நான் அறிவினால் பயனில்லை என்று சொல்லவில்லை , அறிவுக்கு பலனுண்டு என அனைவரும் அறிவோம் ( அதை நாம் பயன்படுத்தாமல் இருப்பது வேறு விசயம் ), ஆனால் அது என்ன பயன் என்று நாம் கேட்பது அவசியம் . உ . தா ., அறிதல் இன்பமளிக்கும் செயல் . ஒரு புதிய செய்தியை அறியும் போது கூட நாம் இன்புறுகிறோம் . அதே நேரம் இச்செய்திகள் நமக்கு ஒரு நிபுணத்துவத்தை தருவதுண்டா ? ஒருவர் அரசியல் செய்திகளை தொடர்ந்து சேகரித்து வருகிறார் ; அரசியல் குறித்த தன் அறிவை பெருக்கிக் கொள்கிறார் . ஆனால் அவரை ஒரு அரசியல் நிபுணர் என்று கூற முடியுமா ? சாதிகளின் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு அனுசரித்து யுக்திகளை வகுத்தால் ஒரு கட்சி தேர்தலில் வெல்ல முடியும் எனும் கருதுகோள் அல்லது நம்பிக்கை ஒரு சிந்தனையாளருக்கு இருக்கலாம் . ஆனால் அந்த நம்பிக்கையை யுக்தியாக மாற்றி நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட சூழலில் நேரத்தில் அதற்கு மதிப்புண்டா என அவர் அறிய முடியும் . ஆக அரசியலுக்கு வெளியே இருக்கும் ஒரு அரசியல் அறிஞர் ஒரு போத...