Skip to main content

Posts

Showing posts from May, 2010

சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்”: தனிமையும் எந்திர நட்பும்

மே 24 மாலை ஏழு மணிக்கு சுஜாதாவின் ”கடவுள் வந்திருந்தார்” நாடகம் சென்னை கிருஷ்ணகான சபாவில் குருகுலம் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இயக்குனர் மற்றும் மையபாத்திரமாக நடித்தவர் எம்.பி.மூர்த்தி. எம்.பி மூர்த்தி பயங்கர தன்னடக்கவாதி. எந்தளவுக்கு என்றால் தொடர்பு கொண்டு கேட்டபோது நாடகத்தை இயக்கியது தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்தார்; ஒரு மாந்திரிக எதார்த்த பாணியில், மறைந்த பூர்ணம் விஸ்வனாதன் தான் இயக்கினார் என்று தெரிவித்தார். அவர் பூர்ணமின் ஆத்மீக வழிகாட்டலை உத்தேசித்திருக்கக் கூடும். இந்நாடகம் 1975-ஆம் வருடத்தில் இருந்து பூர்ணம் விச்வநாதனின் New Theatre-ஆல் 250 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப் பட்ட ஒன்று.

மாறி விட்ட மண்

ஜெப்ரி சாஸர் தனது ”காண்டர்பெரி டேல்ஸின்” ஆரம்ப வரிகளில் மண்ணை பாலியல் வளமையின் உருவகமாக காட்டுகிறார். இருபதாம் நூற்றாண்டில் நவீன அறிவியலும், முதலாளித்துவமும், பன்னாட்டு நிறுவனங்களும் வேறொரு மண்ணாசை கொண்டு நிலத்தை ஆக்கிரமித்த பின் ”மண்” இன்று மாறி விட்டது. மண்ணோடு சேர்ந்து மண்புழுக்களும் “உழைப்பின் உதாரணங்களாக” இல்லாமல் வேறொன்றாகி விட்டன. “கையில் ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு அவன் நகரத்துக்கு வந்தான்” என்று நீங்கள் நேரடி அர்த்தத்தில் இன்று எழுத முடியாது. அவ்வரி வேறு எத்தனையோ வாசிப்புகளுக்கு இட்டுச் செல்லும். கீழ்வரும் ஞானக்கூத்தனின் நேரடிக் கவிதையில் மண்புழு மிக இயல்பானதொரு குறியீடாக எந்த பிரயத்தனமும் இன்றி மலர்கிறது. இக்கவிதையின் சிறப்புகளில் ஒன்று அது. கடைசி வரியில் “மண்ணின்” என்ற அழுத்தத்தை தவிர்த்து இருக்கலாம் என்று மட்டும் படுகிறது.

தகவல்தொடர்பும், கவனக்குலைவும்: துண்டாகி வரும் மனித சமூகம்

இந்த மாத உயிர்மையில் வெளியாகி உள்ள என் கட்டுரை. கவனக் குலைவு ஒரு நோய் அல்ல சமகால கலாச்சாரத் தன்மை என்று பேசுகிறது. ADD எனப்படும் கவனக்குறைவு கோளாறின் சில அறிகுறிகள் இன்றைய தலைமுறையின் பெரும்பாலான குழந்தைகளின் ஆளுமைக் கூறு ஆகி விட்டது. அவர்களால் ஓரிடத்தில் சில நொடிகள் கூட அமைதியாக இருக்க முடிவதில்லை. கணினி விளையாட்டு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக பெறும் மூளைக்கிளர்ச்சி ஒரு நிரந்தரத் தேவையாகி விட்டது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு வெளிப்புற விளையாட்டுக்கள் அவசியம். ஆனால் விளையாட்டு வெளிகள் ஒருபுறம் சுருங்கி வந்தாலும், இன்றைய குழந்தைகளுக்கு எந்திரங்களுடன் விளையாடுவதுதான் பிரியமானதாக உள்ளது. புலன்களை அதிகப்படியாக தூண்டும் செயல்களே அவர்களுக்கு இயல்பாகப் படுகின்றன. முன்னெப்போதையும் விட இன்றைய தலைமுறை தான் மிகச்சின்ன வயதில் இருந்தே பலவித போதைப் பழக்கங்களை பரிச்சயப்படுத்திக் கொள்கின்றன. இப்படிப்பட்ட மிகை-கிளர்ச்சி தூண்டுதலுக்காய் ஏங்கும், நரம்புகள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட குழந்தைகளால் அமைதியாக அமர்ந்து பள்ளியில் கவனிக்க முடிவதில்லை. சுலபமாக சலிப்படைவதால் நீண்ட புலன் தூண்டுதலற...

காகத்தின் முதல் பாடம் - டெட் ஹியூக்ஸ்

கடவுள் காகத்துக்கு எப்படி பேசுவது என்று கற்றுக் கொடுக்க முயன்றார். ‘அன்பு’, சொல் என்றார் கடவுள். ‘சொல்லு, அன்பு’ காகம் முழித்தது, வெள்ளை சுறா கடலில் பேரோசையுடன் குதித்து கீழ் நோக்கி உருண்டு சென்றது, தன் ஆழத்தை தானே கண்டடைந்தபடி,

அந்த கணம் - டெட் ஹியூக்ஸ்

இந்த வார உயிரோசையில் வெளியாகி உள்ள டெட் ஹியூக்ஸ் கவிதையின் தமிழாக்கம் நீல ஆவி பீறிடும் துப்பாக்கி வாய்முகப்பு சாம்பல் கிண்ணத்தில் இருந்து சிகரெட்டைப் போல உயர்த்தப்பட்ட போது மேலும் பூமியில் மிச்சமுள்ள ஒரே முகம் ஓய்வு கொண்ட, ரொம்பவே தாமதமான கொண்ட கரங்களின் நடுவே உடைந்து கிடந்த போது

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 19

என் தனிப்பட்ட மாயாவி அவர்தான். தனியாய் என்றால், அவர் வீட்டை கடக்காதிருக்க ரொம்பவே சுற்றி போவேன். முதியவர்களுடன் என்றால், அவரது மருந்தகத்தை ஒரு திருட்டுப்பார்வை இட துணிவேன். அட்ரியானா அங்கு கவுன்டருக்கு பின்னால் தையற்பொறியில் தன் ஆயுட் தண்டனையை கழிப்பதை காண்பேன்; படுக்கையறை ஜன்னல் வழி அவர் மூர்க்கமான உந்துதல்களோடு தொங்குபடுக்கையில் ஊஞ்சலாடுவதை பார்ப்பேன்; என்னை மயிர்க்கூர்ச்செறிய வைக்க அதுவே போதுமானதாக இருக்கும்.

நித்யானந்தாவும் FTV மாடலும்

சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன் குடுமி போட்ட ஐயங்காரர் மாமா வாயில் இருந்து காலை வேளையில் அதுவும் ஒரு பக்தி நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கான விளக்கம் வரும் என்று நான் எதிர்பார்க்க இல்லை. மேலும் விளக்குவதற்கு முன் சத்தியபிரமாணம் ஒன்று: நான் விசுவாசியோ அவிசுவாசியோ அல்ல. நித்யானந்தாவின் நடைமுறை ஞானம் மற்றும் லௌகீக சாமர்த்தியத்தின் மீது அபார மரியாதை கொண்டவன்.

இளையராஜா நல்லவரா கெட்டவரா?

சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன். சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் ஷாஜி இளையராஜா குறித்து எழுதின “ நீங்க நல்லவரா கெட்டவரா” கட்டுரை தெ ஹிந்துவுக்கு பிறகு உயிர்மை படிக்கிற மத்தியதர மாமாக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்பட்டது. சிலர் இக்கட்டுரையை எழுதியது சாரு என்று நினைத்து அவரை அடிக்க தேடியதாக தகவல் அடிபட்டது. ஆனால் இளையராஜா ரசிகர்களின் மனதை நோகடித்த ஷாஜி புத்தக விழாவின் போது உயிர்மை அரங்கின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் ஓஷோ தண்ணி அடித்தது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார். இளையராஜா அடியாள் படை “அந்த மலையாளத்தான பார்த்தா சொல்லி வை” என்று ஷாஜியின் காலரைப் பிடித்து உலுக்கி சொல்லிப் போனதாக மிகைப்படுத்த விரும்பாவிட்டாலும் அக்கட்டுரையால் அவர் பரபரப்புக்குரிய நபர் ஆனார் என்பது உண்மை. திண்ணையில் முன்பு இளையராஜாவின் பின்னணி இசையை சாடி கட்டுரை எழுதின ஜெயமோகன் இம்முறை ராஜாவுக்காக பரிந்து ஆதரித்து எழுதினார். ஷாஜி இதற்கு நுண்பேசியில் அளித்த பதிலை ஜெ.மோ தன் தள...

என்கவுண்டர் இன்னும் நடக்கவில்லை

 என்கவுண்டர் செய்யப்படும் தொழில்முறை கொலைகாரர்களுக்கு அது ஏற்கனவே தெரிய வருவதால் ஒரு மரண தண்டனை கைதியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும். சாவை விட அதை எதிர்பார்த்து அச்சத்தில் வாழ்வது இரங்கத்தக்கது.சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நடராஜனின் பிணத்தை வாங்க பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்தார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மட்டும் பார்வையிட்டு விட்டு ஊர் திரும்பினார்கள். ஒருவழியாய் சமாதானமாகி நடஜாஜனின் அப்பா பிணத்தை பெற்று சென்றார். ஒரு குறைந்த பட்ச எதிர்ப்புணர்வாக மட்டுமே இதை பார்க்க முடிகிறது. ஒரு சமூக விரோதிக்கு நீதி விசாரணைக்கு பின்னான மரியாதையான சாவு அவசியமா என்று நீங்கள் கேட்கலாம். பதிலுக்கு இப்படியும் கேட்கலாம்: வெறி நாயை ஏன் கட்டையால் தாக்கி கொல்லக் கூடாது? விவசாய நிலங்களை அழிக்கும் யானைகளை மின்சார வேலி அமைத்து ஏன் சாவடிக்க கூடாது?

காவலர்களை யார் காவல் காப்பது

நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன். ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள். வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது. வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில்...

புதுமையான உவமைகள்

விஜயராகவன் இயக்குனர் கனவுகள் கொண்ட எழுத்தாளர். இயக்குனர் ராமின் கீழ் பணி புரிந்த அனுபவம் உண்டு. உறங்கும் இமைகளும் இனிமையான புன்னகையும் கொண்டவர். சுவாரஸ்ய உரையாடல்காரர். அவரது இணையதளம் கைக்கொண்ட நதி . இத்தளத்தில் சில கவனம் கவரும் குட்டிக் கவிதைகள், சரளமாக எழுதப்பட்ட சிறுகதை, நல்லதொரு சினிமாக் கட்டுரை உள்ளது. விஜயின் கவிதைகள் படிக்கும் போது நவீன கவிதையின் தனித்துவமாக புதுமையான உருவகங்கள் உவமைகளை சுஜாதா நீராலானது புத்தகத்தின் முன்னுரையில் சுட்டிக் காட்டினது நினைவு வருகிறது. இருளுக்குள் பதுங்கும் தீக்குச்சி, வலியின் போது மட்டும் உணரப்படும் உறுப்பு என சற்றும் எதிர்பாராத உவமைகள் வருகின்றன. கீழ்வரும் கவிதைகளை பாருங்கள் 1. இருள்வேண்டும் தீ காதலியுடன் தனித்திருக்க தவித்தலைந்த நாளொன்றில், சிகரெட் நெருப்பிற்காய் திறந்த தீப்பெட்டியில், இணைந்திருந்தன ஈற்றிரண்டு தீக்குச்சிகள். மூடி இருள் தந்து புதரொன்றில் மறைத்து வைத்தேன். 2. மின்சாரமற்ற இரவின் மெழுகுதிரிச்சுடரில் அப்பாவின் புகைப்படம், வலியின்போது மட்டும் உணரும் உடலுறுப்பு ஒன்றைப் போல.

தத்தம் இடங்களுக்கு

வானைக் கலைத்து எழும் பறக்கும் தீநாக்குகள் -- எட்டாவது மொட்டை மாடி பூனை ஜன்னல் திண்டில் ஏறி ஆழம் பார்க்கும் முன் -- ஈர பூமியில் தத்தம் இடங்களுக்கு

ஈழத்தமிழரின் அலிபாபா குகை: kuralweb.com

இணையதளங்கள் குறித்து தாமரை இதழில் நான் எழுதி வரும் தொடரில் இந்த மாதம் kuralweb.com தமிழீழ போராட்டம் மற்றும் அதன் அழிவு குறித்த வரலாற்று, அரசியல், சமூக பதிவுகள் இணையத்தில் ஏராளம். இவ்விசயங்களை பேச Yarl.com, globaltamilnews.com, inioru.com, nerudal.com, kuralweb.com போன்று தனிப்பட்ட இணையதளங்களும், இணையபத்திரிகைகளும் தீவிரமாக, தொடர்ச்சியாக இயங்குகின்றன. ஈழப்போருக்கு புலம் பெயர் தமிழர்கள் பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வெளியில் இருந்து நல்கி ஆதாரமாக விளங்கியது ஒருபுறம் இருக்க இணையத்தில் அவர்கள் எழுப்பி வரும் கருத்தியல் அலசல் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வெளி இணையதமிழுக்கு பெரும் கொடை எனலாம். இணையத்தில் தீவிர தமிழ் எழுத்தாளர்களையும் சில உதிரிகளையும் தவிர பெரும்பாலானவர்கள் நடத்தும் இணையதளங்கள் கேளிக்கை மற்றும் செய்திப்பகிர்வை மட்டுமே நோக்கமாய் கொண்டவை. இணையம் இந்திய தமிழர்களுக்கு ஒரு சமையல்கூடம் மட்டுமே. வாழும் சமூகம் குறித்த தீவிரமான அக்கறை கொண்ட எழுத்துக்கள் அதிகமாய் ஈழத்தமிழர்களின் இணையபக்கங்களிலேயே கிடைக்கின்றன. இணையத்தை அவர்கள் ஒரு ஆய்வுக்கூடமாக பாவிக்கின்றனர். அதற்கான தேவை உள்ளது. ...

T20 உலகக் கோப்பை: இந்தியா சறுக்கியது எங்கே?

இந்தியாவின் 2010 உலகக் கோப்பை பின்னடைவுக்கு அனில் கும்பிளே, அருண் லால் உள்ளிட்ட பல விமர்சகர்களும் தோனியில் திட்டமிடல் மற்றும் அணுகுமுறையையே காரணமென சாடி உள்ளனர். சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் கவாஸ்கர் இந்திய மட்டையாளர்கள் குறைநீள அல்லது பவுன்சர் பந்துகளை சந்திப்பதற்காக மனதளவிலான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

குலசேகரனின் “திரும்பிச் செல்லும் வழி”

திரும்பிச் செல்லும் வழி மே மாத காலச்சுவடில் வெளிவந்துள்ள குலசேகரனின் சிறுகதை. திரும்பிச் செல்லவோ முன்னகரவோ முடியாது காலத்தில் மாட்டிக் கொண்ட ஒரு முதியவரின் அவஸ்தையை பேசுகிறது. இக்கதைக்கு இரு சிறப்பம்சங்கள். ஒன்று அசாதாரண லாவகத்துடன் மனிதனின் உளவியல் தேக்கத்தை பேசியபடி இக்கதை முதுமையின் தனிமை, சிரமங்கள், தன்னிரக்கம், பாலியல் நெருக்கடி, பயம் என பல பரிமாணங்களை திறந்து விட்டபடியே செல்கிறது. அடுத்து இத்தனை செறிவான கதையின் அடுக்குகளை உருவாக்குவதற்கான எந்த பிரயாசையையும் கதைசொல்லி காட்டுவதில்லை. இங்கே தான் மொழிநடையின் சுருக்கமும், கூர்மையும் விசேசமாகிறது. உதாரணமாக கதையின் ஆரம்பத்தில் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து புறநகர்ப் பகுதியில் ஒரு குறுகின அறையில் குடும்பத்துடன் வாழும் முதியவர் சுந்தரேசன் காலையில் விழித்தெழுவதை சொல்லும் இந்த வாக்கியம் பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார் ... பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவரு...

பசியும் பிரார்த்தனையும்

தேவாலய மணி ஒலிப்புக்கு படுத்தபடி பசித்த பூனை நெட்டி முறித்தது கண்மூடியிருக்க தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஓசைகளிடம் முறுக்கி கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில் முடிவில் துழாவி நீந்தி வேதாகாம ஒலி நாடாவுக்கு ஏதோ சொல்லியது கழூத்துமணி ஒருபுறம் விடாமல் கிலுகிலுக்க

அந்நிமிடத்தில் மட்டும்

அந்நிமிடத்தில் மட்டும் நான்கு முறைகள் திரும்பிப் படுத்தது பூனை சுதாரிக்கத் தவறின நிழல்கள் மட்டும் ...

பூனை முன்னே

பூனை கொட்டாவி தப்பியது ஈ கவலை ஏன்? வால் விடாமல் துரத்துகிறது மூடாமல் பார்க்கும் பூனை முன்னே காற்று வெளி

சந்திராவின் விக்கிரமாதித்யன் பேட்டி

சந்திராவின் இணையதளம் காற்றிலாடும் இறகு படித்தேன். அதில் அவர் 2000-இல் விக்கிரமாதித்யனை ஆறாம்திணைக்காக எடுத்த பேட்டியை வெளியிட்டுள்ளார். விக்கி நேரடியான, தயக்கமற்ற, சுவாரஸ்யமான பல கருத்துக்களை முன்வைக்கிறார். கவிதை, எழுத்தாளர்கள் குறித்த அவரது அவதானிப்புகள், மதிப்பீடுகள் தாம் பிரதான கவர்ச்சி. எனக்கு பிடித்த கருத்து தமிழ்க்கவிதை ஏன் ஒன்று போல அல்லது ஒரே பள்ளியை சேர்ந்தது போன்ற தன்மையுடன் உள்ளது என்பதற்கு அவர் சொல்லும் பதில். அப்புறம் சில கேள்விகள் இன்று படிக்கும் போது ஒரு வரலாற்று நகைமுரண் கொண்டு விடுகின்றன. இன்றைய சூழலில் படிக்கையில் சற்று வேடிக்கையாக தோன்றலாம். உதாரணமாக பிரமிள் பெரிய கவிஞன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது? பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம்? ஆனால், தமிழ்க்கவிதை ஏன் அகவயமாக உள்ளது என்ற கேள்வி இன்று உயிருடன் உள்ளது. சமீபமாக அம்ருதாவில் வந்த விக்கிரமாதித்யனின் பேட்டியால் காயடிக்கப்பட்டவர்கள் ஆற்றிக் கொள்ளலாம்.

கண்காணிப்பின் அறிவுரை

நிலா சாய்ந்ததும் கிளைகள் களைத்து சாய்வதும் நாய்களின் ஊளையும் இரவு நேரத்தின் தனித்த காலடிச் சத்தமும் நீ துளைத்து பார்ப்பதும் மிகத் துல்லியமாக தெரிவது உனக்கு புரியவில்லை இருந்தாலும் சொல்கிறேன் இரவு பதினொன்றரைக்கு மொட்டைமாடி மூலையில் சிறுநீர் கழிப்பது வேண்டாம் மழைநீர் வடியும் ஓட்டை உள்ள பாசி படிந்த பகுதியில் அரையடி நீள பாம்பு ஒன்று பளிச்சென்ற கருநீலத்தில் நெளிந்து செல்வது கண்டேன் குத்திட்டு அமர்ந்து நீ பாதங்கள் நகர்த்தும் போது உன் பெருவிரல் அருகே

ஒழுங்கும் முன்னோடியும்

"நடக்கும் போது நாய்க்குட்டி உன்னை முந்துகிறதா எதிர்திசையில் மூர்க்கமாய் இழுத்து நட வில்லென்று கத்தும் -- கண்டுக்காதே வீட்டுக்குள் படுக்கையறை போன்ற பிரத்யேக அறைகளில் நாய்க்குட்டியை விடாதே முக்கியமது அதுக்கு சில இடங்களில் அனுமதி இல்லைண்ணு தெளிவாப் புரியட்டும் உன் சாப்பாட்டில் அதுக்கு பங்கில்லை நீ ஏப்பம் விட்டபின் தான் அதற்கு உணவு ஒழுங்கு மீறி சோபாவை கடித்து கட்டில் காலை பிறாண்டுதா உடனே தனிக்கூட்டில் இட்டு அடை முதல் ஆறு மாதம் கட்டாயம் சங்கிலியில் பயிற்சி எத்தனை சீக்கிரமோ அத்தனை நல்லது இப்போ நம்ம குமார் சார் வீட்டு லேப்ரடார் பாத்ததில்லை மிதியடியில் கம்முணு படித்துக்கிட்டு இன்னா நடந்தாலும் யாரு வந்தாலும் "come" சொல்லாங்காட்டி அசையாதே அது பயிற்சிங்க! Caninie Behavior and Psychology Diploma ஹோல்டர் சார் நான் நல்லா கேளுங்க -- நாய்களுக்குன்னு ஒரு படிநிலை இருக்கு ஒரு நாயை முன்னே போக விட்டீங்க அது தலைவன் நீங்க தொண்டன்னு பொருள் அதுனால தான் திரும்ப திரும்ப சொல்றேன் இதோ இப்போ பண்ணுனீங்க இல்லை, அதைப் போல வீட்டுக்குள்ள நுழையறச்ச நாய்க்குட்டியை முன்னே போக விடாதீங்க முதல் காலடிஉங்களுது .....

எல்.எஸ்.டி, சைலோசிபின், சாரஸ், மெய்ஞானம்: ஒரு விஞ்ஞான மேம்பாலம்.

வரலாறு நெடுக அறிவியல் முதலாளித்துவத்தினோடு கைகோர்த்தே வளர்ந்துள்ளது. மனித அறிவை விகாசிக்கும் உன்னத நோக்கம் கொண்டிருந்தாலும் வணிக வாய்ப்புள்ள சாத்தியப்படுகள் தாம் அறிவியலில் என்றும் ஊக்கம் பெறுகின்றன. இதனாலே எந்த அறிவியல் தேடலையும் மனித குலம் ஒரு கண்ணை சந்தேகத்தில் மூடியபடியே பார்க்கிறது. அறிவியலுக்கு மெய்ஞான தரிசனத்திற்கான மனநிலையை கண்டறிவதில் பேரார்வம் உண்டு. சுருக்கமாக ஒரு உயிரியல் கடவுளை கண்டுபிடிப்பதற்கான இந்த ஆவலை நாம் திருச்சபைக்கும் அறிவியல் உலகுக்குமான பகைமையின் பின்னணியில் காண்பது சுவாரஸ்யமானது. அறுபதுகளிலேயே விஞ்ஞானிகள் சைக்கெடெலிக் மருந்துகள் எனப்படும் போதை மருந்துகளை சரியான அளவில் உட்கொள்ளும் ஒருவர் துறவிகளுக்கு இணையான மெய்ஞான பரவச மனநிலையை அடைய முடியும் என்ற ஒரு ஆய்வு முடிவை அறிவித்து எதிர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தினர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் போதை மருந்துகளின் மருத்துவ பயன் குறித்து எழுதப்பட்டன. குறிப்பாக 1966-இல் வால்டர் பான்கே என்பவர் போதை மருந்துகளால் ஏற்படும் மெய்ஞான திறப்புக்கும், துறவிகளின் ஆன்மீக அனுபவத்துக்கும் உள்ள வேறுபாடுகள் ஒற்றுமைகள் குறித்த...

தனியாய் தனியாய் சூரியன்

மாநகர பூங்காவை போகிற போக்கில் விழுங்கிச் சென்ற பின் சூரியச் சில் தனியாய் தனியாய் பூங்கா இருந்த இடத்தில் சில்லை விடாமல் கொத்தும் காகம் ஊடறுத்து துளைத்த நுண்கதிரும் மறைய உதறிக் கொண்டு நீவியபடி மீண்டும் தனியாய் தனியாய் காகம் கறுப்பாய் கறுப்பாய் ஒரு சில்

கழிப்பறையில்

கழிப்பறையில் அப்பா கையில் கைசூப்பியவாறு தம்பி சிறுநீர் கழிப்பதை பார்க்கும் குழந்தை

மரணமில்லை

துக்கத்தின் தொங்கும் வெளியில் மேஜை மேல் ஒட்டி வைக்க மெழுகுவர்த்தி ஒன்று போதும் ஒவ்வொரு முறையும் என் முகம் துடித்து கலைந்து மிச்ச ஜீவனுடன் உருமாறி உருமாறி நேர்த்தி அடைய மூச்சு விடுவேன் மெழுகுவர்த்தி அணையும் வரை எனக்கு மரணமில்லை

இருமல் மருந்தும் சுந்தர ராமசாமியின் பிம்பமும்

ஒரு நபரைப் பற்றி பலர் சொல்லிக் கேட்டு சிறுக சிறுக ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அலாதியான அனுபவம். பல சமயங்களில் திரிபுகளும், இடைசெருகல்களும் கொண்டிருந்தாலும் இந்த சித்திரம் தரும் கற்பனையின் கிளர்ச்சி அபாரமானது. ஒருவரை நேரில் தெரிந்து கொள்வது இப்படி பெயிண்டை உதறி சித்திரம் தீட்டுவது போல் பல்வேறு வாய்களில் இருந்து பொறுக்கி அகவய சித்திரத்தை உருவாக்குவதில் இருந்து வேறுபட்டது. என்னோடு பணிபுரியும் நண்பர் குமார் சுந்தர ராமசாமியை அவரது வீட்டில் சென்று பார்த்திருக்கிறார். சு.ராவின் “புளியமரத்தின் கதை” நாவலில் தன் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த ஒரு பார்வையற்ற ஆய்வாளருக்கு சு.ராவிடம் பேட்டி காண தேவை இருந்ததால் குமார் உடன் சென்றிருக்கிறார். ஆய்வாளர் ஒரு தீப்பொறி இடதுசாரி. “சக்கிலியர்களை இந்த நாவலில் நீங்கள் எப்படி கேவலப்படுத்தலாம்?” என்று துழாவும் கண்களுடன் கேள்விகளை எறிந்திருக்கிறார். சு.ராவின் முகத்தில் தீப்பிழம்பு எழுந்து வந்ததாய் குமார் சொல்கிறார். அவர் தாடியை வருடியவாறே தன் வேலைக்காரியை அழைக்கிறார். வந்தவரிடம் “இருமல் மருந்து கொண்டுவாம்மா” என்கிறார். ஒரு கோப்பையில் ஊற்றி கொண்டு வருகிறார...

இசை விபத்துக்கள்

திருவனந்தபுரத்தில் வேலை பார்த்து பெங்களூருக்கு நண்பர்களுடன் ரெண்டு நாட்கள் பீரடிக்க வந்துள்ள நண்பன் சபரிநாத் இன்று காலையில் அழைத்து “உன் இசைப்பயிற்சி எல்லாம் எப்படி போகிறது” என்று கேட்க விக்கித்து விட்டேன். காரணம் கேள்வியின் அக்கறையற்ற இலக்கணப் பிழையும் அதனுள்ளோடும் கவித்துவமும். நான் ஆறுவருட இடைவேளைகளில் இரண்டு தடவை இசை கற்க முயன்றேன். முதலில், பதினாறாவது வயதில் எங்களூரில் பிரபலமாக இருந்த பாட்டுவாத்தியார் பட்டம்மாளிடம் சென்றேன். பட்டம்மாள் உருண்டையாய் சிவப்பாய் தோற்றம் கொண்டவர். பட்டம்மாளுக்கு இரண்டு அழகான பெண்கள். ஒரு முஞ்சூறு மகன். மகன் என் வகுப்புத் தோழன். முக்கியமாய் பட்டம்மாளின் கணவன் என் கணக்கு டியூசன் வாத்தியார். கணக்கு வகுப்புகளுக்கு அடிக்கடி மட்டம் போடுவேன். குறிப்பாய் அவர் பரிட்சை வைக்கும் போதெல்லாம். ஆனால் பட்டம்மாளின் இசைவகுப்புக்கு சரியாக சென்று விடுவேன். நான் பாடும் போது வேதாளம் அடிக்கடி முருங்கைமரம் ஏறும் என்றாலும் பட்டம்மாளுக்கு என் இசைஆர்வம் பிடித்திருந்தது. எனக்கு உதவி செய்வதற்கு என்பது போல் கூடப் பாடும் பட்டம்மாளின் மகள் மேலும் மோசமாய் கொசு அடித்தபடியே பாடுவான். ஆனா...

பாவம் வீட்டுமனைவிகள்

வீட்டுமனைவியர் தனி வர்க்கம். என் அம்மா உட்பட அனைத்து வீட்டுமனைவியர் மீதும் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு. இன்று அவர்கள் மீது சற்று பரிதாபம் ஏற்பட்டது. பொழுதுபோக்காய் சமைப்பதுண்டு. எப்போதும் இரவிலே. இன்று முதல் முதலாய் கோடை புழுக்கத்தில் மதிய சமையல் செய்தேன். சில்தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தபடி துண்டால் உடலை ஒற்றியபடி நான் மேலும் கீழும் வெந்து கொண்டிருந்தேன். இப்படியான வேவில் சமைக்கும் போது சின்ன தவறுகள் பெரும் பதற்றங் கொள்ள வைக்கின்றன. இப்படியான கோடை வெக்கையில் எத்தனை நூற்றாண்டுகளாய் பெண்கள் மதிய சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க கடுகு வெடித்து உளுத்தம் பருப்பு அடர்பழுப்பாகியது. தக்காளி நறுக்கவில்லையே என்று திரும்பி அடுத்த யுகத்துக்குள் கால் வைக்கும் போது உ.பருப்பு கருகி விட்டது. ஆனாலும் அப்படியே புளிக்குழம்பு முடித்து, வாழைக்காய் பொரியலும் செய்து வெளிவந்த போது ஒரு முழுநாளின் களைப்பு உடலில். நல்ல வேளை உ.பருப்பு கருகியதை மனைவி இன்னும் கவனிக்கவில்லை. மதிய சமையலில் இருந்து தப்பிக்கவே முடியாதா?

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 18

வாழைப்பழ நிறுவனத்தின் நாட்களில் இந்த மருந்துக்கடை கொடி கட்டி பறந்தது. ஆனால் காலியான இழுப்பறை பெட்டிகளில் உள்ள பழைய புட்டிகள் மற்றும் ஜாடிகளில் இப்போது மீதமிருப்பவை எல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பீங்கான் ஜாடிகளே.

உமேஷ் யாதவ் தேர்வு

விதர்பா அணியின் உமெஷ் யாதவை இந்த வருட ஐ.பி.எல்லில் எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக குறிப்பிட்டிருந்தேன் . இப்போது நடந்து வரும் T20 உலகக் கோப்பைக்காக உமேஷ் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நம் மொழி புரியாத அவருக்கு ஒரு ’ஆனாலும்’ வாழ்த்துக்கள்.

இந்தியா-பாக் T20 & டெஸ்டு கிரிக்கெட்: சறுக்கலின் வெவ்வேறு திசைகள்

20-20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா ஆடிய 20-20 ஆட்டங்களில் அதன் சாதனை அதிருப்திகரமானது. 22 ஆட்டங்களில் 12 வெற்றிகள் இது அனைவரும் அறிந்த சேதி: இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல 20-20 அணி அல்ல. ஒருநாள் ஆட்டத்தில் மட்டையாட்ட வலிமையை நம்பி சமாளிக்கிறோம். ஆனால் அதே பருப்பு 20-20-இல் எளிதில் வேகாது என்பதே உண்மை.

சுஜாதா விருதுகள் கூட்டம்: சில உதிரி குறிப்புகள்

சுஜாதா விருதுகள் கூட்டத்தில் வாஸந்தி, தமிழச்சி, இ.பா, கு.ஞானசம்பந்தம், பார்த்திபன், பாலுமகேந்திரா உள்ளிட்டவர்கள் பேசினாலும் சாரு நிவேதிதா தான் எப்போதும் போல சிறப்பம்சம். அவர் தோன்றியதும் கூட்டத்தில் ஒரு பரபரப்பு தென்பட்டது. காரணம் அவர் ஆரம்பித்த தோரணை. “நான் பொதுவாக இணையத்தில் தான் எழுதுகிறேன். அதனால் (கூட்டத்தினருக்கு இணைய வாசிப்பு பரிச்சயமற்ற பட்சத்தில்)இங்கு வந்திருப்பவர்களுக்கு குறிப்பாக 12 விசயங்களை சொல்லப் போகிறேன்”. ஆனால் ஜெ என்று ஆரம்பத்து ன் என்று முடிபவர் பற்றி அவர் ஏதும் சொல்லாததால் மொத்த பேர் பெருமூச்சும் பெரியதொரு பலூன் போல் இறங்கியது. இதன் பொருள் வெளிப்படையான கண்டனங்களும், உண்மைத் திறப்புகளும் இல்லை அவர் உரையில் இல்லை என்பதல்ல. “நான் அதிகம் பேசப் போவதில்லை. எனக்கு அடுத்து தமிழச்சி மற்றும் கு.ஞானசம்பந்தம் பேச வருகிறார்கள். அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று உங்களுக்கு தெரியும். அப்படியே ஆரம்பித்தார்க்ள் என்றால்” என்று தொடங்கிய சாரு உடனே சுதாரித்து “சும்மா அருவி மாதிரி பிரமாதமாக பேசுவார்கள். அவர்களின் பேச்சுக்கு நான் ரஸிகன்” என்று ‘ஸியை’ இழுத்து முடித்தார். சாரு பேச்சில் ஒரு ...