Skip to main content

Posts

Showing posts from March, 2024

லவ்வர்

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் காட்சியைப் பார்த்ததும் ரொம்ப கிரிஞ்சாக 96 போல இருக்கும் போல என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் மணிகண்டன் பாத்திரத்தின் நிஜ சொரூபத்தைக் காட்டியதும் செமையான படம் என உட்கார்ந்து விட்டேன். காதலை மட்டுமல்ல எல்லா உறவுகளையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளும், தன்னுடைய போதாமைகளை உறவின் ஆறுதலில் கடப்பதற்காக முயன்று ஏமாற்றும் கொள்ளும் ஆணின் அகச்சித்திரம் நன்றாக இருந்தது. கூடவே அவனுக்கு ஈடுகொடுத்து தடுமாறும், துன்பப்படும், பிறகு விட்டுவிடலாம் என நினைக்கும் போதும் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கருதி குழப்பி மேலும் காயப்படுத்தும், காயப்படும் அந்த பெண்ணின் பாத்திரம். தெளிவாக யோசித்து இரு பாத்திரங்களையும் உருவாக்கி அவர்களுக்காக மேலும் மேலும் கதையை சிக்கலாக்கிக் கொண்டு திரும்ப வர முடியாத அவல நிலைக்கு அவர்களை நகர்த்தியதும் பிடித்திருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்கள், கெர்ள்களின் உலகில் இப்படியான நிஜ மனிதர்களின் பார்க்கவே கிடைப்பதில்லை. அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கும் போது நாயகன் மெதுவாக தூங்கி எழுந்து வர வேலைக்கா...

கதாநாயகரின் வீழ்ச்சி

  கேள்வி : ஹாய் அபிலாஷ் , கதாநாயகரின் வீழ்ச்சி (tragic fall) எனப்படுவது என்ன ? அதற்கு உதாரணங்கள் தர முடியுமா ? பதில் : முதலில் இது ஒரு நல்ல கேள்வி . என் வாழ்த்துகள் . மகாபாரதக் கதை முழுக்கவே மகத்தான வீழ்ச்சிகள் பற்றின கதைகள் தாம் உள்ளன . பாரதக் கதையின் துவக்கம் கௌரவர்களின் வீழ்ச்சி எனில் முடிவு பாண்டவர்களின் வீழ்ச்சி . வீழ்ச்சியைப் பற்றி மட்டும் பேசினால் அது துன்பியல் கதை . கடைசி நொடியில் சுதாரித்து நாயகன் தப்பித்து மீள்வதையும் பாடம் கற்றுக்கொள்வதையும் சொன்னால் அது இன்பியல் . பாட்டி வடை சுட்ட கதையில் காகம் திருடுவது வரை துன்பியல் . சூழ்ச்சிக்காரனை எப்படி ஏமாற்றி பாடம் கற்பிப்பது என நரி கற்றுக் கொடுக்கும் போது அது இன்பியல் ஆகிறது . நாம் படித்ததில் மறக்க விரும்பாதது துன்பியல் , அதிகம் படிக்க விரும்புவது இன்பியல் . துன்பியல் நாடகத்தின் அடிப்படையே ஒரு மகத்தான மனிதனின் வீழ்ச்சி என்பது அவருடைய நம்பிக்கை . ஏன் மகத்தானவனின் வீழ்ச்சி என்றால் ‘ சல்லிப்பயல்களின்’ வீழ்ச்சியைப் பற்றி யாருக்கும் பெரிய அக்...