொடிகிறது என்பதைவிட அடிப்படையான பெரும் சிக்கல் அது நம் பெருங்குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களை அழிக்கிறது என்பதே . வாரத்தில் ஒன்றிரண்டு முறை குடித்தாலே அது நம் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர் அமைப்பை நாசமாக்கி பல நோய்களை ஏற்படுத்தும். ஆரோக்கியம், மகிழ்ச்சி, வலிமை எல்லாம் காலியாகிவிடும். என் முன் மதுப்போத்தலை யாராவது வைத்தால் நான் போதையை, ஈரலை, அதிக கலோரிகளைப் பற்றி கூட கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் "மிதமா குடிச்சா, சாலட் சாப்டா போதும்" என நம் மனம் அதை நியாயப்படுத்தும். நான் என் நுண்கிருமிகள் செத்துவிடுமோ என்றே அதிகம் வருந்துவேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்குள்ள மிகச்சிறந்த நண்பர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், உறவுகள், பாதுகாப்பு சேனை, வழிகாட்டிகள் இந்த நுண்ணியிர்களே. அவற்றை பலிகொடுக்கவா என நினைத்தால் "ஐயய்யோ எவ்வளவு கவனமா சாப்டு அதுங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன், இன்னிக்கு அழிச்சிட்டா திரும்ப வளர்க்க ரெண்டு, மூன்று வாரங்கள் ஆகாதா, அப்படியே மீண்டாலும் இப்போதுள்ளவை பாவம் அல்லவா?" ...

எடை குறைப்பின் தாரக மந்திரம்

  எடை குறைப்பது எப்படி என்று ஒரு உடற்பயிற்சியாளர் அல்லது டயட்டீஷியனிடம் கேட்டுக்கொண்டு போனால் அவர்களில் மரபாளர்கள் பொதுவாக நாம் உடலுக்கு ஒருநாளைக்குரிய எரிசக்தி வழங்குவதற்கான கலோரிகளுக்கு குறைவான கலோரிகளை உட்கொண்டு உடற்பயிற்சி மூலமாக அந்த கலோரிகளிலும் சிறிது குறைத்தால் எடை தானாக குறையும் என்று கூறுவார்கள் . ஆனால் இந்த அறிவுரை வேலை செய்யுமா ? ஓரளவுக்கு மட்டுமே . முதல் ஆறு மாதங்களுக்குள் மூச்சைப் பிடித்து குறைக்கும் சிறிய எடையும் ஒரு கட்டத்தில் நின்றுபோய் டாய்லட் அடைப்பு போல ஆகும் . “ ஏங்க நாங்க குறைவாக சாப்பிட்டு நிறைய பயிற்சி செய்துகொண்டும் தானே இருக்கிறோம் ?” என்று கேட்டால் அவர்கள் “ நீங்க சரியான கட்டுப்பாட்டுடன் இல்லை ” என்று நம் மீதே பழியைப் போடுவார்கள் . ஆனால் பிரச்சினை அவர்களுடைய புரிதலில் உள்ளது . சமகால ஆய்வுகள் மற்றொன்றை சொல்கின்றன - உடம்பில் பிரச்சினைகள் அதிகமாக சாப்பிட்டு , உடலுழைப்பு இல்லாதிருப்பதால் வருவதில்லை . இது சரியெனில் அளந்தளந்து சாப்பிட்டு ஜிம்முக்கு போகாதவர்கள் எப்படி நல...