Skip to main content

Posts

Showing posts from October, 2024

பேராசிரியர் அழகரசன் - மென்மையான வெளிச்சம் - ஆர். அபிலாஷ்

எனக்கு மிகப்பிடித்தமான ஹெமிங்வேயின் சிறுகதை ஒன்றுண்டு - “ஒரு சுத்தமான நன்கு ஒளியூட்டப்பட்ட அறை”. அதில் அந்த சுத்தமான ஒளிநிறைந்த அறை மனிதப் பிரக்ஞையின் / இருத்தலின் உருவகமாக இருக்கும். ஆனால் நான் ஒளியைப்பற்றி ஒரு சிறுகதை எழுதியபோது அதில் ஒளியென்பதை சதா நம்மைக் கண்காணிக்கும், ஒடுக்கும் விழிகளின் பார்வையாகவே நான் உருவகித்தேன். ஒளியென்பது நமது அகவிழியென்றே என் படைப்பு மனம் சிந்திக்கிறது என அதை எழுதியபோது புரிந்துகொண்டேன். பேராசிரியர் அழகரசனைப் பற்றி நினைக்கையில் அவர் ஒரு மென்மையான வெளிச்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது. துன்புறுத்தாத, தன் இடமே இதுவென்று காட்டிக்கொள்ளாத வெளிச்சம். தன்னைக்கொண்டு பிறரது உலகை திறந்துகாட்டத் தெரிந்த வெளிச்சம். எனக்கு ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ஒரு உண்மை உறைத்தது - என் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு நான் மொழிபெயர்ப்பாளர், காப்பி எடிட்டர், தொழில்நுட்ப எழுத்தர் என பல பணிகளைச் செய்து வந்தேன். என்னுடைய இலக்கு எழுத்தில் செம்மையடைவது மட்டுமேயென்று இருந்ததால் நான் தொழில்ரீதியாக வேலையில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. தொழில் வாழ்க்கை எனக்குப் பெரும் துன்பமாக இருந்தது. உரு...

சந்ததிப் பெருக்கமும் இன்மையும் (பகுதி 2) - ஆர். அபிலாஷ்

பெண் முன்னேற்றமும் குழந்தைகளும் எண்ணிக்கைப் பெருக்கத்தால் செல்வம் குறைகிறது என செல்வந்தர்கள் நினைப்பதில்லை, குறைவாக பிள்ளை பெற்றால் நிறைவாக வாழலாம் என்பது பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களின் வர்க்க உளவியல் மட்டுமே. பாலின பேதம் குறித்த விவாதங்களில் குழந்தைகளை பெண்களின் வளர்ச்சிக்கான தடையாக, அவர்களுடைய முதுகில் ஏற்றப்பட்ட பாரமாக பார்க்கிறார்கள். மில்லர் சொல்வது என்னவென்றால் வளர்ந்த நாடுகளில் பெண்கள் குறைவாக குழந்தை பெற்றுக் கொள்வதால் வளமாக இருக்கிறார்கள் என்பது ஒரு உத்தேச மயக்க வழு (intentional fallacy) மட்டுமே. வளர்ந்த நாடுகளில் செல்வம் பெருகுவதன் விளைவே மத்திய வர்க்கத்தினர் அங்கு குழந்தைகள் இல்லாமல் வாழ்வது அல்லது குறைவாக எண்ணிக்கையில் பெற்றுக் கொள்வது நிகழ்கிறது என்றும் இதைப் பார்க்க முடியும். வெளிநாடுகளிலும் இங்கும் பணக்கார பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப் பார்க்கையில் நம்மால் இதன் பின்னுள்ள நவதாராளவாத பொருளாதார சதித்திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். பாலின பேதத்தை ஏற்படுத்துவது பொருளாதார ஏற்றத்தாழ்வே அன்றி குடும்பத்தைப் போன்ற சமூக அமைப்புகள் அல்ல. ஏனென...

சந்ததிப் பெருக்கமும் இன்மையும் (பகுதி 1) - ஆர். அபிலாஷ்

கேரளாவை சேர்ந்த என்னுடைய மாணவர் ஒருவர் அரசு உதவி பெறும் கல்லூரியில் நல்ல சம்பளத்தில் உதவிப் பேராசிரியர். அவரை நான் சந்தித்த போது தான் புதிதாகக் கட்டிய பிரம்மாண்டமான வீட்டை தன் போனில் காட்டினார். அப்போது வகுப்பில் உள்ள பிற மாணவர்கள் சிரித்தனர். காரணம் அவரது வீட்டின் முன் எடுத்ததாக அவர் காட்டிய குடும்ப புகைப்படத்தில் அவருடன் மூன்று சிறு குழந்தைகள் ஏற்கனவே இருந்தார்கள். இது நடந்து அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் இரு குழந்தைகள் வந்துவிட்டனர். இப்போது அவரது குடும்பமென்பது அவர், அவரது மனைவி, ஐந்து குழந்தைகள். இப்போது அவர் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறார். அவரது பெற்றோர் பக்கத்தில் அவர்களது குடும்ப வீட்டில் இருப்பதால் அவ்வப்போது குழந்தைகளில் சிலரை அழைத்துப் போய் வைத்துக் கொள்கின்றன. எப்போதுமே குழந்தைகளின் கும்மாள கலவரம் தான். அவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக விடுதி அறையில் ஒரு மாதம் தங்கும் நிலை வந்தது. இதைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது எனக்கு ஒரு விசயம் தெளிவாகியது - குழந்தைப்பேறின் எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெகுவாக குறைந்ததற்கு உள்ள சில காரணங்களில் இடப்பற்றாக்குறையும் முக்க...

தமிழ் சமூகமும் சினிமாவும்

நான் ஒரு போக்கை கவனிக்கிறேன் - ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது ஐயோ அம்மா என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். அதுவே ஓடிடியில் வந்ததும் பார்த்துவிட்டு அமைதியாக நிறைகுறைகளை கவனித்து அந்தளவுக்கு ஒண்ணும் நல்லா இல்ல என்று எழுதுகிறார்கள். காதலிக்கும்போது ஒருவிதமாகவும் கல்யாணத்திற்குப் பிறகு இன்னொருவிதமாகவும் ஒரு பெண் தெரிவதைப்போல இது இருக்கிறது. பக்கத்தில் வந்ததும் அடச்சே என்றாகிறது. எனக்குத் தெரிந்து விதிவிலக்காக இது நடக்காதது "சார்ப்பட்டா பரம்பரைக்கு' மட்டும்தான். இந்த திரையரங்க வெளியீட்டின்போது ரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள், வைரல் ஆகிறவர்கள், விழுந்துவிழுந்து பேட்டியெடுக்கும் விகடன், கலாட்டா குழுவினர் ஓடிடியை பொருட்படுத்தாதது காரணமா? பெருங்கூட்டத்தின் பகுதியாக இருந்து பார்க்கும் எழுச்சி, பரவசம் டிவியில் பக்கத்தில் பார்க்கும்போது வராததா? சினிமா நிறைய பொருட்செலவுடன் எடுக்கப்பட்டு மேளதாளத்துடம் வெளியிடப்படும்போது பார்வையாளருக்கும் ரசிகருக்கும் உண்டாகும் ஒருவித குற்றவுணர்வின் வெளிப்பாடு அதன் கடைசிகட்ட விற்பனைக் கண்ணியாக டிவி இருப்பதால் வராமல் போகிறதா? எப்படி திருவிழா என்பது வெறும் சத்த...

வீழ்ச்சி

ஒரு சிந்தனையாளர், கோட்பாட்டாளர், அறிவுஜீவியின் வீழ்ச்சி அவர் தன் சயசிந்தனைக்காகவோ வளர்ச்சிக்காகவோ அன்றி செயல்படாமல் ஒரு இயக்கம், அமைப்பின் பிறழ்வுகளை நியாயப்படுத்த வேலை செய்யும்போது, அதற்கான செயல்திட்டமாக தன் சிந்தனைகளைப் போலியாக பயன்படுத்தும்போது ஆரம்பிக்கிறது. இதைவிட மோசமான வீழ்ச்சி அவர் பெரும் பணமும் புகழும் படைத்த மனிதர்களை தன் பிரதிநிதி எனக் கருதி அவர்களுடைய ஆபாசங்களை மூடிமறைக்க, பாராட்ட தன் அறிவிஜீவி பிம்பத்தைப் பயன்படுத்தும்போது நடக்கிறது. அவர் மெல்ல மெல்ல தன்னை இழந்து ஒரு மாய அதிகார வலையின் கைப்பாவையாகிறார். அவரது குரலுக்கும் மனசாட்சிக்கும் தொடர்பறுந்து போகிறது. முக்கியமாக அவர் அப்பழுக்கற்றவராக தன்னையும் தான் சார்ந்தவர்களையும் காட்டிக்கொள்ளவும், தான் பாதிக்கப்பட்டவர் என நிரூபிக்கவும் போராடத் தொடங்குவார். ஊழல்வாதிகளின், சீரழிவாளர்களின் அறிவுலக அடியாளாக மாறுவார். தமிழில் பெரும்பாலும் இது சினிமா, அரசியல் தளங்களில் நடக்கிறது. சினிமாவிலோ அரசியலிலோ நேரடியாகப் பங்கேற்பதை, அதனால் அத்துறைகளை ஆதரிப்பதை நான் கூறவில்லை. வெளியில் இருந்து இத்துறைகளின் ஊழல்களை, சமரசங்களைக் கூவிக்கூவி ஆதரிக்க ...

ஆண்-பெண் விஷச்சூழல்

ஆண்களைப் போல மாறும் விருப்பமும் அதனாலே ஆண்களிடத்து பொறாமை, பதற்றம், அச்சம், ஈர்ப்பும்  கொள்வதுமே இன்றைய நவீனப் பெண் மனம். பிராயிடிய மொழியில் சொல்வதானால் அப்பாவை வெறுத்துக் கொன்று மேலேற முடியாமல் அவர் குறித்த விருப்பமாக அதை மாற்றிக்கொள்கிறார்கள். எல்லா ஆண்களையும் அதிகாரக் குறியீடாகக் கண்டு போலச் செய்வது எப்படியெனவும், தமது தனித்துவத்தை தக்க வைப்பது எப்படியென்றும் தத்தளிக்கிறார்கள் என லக்கானிய மொழியிலும் இதை விளக்கலாம். பெண்கள் பரஸ்பரம் பொறாமைகொண்டு மோதுவதும் ஒற்றுமையின்றி இருப்பதும் தப்பில்லை. அது ஒருவிதத்தில் தம்மைக் கொண்டாட, கவனித்துப் பாதுகாக்க உதவுகிறது. கூட்டுசேர்ந்து சுயத்தையும் சுய-பராமரிப்பையும் இழப்பதைவிட அது மேலானது. நீங்கள் எழுத்தாளர்களை, கலைஞர்களை, சிந்தனையாளர்களைப் பாருங்கள் அவர்களால் கூட்டத்தோடு கோவிந்தா போடமுடியாது. ஆனால் அப்படி இருந்தால் அதிகாரமும் பொருளாதார முன்னேற்றமும் சமூகப்பிரதிநுத்துவமும் கிடைக்காது. வறுமையில் தவிக்க நேரிடும். இருந்தாலும் ஆன்ம-ரீதியாக பெண்நிலையே மேலானது. ஆண்நிலை தமக்கும் பிறரும் விரோதமானது, ஆதிக்கமானது, சுரண்டலை சாத்தியப்படுத்துவது, சுருக்கமாக ...

லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டும் வேட்கை

அக்டோபர்  6, 2024 இல் மெரீனாவில் நடந்த வானூர்த்திக் கண்காட்சிக்காக 13 லட்சம் பேர்கள் எல்லா சிரமங்களையும் தாண்டி வந்தார்கள் , நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்று , 4 பேர்கள் உயிரிழந்தார்கள் என்றால் அதற்கு சமூகவலைதளத்தில் கிடைத்த வைரல் கவனமும் அது விடுமுறை தினமென்பதும் மட்டுமல்ல காரணம் - இது முற்றதிகார சமூகங்களில் தோன்றும் ஒரு பெருவிழைவாகும் : நவதாராளவாதத்தின் , நகரமயமாக்கலில் , பணப்பெருக்கத்தின் , அதனால் தோன்றும் தீவிர ஏற்றத்தாழ்வுகளின் , தனிமனிதவாதத்தின் , போதாமைகள் , தனிமை , பதற்றத்தின் விளைவு என்னவென்றால் மக்கள் பெருங்கூட்டமாகத் திரள்வதற்கு ஒரு வாய்ப்புக்காக காத்துக்கிடப்பார்கள் . ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலே மக்கள் கடலெனப் பெருகி வந்துவிடுவார்கள் . பொழுதுபோக்குத் தளங்களில் பெருங்கூட்டம் பெருகுவதைப் பாருங்கள் . காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்காவிடில் திரண்டவர்களைக் கலைக்கவே முடியாது ; விடியவிடிய ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டாடத் தலைப்படுவார்கள் . ஏதோ ஒரு உணர்ச்சி உந்துததால் மக்கள் போய்த் திரண்டால் அதன் பிரதான அர...