Skip to main content

Posts

Showing posts from November, 2009

ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக

நண்பனுக்கு – இது ஒரு திறந்த கடிதம். நீ சட்டென்று பேங்களூர் சென்று விட்டது அறிந்தது வருத்தம். மிக சுய நலமான வருத்தம். இங்கே இருந்த போதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை தான். ஆனால் உன் அண்மை இருப்பு ஒரு ஆசுவாசம் தருகிறது. இதோ இப்போதே நான் குறும்பேசியில் பேச முடியலாம். வெளி அத்தனை சுருங்கியதாக இருக்கட்டும். ஆனால் தொலைதொடர்பின் வெளி அத்தனை காத்திரமாக இல்லை. இது இரண்டாம் அல்லது மூன்றாம் முறை. நாம் சந்தித்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தின பின் உடனே வேறு ஊருக்கு சென்று விடுகிறாய். கல்லூரியில், நாம் ஒன்றரை வருடங்கள் சந்தித்து பழகியும் இறுதி கட்டத்தில் தான் நண்பர்கள் ஆனோம். ஒரே விடுதியில் இருந்தும் நாம் ஒரு உரையாடலுக்கு சந்திக்க திட்டமிட்டு அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. உனக்கு முடிந்தும் என் தேர்வுகள் தொடர்ந்தன. எனக்காக சில வாரங்கள் ஊருக்கு போவதை தள்ளிப் போட்டு விடுதியில் காத்திருந்தாய். இறுதியில் நாம் மைதானப் புல்வெளியில் சந்தித்து என்ன உரையாடினோம் என்று நினைவில்லை. பேச்சின் சுவை பொருளில் இல்லைதானே. மற்றொரு முறை தண்ணி அடித்தபடி என்னுடன் பேச விரும்பியதால் பாருக்கு போனோம். இரவு பதினோ...

ஒரு வறண்ட நாளின் வளமையான பக்கங்கள்

இன்று எழுந்து காப்பி பல் துலக்கம் முடிந்து எழுதலாம் என்று அமர்ந்து பிடிக்காமல் இணையம் மேய்ந்து ... இதோ இப்போது இரவு 12:45-க்கு எழுதுகிறேன். காப்பிக்கும் இணையத்துக்கும் இடையே ஒரு கசப்பான ஞாபகம் தொந்தரவு செய்தது. எனது “இந்திய குறுக்குவிதிகளும் ...” கட்டுரை (http://thiruttusavi.blogspot.com/2009/11/blog-post_17.html) பற்றி புலன்விசாரித்து ஒரு நபர் என் நண்பரை அழைத்து அபிலாஷ் தெரியுமா உங்களைப் பற்றி எழுதியுள்ளாரே என்று போட்டுக் கொடுக்க நண்பர் ”என்னைப் பற்றி எழுதியதை என்னிடமே ஏன் சொல்லவில்லை” என்று கோபித்துக் கொண்டார். கட்டுரைகளில் குறிப்பிட்டதற்காக ஏற்கனவே இரண்டு நண்பர்களை இழந்த நான் நிஜமாகவே பயந்து போனேன். பதற்றத்தில் தத்துபித்தென்று உளறினேன். என் முகக்கலவரத்தை பார்த்து, என் உளறலைக் கேட்டு தவறாக ஊகித்த நண்பர் “என்னைப் பற்றி ஏதோ விவகாரமாக சொல்லியுள்ளீர்கள்” என்றார். அவரது ஆளுமை தவறாக பதிவாகி விட்டதோ என்ற கவலையில் நான் கூறிய இந்த முக்கியமான கருத்தை கவனித்தாரா தெரியவில்லை: “ நான் எழுதும் போது பார்த்தது, கேட்டு, படித்த உயிருள்ள உயிரற்ற பொருட்கள் வெறும் தரவுகள் தாம். நான் இத்தரவுகளை பற்றி எழுது...

பூனை மற்றும் நவீன மனிதன்: ஒரு வளர்ப்புப் பிராணியின் ஆளுமை

இதைச் எழுதும் போதும் என்னை முறைக்கும் பூனை தனிப்பட்ட ஆளுமை கொண்டது. அவ்வாளுமை மீது தீர்மானமான நம்பிக்கையும். ஆர்.கே நாரயணின் The Musical Cat எனும் கட்டுரையில் ஒரு கானசபா பூனை ஜி.கே பட்டம்மாளின் பாட்டுக்கு மட்டும் மேடையில் வரும். அது அமர்ந்திருப்பது யாருக்கும் தெரியாது. ரொம்ப நாள் கழித்து நாராயணுக்கு தெரிய வருகிறது. பூனைக்கு இசை விருப்பமா என்பதற்கு எந்த ஆய்வுபூர்வ சான்றும் இல்லை. ஆனால் பூனைக்கு மிக சன்னமான ஒலிகளும் பெரிதாக தெளிவாக கேட்கின்றன. குட்டியாக இருக்கையில் எங்கள் பூனை டீ.வியில் ரஹ்மானுடையது போன்று பிரத்யேக ஒலிகள் தனிப்பட்டு துல்லியமாக ஒலிக்கும் இசையை கவனமாக கேட்பதை பார்த்து ஒருவேளை இசை பயிலுமோ என்று சங்கடத்துடன் வியந்திருக்கிறேன். ஆனால் பூனையின் ஆர்வம் இசை ஒழுங்கில் அல்ல தனித்தனி இசை எழுப்பல்களை கவனிப்பதிலே உள்ளது. சும்மா ஒரு வேடிக்கைக்கு உங்கள் முகத்தின் கண், வாய் மற்றும் மூக்கின் அளவை காதுடன் ஒப்பிடுங்கள். ஏறத்தாழ சமம். ஆனால் பூனையின் காதுகள் அதன் (திறவாத) வாயை விட பெரிது; திசைக்கு ஏற்றாற்போல் உயர்த்த திருப்ப கூர்மைப்படுத்தி கேட்க உகந்தது. பூனை காதை உயர்த்தினால் தீவிர/விழிப்பா...

இந்திய குறுக்குவிதிகளும், பனிக்கரடியும்

என் ஐந்து வருட கல்லூரிப் படிப்பின் மிக முக்கியமான வகுப்பு ஐந்தாவது வருட இறுதியில் நிகழ்ந்தது. மார்க்ஸிய-காந்திய-கிறுத்துவரும், மிதிவண்டியில் மட்டுமே எங்கும் பயணிக்கும் பேராசியர் செரியன் குரியன் அதை சொன்னார்: ”படித்து முடித்து என்னதான் கிழித்தாலும் உங்களுக்கு எல்லாம் பரிந்துரை இருந்தால் தான் வேலை கிடைக்கும். தொடர்புகள் இல்லாவதர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்”. அவரது கனத்த குரலுடன் குழல்விளக்கு விட்டில் போட்டி போட ஒவ்வொரு வார்த்தையாக திரும்பத் திரும்ப யோசித்தேன். என் அம்மாவுக்கு வேலை பற்றி இருந்த மற்றொரு அபத்தமான கவலை நினைவு வந்தது. பதின்பருவத்தில் சமூக ஊனம் என் கல்விக்கு பெரும் தடையாக இருந்தது. நான் எதிர்காலத்தில் வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் புசிக்க வேண்டி வரும்; வீட்டை எத்தனைக்கு வாடகைக்கு விடலாம் என்றெல்லாம் அம்மா அப்பாவிடம் உள்ளார்ந்த கவலையுடன் விசாரித்துக் கொண்டிருந்ததை ஒருநாள் ஒட்டுக் கேட்டேன். படிப்பதற்கான உந்துதல் அப்போதுதான் ஏற்பட்டது. ஐந்து வருடங்கள் ஒவ்வொரு செமிஸ்டரிலும் முதலாவதாக வந்தேன். வேலை கிடைத்து விடும் என்ற உறுதியில் நெஞ்சு உயர்த்திய போதுதான் செரியன் இப்படி சொன்னது. ஐ...

மோகமுள்: இந்த உடல் என்ன பாபம் செய்தது?

மோகமுள்ளின் நோக்கம் என்ன? பாபு என்கிற முதிரா இளைஞன் யமுனா என்கிற மத்திய வயது பெண் மீதான மோகத்தை எப்படி அடைகிறான் என்பதை சொல்வதா? இல்லை. நாவல் பாபுவின் மனக்கோந்தளிப்புகளை பற்றியது; அவனது கொந்தளிப்புகளால் நகர்த்தப்படுகிறது. தஸ்தாவஸ்கியின் ரஸ்கல்னிக்கோ போன்ற நாயகர்களும் சதா கோபாவேசங்கள், தடுமாற்றங்கள் மற்றும் கொந்தளிப்புகளில் வாழ்பவர்கள் தாம். ஆனால் அவை லட்சிய, அறம்சார் ஆவேசங்கள். பாபுவினுடையவை பெரும்பாலும் தனிமனித விருப்பு சார்ந்த கொந்தளிப்புகள். இந்நிலைகளின் பின்னால் ஒரு ஆத்மீகத் தேடல் உள்ளது; அதற்கு பிறகு வருகிறேன். பாபு இந்த தீவிர அலைகழிப்புகளைக் கடந்து எப்படி சமநிலையை (சமாதியை?) அடைகிறான் என்பதே நாவலின் கரு. ஒருவித coming-of-age பாணி கதை. பாபுவின் லட்சிய நாயகர்களான ராஜம், அப்பா வைத்தி, இசை குரு ரங்கண்ணா ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் \ தளங்களில் சமநிலை அடைந்தவர்கள்; நாவல் ஆரம்பத்தில் இருந்தே அவ்வாறே இருக்கிறார்கள். பாபுவுக்கு இவர்களே முன்மாதிரிகள். இதனால் தானோ, இவர்கள் மாற்றமின்றி சாலைகளில் சிலையாக பெருமளவில் நிற்கும் தலைவர்கள் மாதிரி சற்றே தட்டையாக உள்ளனர். யமுனாவும் தங்கம்மாவும் பாபு ...

ஆஸ்திரேலியா: ஒரு சூதாடியின் நிழல்

இந்தியாவுக்கு எதிராக 29-10-09 அன்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பரிதாபமாக தோற்றது. ஓட்டங்களில் வித்தியாசத்தை உத்தேசிக்கவில்லை. மூன்றரை மணி நேர மட்டையாட்டத்தில் எந்த ஒரு கட்டத்திலும் அவ்வணி பின் தங்கியே இருந்தது. குறிப்பாக குழப்பமான திட்டமிடலுடன் ஆஸியினர் களமிறங்கினர். எப்போதுமே தன்முனைப்பால் ஆட்டத்தை திசை திருப்பியுள்ள ஆஸியினர் 29-அன்று வெற்றிக்கு ஒரு புறக்காரணியை நம்பி இருந்தனர்: பனித் துளிகள். அவர்களின் திட்டம் இதுவாக இருந்தது: முதல் இருபது ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் கொடுக்காமல் நிதானமாக ஆடுவோம். மைதானத்தில் பனித்துளிகள் கொட்ட ஆரம்பித்ததும் இந்திய சுழலர்கள் கையிலிருந்து பந்து வழுவும். புல்டாசும், குறை உயரப் பந்துமாக வீசி சொதப்புவார்கள்; எளிதாக பத்து ஓட்டங்கள் கூட ஒரு ஓவரில் தொடர்ந்து அடிக்கலாம். ஆனால் நாக்பூரில் சில இரவுகளில் பனி குறைவாகவே இருக்கும் என்று அங்கு ஆடி பரிச்சயமுள்ள தோனி குறிப்பிட்டிருந்தார். அன்று பனிப்பொழிவு மிதமாகவே இருந்தது. இந்திய சுழலர்கள் ஹர்பஜனும் யுவ்ராஜும் சிறப்பாக பந்து வீசத் துவங்கிய போது ஆஸி மட்டையாளர்கள் முகம் இருண்டது; நெற்றியில் கவலைக் கோடுகள். கண்...

மூரியல் ஸ்பார்க் கவிதைகள்

லண்டன் சுற்றுலா கென்சிங்டன் பூங்கா முதிய பெண்கள் மற்றும் துலிப் பூக்கள், மாதிரிப் படகுகள் கையடக்கக் குழந்தைகள், நடமாட்ட அம்மாக்கள், கிளிகள் போல் தூரத்து பேருந்துகள் தனியான ஆண்கள் மழை அங்கிகளை கைமேல் கொண்டு – எங்கே போகிறார்கள்? தற்போது கோடையின் மூட்டை முடிச்சுக்கள் மற்றும் வண்ணத் தெளிப்பு ஒரு வருடத்துக்கு முன் விதைத்தது போல் வெளிவந்து விட்டபடியால். அந்நியள் வியந்தது என்ன? லண்டனில் தனியாய் காபி உறிஞ்சியபடி இவள் எங்கிருந்து வருகிறாள்? ஷூக்கள், கூந்தல் – வங்கியில் அவளுக்கு ஏதுமிருப்பதாக எனக்கு படவில்லை. அவளுக்கு ஆண்துணை உண்டா, எனில் அவன் எங்கே, பத்தரை மணிக்கு லண்டனில் புத்தகம் படித்தபடி ஏன் அமர்ந்து இருக்கிறாள்? அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது ஆண்துணை இன்றி, வேலையற்று, மளிகைக் கடையில் நாயுடன் அவசரமாக ஓடாமல் தனித்து இருக்கும் படியாக. உறிஞ்சிடும் படியாக. ஓய்வு நாள் மூன்றே கால் மணிக்கு கடிகாரம் நின்று போனது; மேலும் கைகளை அகலமாக விரித்து கொட்டாவி விட்டு அங்கே இருந்தது, மேலும் அதை திரும்ப ஓட வைக்கவில்லை யாரும், ஞாயிற்றுக்கிழமை ஆகையால், நாங்கள் வேலையில் மூழ்கி இருந்தமையா...

ஜார்ஜ் சிர்ட்டெஷ் கவிதைகள்: 1

மழைப்பருவ இறகுகள் (விண்டஹெம் அபே) எத்தனை பிரகாசமாக சூரியன் ஒரு கணம் நீட்டி நடக்கிறது கண்ணாடி ஊடே பிறகு ஒளிகிறது அது சற்று நேரமே வருடின அதே இடைபாதைகளின் ஆழ் உள்ளிடங்களில் பதுங்குகிறது அப்படி இதயம் நின்று திரும்ப ஆரம்பிக்கிறது அது நின்றதை கவனிக்காமல், ஒரு ஊஞ்சல் கைவிடப்பட்டு, ஒரு விழி பாதி சிமிட்டலில் தொலைந்து, கரும்பறவைகள் முழுவேகத்தில், தூசுகளின் ஊடே நீந்திட மறப்பது அம்மா சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின் முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை. உன் அம்மாவின் வெம்மை. அவள் முலைகள் மென்மையின் தீவிரம் பற்றின மனப்பதிவு, பிறகு அவளது கைமுட்டின் எலும்புகள். கன்னங்கள். கழுத்து. அவள் தலையின் அசைவு, இடுப்பின் முன்பின் ஆட்டம். அவள் முலைக்கண்களின் மிருதுவான கூம்புகள். அவள் தொப்புளின் புதிர்த்தன்மை. வெப்பம் குளிர்மை, ஈரம், உலர்வு. பால் மணங்களும், பிரமோன்களும். எங்கு நீ ஆரம்பிப்பாய்? பாதங்களை விரல்கள் கிச்சுகிச்சு மூட்டுவதிலா உதடுகள் தோலில் படுவதிலா? உயரத் தூக்கப்பட்டு பத்திரமானதற்கு பின் சுழற்றப்படுவதிலா? தெருவின...