முதுகுவலி ஒரு விசித்திரமான பிரச்சனை . கை , காலில் காயம் ஏற்பட்டால் ஓய்வு கொடுத்து சரி செய்வதைப் போல முதுகுக்குப் பண்ண முடியாது . மோசமான காயம் என்றால் மாதக்கணக்கில் படுத்துக் கொண்டிருக்கவும் இயலாது . கை , கால் வலியைப் போல் அல்லாது முதுகு வலி கால்களுக்கும் பரவும் . உங்களுடைய எல்லா வேலைகளையும் பரணில் தூக்கிப் போட வைக்கும் . அதனாலே நான் முதுகுவலியை கடுமையாக அஞ்சுகிறேன் . எனக்கு எல்லா தசை , எலும்பு காயங்கள் குறித்தும் பயம் அதிகம் தான் , என்றாலும் முதுகுவலி தான் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் . முதுகுவலி மிக லேசாக தென்பட்டாலும் நான் விடுப்பெடுத்துக் கொண்டு படுத்து ஓய்வெடுப்பேன் . மருத்துவரை உடனடியாகக் காண்பேன் . ஏனென்றால் சனியன் வந்தால் போகாது என அறிவேன் . அதனால் அதை வாசலோடே நிறுத்தி அனுப்பி விடுவது என் வழக்கம் . ஒரு எழுத்தாளனாக நான் என் கை , கண்ணுக்கு அடுத்தபடியாக முதுகையே மிக முக்கியமாக நினைக்கிறேன் . முதுகுவலியின் மற்றொரு மர்ம சுபாவம் நமக்கு வேறு பிரச்சனைகள் உடம்பில் ஏற்பட்டாலும் முதுகுவலி ம...