ஒரு எழுத்தாளராக நான் எழுத்துக்குள் இன்னின்ன விசயங்களை கையாள்பவன், இன்னின்ன உணர்வுத்தளங்களில், கருத்து நிலைகளில் இந்த உலகுடன் உரையாடுபவன் என்று என்னைப் பற்றி சொல்வேன். அதுவே ஒரு எழுத்தாளராக எனது தன்னிலை. ஒரு எழுத்தாளர் ஆகும் போது நான் முற்றிலும் இன்னொரு மனிதன் ஆகிறேன். ஒரு நாவலாசிரியராக அதற்கும் மாறான ஒரு தன்னிலையை நான் பூணுகிறேன். இதில் நான் கையாள்கிற பிரச்சினைகள், கொந்தளிப்புகள், தவிப்புகள், அல்லாட்டங்கள், ஊசலாட்டங்களை நான் நடைமுறையிலோ அல்லது ஒரு அபுனைவு எழுத்தாளனாகவோ நான் எதிர்கொள்வதில்லை. வேறெங்கும் வேறெப்போதும் சாத்தியமில்லாத மன சஞ்சாரங்களை ஒரு நாவலுக்குள்ளே நாம் காண்கிறேன். அது நம்மை விகாசிக்க வைக்கிறது. நம் ஈகோவைத் தளர்த்துகிறது. கருணையுடன் மற்றமையை நோக்க வைக்கிறது. ஒரு ஆன்மீகப் பயிற்சியாகிறது. அதனாலே நாவலைப் படைப்பது ஒப்பற்ற சாதனையாகிறது. நாவல் வகுப்பில் கலந்து கொள்ள 9790929153