Skip to main content

Posts

Showing posts from December, 2020

இவ்வருடம் என் வாசிப்பு

என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான். Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு முடித்தேன். (அரவிந்தனின் வாசிப்பில் ஏதோ அவரே காதுக்குள் வந்து கதை சொல்வதைப் போல வித்தியாசமான அனுபவம்.) அதற்கு முந்தின நாட்கள் “பசித்த மானிடம்”, “ஆகாயத் தாமரை” ஆகிய நாவல்களை பாதி கேட்டேன். நேற்று ஒரு கட்டுரைக்காக டெலூஸைப் புரட்டியதில் இன்று திடீரென இமானுவல் கேன்ட் பற்றி படிக்க ஆசை வந்து ஒரு ஒலிப்புத்தகத்தை திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படியே தாவிக்கொண்டிருப்பேன்.  புத்தகங்களை...

ரஜினி ஏன் வரவில்லை என்பது குறித்த புளுகுகள்

ரஜினி உடல்நலமின்மையால் அரசியலுக்கு வரவில்லை என்பது சுத்தப் புளுகு என நினைக்கிறேன். அது தெரியும் என்பதாலே பாஜகவினர் புலம்புகிறார்கள். பிரவீன் காந்த் கூட ரஜினியின் அறிவிப்புக்கு ரத்தக்கொதிப்பு காரணமல்ல என்கிறார். ஏன் புளுகு என்பதற்கான சில நடைமுறை நியாயங்களைப் பார்ப்போம்: 1) ஆம், ரஜினி ஒன்றும் புரூஸ் லீ இல்லை. ஆனால் அதே நேரம் இன்றைய நிலையில் அவர் ஊர் ஊராகப் பயணித்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. காணொலி மூலமாக அவ்வப்போது அறிவிப்புகளை விட்டால் போதும். அவர் நீண்ட நேரம் பேசினால் அது அவருக்கே பாதகமாகும் என்பதால் சுருக்கமாக ஒன்றிரண்டு வசனங்களைப் பேசி விட்டு மிச்ச வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சியை நடத்தும் மாஜி பாஜக தலைவர்கள், தமிழருவிகளிடம் விட்டு விடலாம். ஆக, உடல்நிலை காரணமாக விலகுகிறேன் என்பது இந்த இணைய அரசியல் காலத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. 2)  சன் நியூசில் குணசேகரன் கேட்டதைப் போல இந்த உடற்பிரச்சனைகள், கொரோனா ஆபத்து எல்லாம் முன்பே இருந்தது. ஒருநாள் பி.பி எகிறினதும் ஏன் ரஜினி வேலியை எகிறிக் குதித்து ஓட வேண்டும். ஆக இந்த முடிவுக்குப் பின்னால் ஏதோ அரசியல் / பொருளாதாரக...

நேர்மை எனும் பொய்

தமிழருவி மணியன் தான் ஒரு நேர்மையாளர், ஒழுக்கசீலர் அதனால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கிறார். இது உண்மையெனில் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வரும் டீலிங்கில் அவருக்குப் பின்னிருந்த இயக்கியவர்கள் யார் என வெளிப்படையாக சொல்லட்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் பாஜகவின் அர்ஜுனமூர்த்தியும் எப்படி ஒரே கட்சியில் இருவேறு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட முடியும் என விளக்கட்டும். அவர் செய்ய மாட்டார். ஏனென்றால் ரகசியங்களைப் பாதுகாப்பதே அவரைப் போன்ற அரசியல்வாதிகளின் பிரதான லட்சியம். ரகசியத்திற்கும் நேர்மைக்கும் தூரத்து உறவு கூட இல்லை. காந்தி ஒரு உதாரணம். அவர் எதையும் மறைத்ததில்லை, தனது பாலியல் விழைவுகளைக் கூட பிரசுரித்தார். மணியன் போன்றவர்களோ திரைமறைவு வேலைகளை செய்து அதிகாரத்தைப் பிடிப்பது, அது குறித்த உண்மைகளை வெளியே சொல்லாமல் காப்பது என இருக்கிறார். காந்தி இருந்திருந்தால் ஒரு பிய்ந்த நெருப்பை எடுத்து இவரை சாத்தியிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சரி, ‘நேர்மை’ என்பதை மணியன் வேறொரு பொருளில் புரிந்து கொள்கிறார் என வைப்போம் - நிர்வாகத்தில் பொதுவான ஊழல் செய்யாமல் இருப்பது,...

விராத் கோலி எனும் தலைவரின் போதாமைகள்

கோலி ஒரு தலைவராக நிறைய சாதித்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது . அதைக் கொண்டே அவரது குறைகளையும் மதிப்பிட வேண்டும் . எப்படி ? கோலி அணியில் இருந்து தற்காலிகமாக விலகும் போது ரோஹித் / ரஹானே தலைமையில் அதே அணி அதை விட மேலாக ஆடுவதைப் பார்க்கிறோம் . இதை எப்படிப் புரிந்து கொள்வது ? என்னதான் ஒரு அணி அதன் தலைவரின் ஆளுமைப் பண்புகளால் தாக்கம் பெற்றாலும் அணித் தலைவர் அல்ல அணியே முக்கியம் . அதனாலே தலைவர் என்பவர் ஒரு அணியின் சாதனைகளால் மட்டுமே மதிப்பிடப்படுகிறார் (a captain is as good as him team) என ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உள்ளது . அதாவது , அணியின் சாதனைகள் தலைவரைக் கொண்டு மதிப்பிடப் பட வேண்டும் என யாரும் சொல்வதில்லை .   தலைவரின் பொறுப்பு அணிக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவது , வீரர்களுடன் கலந்தாலோசனை செய்து சமயோஜிதமான முடிவுகளை எடுப்பது , சிறப்பாக மனிதவள மேலாண்மை செய்து வீரர்களின் உச்சபட்ச திறமையை வெளிக்கொணர்வது போன்றவையே என மைக் பிரெயர்லி தனது The Art of Captaincy நூலில் சொல்கிறார் . அதாவது நா...