தமிழர் வாழ்வில் ஏன் துக்கம் (கூடவே எளிமையும்) ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது எனக் கேட்டு கார்ல் மார்க்ஸ் ஒரு அழகிய பிராயிடிய அலசலை செய்திருக்கிறார். பொருளாதார உயர்வை, பாதுகாப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சமே இதன் ஆதாரப்புள்ளி என அவர் கருதுகிறார். ஆனால் இது முழுக்க உண்மையா என்றும் தெரியவில்லை. மகத்தான மனிதனின் வீழ்ச்சி மேற்கில் கிரேக்க நாடகங்களில் துன்பியலின் இலக்கணமாக இருந்தது, இதுவே பின்னர் மகத்தான ஒன்றின் வீழ்ச்சி (குடும்பம், அன்பு, கற்பு, நம்பிக்கை) என நவீன சனநாயக மத்திய வர்க்கத்திடம் வந்ததோ? இன்னொரு பக்கம் வீழ்ச்சியின், துக்கத்தின் அழகியல் அது இருமைகளை உடைக்க உதவுகிறது என்பதாகவும் இருக்கலாம் - உ.தா., கைவிட்ட காதலிக்காக கண்ணீர் வடிப்பது. இழந்த குடும்ப மேன்மை, ஆதரவு, அன்புக்காக ஏங்குவது, வெதும்புவது, அதைப் போற்றுவது. "தேவதாஸ்", " பராசக்தி", "மூன்றாம் பிறை" என ஏகப்பட்ட உதாரணங்கள் தமிழ் சினிமாவிலும் "விஷ்ணுபுரம்", " நெடுங்குருதி" போன்று நாவல்களிலும் இத்ற்கு பல உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆங்கில நாவல்களில் "அன்னா கரெனினா...