Skip to main content

Posts

Showing posts from March, 2017

அசோகமித்திரனும் நம் குற்றவுணர்வும்

அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி உரையின் உணர்ச்சிகரமான சாராம்சம் மீது எனக்கு முழு உடன்பாடே. சொல்லப்போனால் அப்பேச்சு என்னை மிகவும் நெகிழ வைத்தது. ஆனால் அப்...

ரசிகன் விமர்சனம் - பொன் மகேஷ் குமார்

வணக்கம் அண்ணா உங்களுடைய ரசிகன் நாவல் வாசித்தேன்.. அருமையாக இருந்தது...வாழ்த்துக்கள்.. நாவல் படித்து முடிக்கும் வரை  என்னை ஏதோ ஒன்று முழுவதும் ஆக்கிரமித்திருந்தது, ப...

காதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம்

எனக்கு 17 வயதிருக்கும் போது நானும் சில இலக்கிய நண்பர்களுமாய் ஒரு அரசியல் கருத்தரங்கில் கலந்து கொள்ள ரயிலில் சென்னை கிளம்பினோம். நண்பர்கள் வயதில் என்னை விட இருபதும் முப்பது வருடங்கள் மூத்தவர்கள். ஊரில் கூட்டங்களிலோ நேரிலோ சந்திக்கையில் அவர்கள் அரசியல், இலக்கியம், சமூகம் அன்றி வேறெதையும் உரையாடியதில்லை. ஆனால் ரயிலில் ஒன்று சேர்ந்ததும் பேச்சு முழுக்க பெண்கள் பற்றியதாக மாறியது. தீவிர விசயங்களை முழுக்க உதறி அவர்கள் தம் பால்யத்துக்கு திரும்பினார்கள். ஒரு மார்க்ஸிய அறிஞர் தான் பார்த்த புளூ பிலிம் பற்றி பேசினார். வேறு சிலர் தம் இளமைக்கால காதலிகள் பற்றி அசை போட்டபடி திளைத்துக் கொண்டிருந்தார்கள். நான் இவர்கள் மத்தியில் தனி ஆளாய் தத்தளித்தேன். சற்று நேரம் கழித்து நானும் என்னை விட பத்து வயது மூத்த ஒரு கவிஞருமாய் எழுந்து ரயிலுக்குள் உலாத்த துவங்கினோம். செகண்ட் கிளாஸ் இருக்கையில் ஒரு வெள்ளைக்கார இளைஞர் அமர்ந்திருப்பது பார்த்து ஆர்வம் கொண்டு அவரிடம் சென்று பேச்சு கொடுத்தோம். வயது இருபதுக்குள் இருக்கும். அவர் இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டிருந்தார். நாங்கள் எடுத்த எடுப்பிலே ”நீங்கள் முதன்முதலில்...

அரசியல் கற்பிதங்கள் 2: இஸ்லாமிய பயங்கரவாத பீதி

இடதுசாரிகளின் போலியான முற்போக்குவாதம், அவர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களின் மதப்பிரச்சாரங்களை கேள்வி கேட்காதது தான் மக்கள் தேர்தல்களில் இடதுசாரிகளை புறக்கணிக்க காரணம் என ஜெயமோகன் சொல்வதுடன் (” முற்போக்கின் தோல்வி ஏன்” ) ஜெயமோகனே இன்னொரு பக்கம் நம்ப மாட்டார். இஸ்லாமியருக்கு உலகை ஆளும் சர்வதேச கனவு உள்ளது, அவர்களால் உலக மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது ஆகிய கருத்துக்களை தினசரி பத்திரிகைகள் படிக்கும் எளிய மக்கள் கூட நம்ப மாட்டார்கள்.  ஜெயமோகன் கூறுவது படியே கிறித்துவத்தில் (இஸ்லாத்தில் போல) வன்முறையால் உலகை வெல்லும் கொள்கை இல்லை தான். ஆனால் அதே கோணத்தில் நோக்கினால் காலனியவாதம் என்ற பெயரில் ஐரோப்பிய கிறித்துவ தேசங்கள் உலகம் முழுக்க போர் தொடுத்து ஆக்கிரமித்ததை எப்படி புரிந்து கொள்வது? இந்த போர்கள் கிறித்துவின் வேதத்தை பரப்பும் நன்னோக்கில் தான் நடந்தன. சிலுவைப் போர்களை எப்படி புரிந்து கொள்வது?

அரசியல் கற்பிதங்கள் 1: இடதுசாரிகளின் தோல்வி

உ.பி தேர்தலில் பா.ஜ.க பெற்ற பெருவெற்றியைப் பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் வலதுசாரி அரசியலின் எழுச்சியை பற்றி அவர் வினவினார். வலதுசாரிகள் ஏன் சமீபமாய் உலகெங்கும் அதிகாரத்தை கைப்பெற்றுகிறார்கள்? மக்கள் முற்போக்கு அரசியலில் நம்பிக்கை இழந்து விட்டார்களா? நான் அவரிடம் கேட்டேன்: அடுத்த அல்லது அதற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தலில் தோற்றால் நீங்கள் வலதுசாரி அரசியல் வீழ்ச்சியுற்றதாய் கூறுவீர்களா? டிரம்ப் போன்ற ஜனாதிபதிகள் முன்பு இருந்ததில்லையா? வலதுசாரிகள் இதற்கு முன் உலகில் கோலோச்சியதில்லையா?

குழந்தையாக மாறுவதும் குழந்தையாக இருப்பதும்

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ரா என பெரும்பாலான நவீன கதையாளர்களின் படைப்புகளில் சுட்டியான, நினைவில் தங்கி நிற்கிற குழந்தைகள் வந்து போகிறார்கள். ஒப்பிடுகையில் தமிழ் நவீன கவிதையில் குழந்தைகள் குறைவே. ஒரு காரணம், நவீன கவிதை தன்னிலையில் நின்று பேசுவது. மேலும் கவிதையில் ஒரு குறிப்பிட்ட பார்வை, பரிமாணம், அதன் குறிப்புத்தன்மை தான் முக்கியம். கதைகளில் ஒன்றோடொன்று முரண்கொண்டு மோதும் பார்வைகள், தரப்புகள் இருக்கும். உதாரணமாய், “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” கதையில் கந்தசாமிப்பிள்ளை, பூமிக்கு வரும் கடவுள் ஆகியோருக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு துடிப்பான, வாழ்க்கையை அதன் முழு வெளிச்சத்தில் காண்கிற தரப்பு கந்தசாமிப்பிள்ளையின் குழந்தையுடையது.

மீம்ஸ் அரசியலும் பொதுமக்களும்: கைய புடிச்சு இழுத்தியா?

வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இன்று மாறி உள்ளது. வடிவேலுவின் சவடால் நாயகனான ”கைப்புள்ள” தொன்மம், பிற நகைச்சுவை காட்சிகள், மக்களுக்கு அரசியல் அரட்டைகளில் பங்கெடுக்கையில் கிடைக்கும் ஒரு திருவிழா மனநிலையின் குதூகலம், அரசியல் மாற்றங்களை வெறும் அபத்தமாய், வேடிக்கை விநோதமாய் காணும் ஆசை, அரசியல் நாயகர்களை தம்மை விட மட்டமானவர்களாய் சித்தரிக்கையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் சில-நிமிட அதிகாரம் ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புது அலையை தோற்றுவித்துள்ளது.

அநாவசியமாக…

மாதப்பத்திரிகை பத்திகளில் நான் விரும்பிப் படிக்கும் ஒன்று நஞ்சுண்டன் உயிர் எழுத்தில் எழுதும் ”செம்மைக் குறிப்பு”. வழக்கமான நம் பத்திகள் சமூக நிகழ்வு எதிர்வினை குறிப்புகள் அல்லது சுயவரலாற்று பதிவுகளாக இருக்கும். (சமூக நிகழ்வு எதிர்வினை பத்திகள் தாம் மிக மிக எளிது; ஒரு வார பேஸ்புக் செய்தியோடையை பத்து நிமிடம் பார்த்தால் உடனே எழுதி விடலாம்.) நஞ்சுண்டன் எழுதுவது நிபுணர் பத்தி எனலாம். நஞ்சுண்டன் காலச்சுவடுக்காய் பிழைதிருத்தம், செம்மைப்படுத்தல் பணிகளை செய்து வருகிறார். அத்துறையில் அவர் மிகத்திறமையானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பத்தியில் தனது செம்மைப்படுத்தல் அனுபவங்களைக் கொண்டு நடைமுறை இலக்கணம் பற்றி எழுதுகிறார். எப்படி எளிதாக துல்லியமாய் தெளிவாய் புரியும்படி எழுதுவது என விளக்குகிறார்.

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா?

அறிவியல் ஆக்கபூர்வமானதா அழிவுநோக்கம் கொண்டதா என மனுஷ்யபுத்திரனுக்கும் பி.ஏ கிருஷ்ணனுக்கும் கடுமையான விவாதம் ஒன்று நடந்து வருகிறது. இரண்டு பாஷை புரியாதவர்கள் இடையிலான பேச்சு போல் இருக்கிறது இது. மனுஷ் சொல்வது பி.ஏ கிருஷ்ணனுக்கு ஒரு போதும் புரியாது. பி.ஏ கிருஷ்ணனின் நிலைப்பாடு மனுஷுக்கு நிச்சயம் அபத்தமாக தோன்றும். ஏன் என்று சொல்கிறேன்.

இந்தியாவுக்கு ஆப்படிக்கும் ஆஸ்திரேலியா

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியை ஏன் இப்படி ஒவ்வொரு மூத்திர சந்தாக கொண்டு போய் குமுறுகிறார்கள், ஏன் இந்த அணி ஒரேநாளில் கைப்புள்ளையாகி விட்டது என நண்பர் முத்து பழனியப்பன் சாட்டில் கேட்டார்: Hi Abilash why are you not writing anything on cricket now I am eagerly waiting for some good article in tamil on recent lapses by indian team நேற்று தமயந்தியின் நூல் வெளியீட்டு கூட்டத்தில் அகரமுதல்வனும் இதே விசயத்தை பற்றித் தான் விசாரித்தார். இருவருக்காகவும் (என்னையே சற்று சமாதானப்படுத்துவதற்காகவும்) ஒரு சின்ன கிரிக்கெட் அலசல்.