Skip to main content

Posts

Showing posts from July, 2024

முன்னோடி

  ஜெயமோகனின் ஆளுமையைப் பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் தன் காலத்துக்கு வெகு முன்னதாகவே இப்போதை இளைஞர்களிடம் காணப்படும் மிகையான தன்மதிப்பையும், தன்னை மையமாக்கி உலகைப் பார்க்கும் போக்கையும் கொண்டிருந்தார் என்று சொன்னேன். எழுத்தாளரின் ஆளுமையே அவரது எழுத்தின் ஆதாரம், அவரது ஆளுமை அவனது கற்பனையின் புறவடிவம், அது இந்த உலகின் ஆதார இயக்கவிசை என ஜெயமோகன் நம்புகிறார். இது வெர்ட்ஸ்வொர்த்தும் கால்ரிட்ஜும் தாரோவும் ஏற்கனவே 19ஆம் நூற்றாண்டில் சொன்னதுதான். இந்த சிந்தனைக் கோணம் நவீனத்துவ இயக்கத்தில் கடுமையாக மறுக்கப்பட்டது. நவீனத்துவத்தில் எழுத்தாளர் என்பவர் மானுடப் பாய்ச்சலின் மிகச்சிறிய துளியாக மாறினார். நவீனத்துவ யுகத்தில் மட்டுமல்ல பொதுவாக பௌத்த சமண துறவற (தன்மறுப்பு) மரபின் தாக்கம் இன்னுமுள்ள இந்தியாவின் பெரும்பான்மை சமூகம் கூட ஒரு தனிமனிதன் பணிவும், விட்டுக்கொடுக்கிற பாங்கும் கொண்டவர்களையே கொண்டாடுகிறது. நமது சினிமா நட்சத்திரங்கள் கூட இப்படித்தான் தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இன்றைய பின்நவீன உலகில் எழுத்தாளர் தன்னை ஒரு பேராளுமையாக கருதுவதற்கு, தன்னுடைய மையத்...

எம்.கே மணி

கடந்த சில நாட்களாக எம் . கே மணியைப் பற்றி எழுதப்படும் பல உணர்ச்சிகரமான அஞ்சலிக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன் . எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனதில் இருந்து பகிரப்படும் வருத்தமும் மரியாதையும் . ஒருவருடைய மதிப்பையும் அன்பையும் பெற நாம் அவர்களை முதலில் சமமாக மதிக்க வேண்டும் , அவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி நேரத்தை கொடுக்க வேண்டும் . நேரம் மதிப்பற்றது , நாம் அதை வீணடிப்போமே அன்றி அடுத்தவருக்கு கொடுக்க மாட்டோம் . எம் . கே மணி இதையெல்லாம் செய்திருக்கிறார் , முன்தீர்மானம் இன்றி , மதிப்பிடாமல் , ஒதுக்காமல் பழகியிருக்கிறார் . அதனால் தான் இத்தனை பேர்களை அவரது இழப்பு சஞ்சலப்படுத்தியிருக்கிறது . இயக்குநர் மிஷ்கின் மணியின் கடைசிக் கால மருத்துவ செலவுகளைப் பார்த்திருக்கிறார் எனத் தெரிய வந்த போது மிகவும் நெகிழ்ந்தேன் . மிஷ்கின் இதே போல தனக்கு தெரியாதவர்களுக்காகவும் யோசிக்காமல் உதவ தலைப்படக் கூடியவர் தான் . இம்மாதிரி நல்ல விசயங்களை ஒரு இழப்பின் போதுதான் தெரிந்துகொள்கிறோம் , அது துரதிஷ்டமானது என்றாலும் வாழ்க்கை மீது ...