Skip to main content

Posts

Showing posts from February, 2023

நீதியாளர்களின் முதலைக் கண்ணீர்

இலை எடுப்பவருக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் இந்த பிரச்சினை மறைந்துவிடும். நீதி பேதி விவாதமெல்லாம் எழாது. நாம் தொடர்ந்து நீதி, அறம் பற்றி அங்கலாய்ப்பதெல்லாம் பணத்தை செலவு பண்ணாமல் தப்பிப்பதற்குத் தான் எனத் தோன்றுகிறது. குப்பை அள்ளுகிறவர், மலம் அள்ளுகிறவர்களுக்கு மாதம் 50000-70000 சம்பளம் கொடுத்துப் பாருங்கள் - உடனே அப்பணி எந்திரமயமாகி விடும். ஊழியர்கள் காரில் வந்திறங்கி அவ்வேலையை செய்தால் அது ஒரு மதிப்பான தொழிலாக மாறும். இதுவே ஓட்டல் பணியாளர்களுக்கும் பொருந்தும். பெண்கள் நாங்கள் அடுப்படியில் கிடந்து அல்லாட வேண்டுமா என பெண்ணியவாதிகள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் உயர்வான சம்பளத்துக்கு வேலைக்குப் போகத் தொடங்கியதும் என்னயிற்று? சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டார்கள் அல்லது மூன்று வேளைகளும் வெளியே சாப்பிடுகிறார்கள். இன்று பெருக்கக் கூட. தெரியாத ஒரு தலைமுறை தோன்றியுள்ளது. இந்த மாற்றம் நீதியுணர்வால் அல்ல பண வரவாலே நடந்தது. ஆனால் பணத்திற்கு வழியில்லை அல்லது செலவழிக்க மனமில்லாத போது ஆண்களும் பெண்களும் பெண்ணியம் பேசி அப்பிரச்சினையை கடந்து போனார்கள்.  ஒரு முதலீட்டிய சமூகத்தில் நீதி, அ...

ஒரு பரிசு

  நீண்ட காலத்துக்குப் பிறகு - 7 ஆண்டுகள் - நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். ஒரு அட்டகாசமான தலைப்பு: மனைவியின் அம்மா குடும்ப காரியங்களில் தேவையில்லாமல் தலையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள். நான் பேசியது வெகுவாகப் பிடித்துப் போய் எனக்கு சிறப்புப் பரிசு கொடுத்தார்கள். நீயா நானாவில் மிக அரிதாகத் தான் சிறப்பு விருந்தினருக்கு பரிசளிப்பார்கள். நேற்று அப்படி ஒரு அதிசயம் எனக்கு நடந்தது.  அப்படி என்னதான் பேசினேன் என்றால் நிகழ்ச்சி வரும் போது பாருங்கள்!  

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது…

  நேற்று குடும்பநல நீதிமன்றத்தில் வைத்து ஒரு வித்தியாசமான ஜோடியைப் பார்த்தேன் - இருவரும் எனக்கு எதிரே தான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். அந்த ஆண் இடைவிடாமல் தன் பெரிய வாயைத் திறந்து பேசிக்கொண்டே இருக்க அவள் அந்த வாயை ரசித்துக் கொண்டு ஒரு மங்காத புன்னகையுடன், ஒளிரும் கண்களுடன், அவற்றில் பொங்கும் காதலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்படி ஒரு அபாரமான கெமிஸ்டிரி இருவருக்கும். ஆனால் அவர்களுடைய முக அமைப்பின் ஒற்றுமையைக் கண்டு இருவரும் அண்ணன் தங்கையோ என்று கூட சந்தேகம் எழாமல் இல்லை. மதிய இடைவேளையின் போதும் இருவரும் “பாய்ஸ்” படத்து “வாய்தா வாய்தாம்பாங்களே ஜட்ஜய்யா அது இதுதானா” என்பது போல சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர் இங்கு திரும்பினால் அவளும் இங்கேயே திரும்புகிறாள், அவள் அங்கு திரும்பினால் அவரும் அங்கேயே திரும்புகிறார். இவள் நின்றால் அவர் நிற்கிறார், இவள் நடந்தால் இவரும் கூடவே உரசிக்கொண்டு நடக்கிறார். சாப்பிடும் இடத்தில் அரை அங்குல இடைவெளிதான் இருவருக்கும் எப்போதும். சாப்பாட்டையும் இவர் ஊட்ட அவள் சாப்பிடுகிறாள், நடுநடுவே அவள் சாப்பாட்டை முழுங்கும் இடைவெளியி...

"ரோஸ்மேரியின் குழந்தை"

சில புத்தகங்களை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்து மாய்வோம். ஐரா லெவினின் Rosemary's Baby அப்படியாக நேற்றுமுதல் என்னை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்தது. (சிலர் ரொமான் பொலான்ஸ்கி இதைத் தழுவி எடுத்த அந்த அபாரமான படத்தை பார்த்திருப்பீர்கள்.) இதை காத்திக் புனைவு (Gothic), மர்மக் கதை, உளவியல் டிராமா என எப்படி வேண்டுமெனிலும் வகைப்படுத்தலாம். என்னை வெகுவாக கவர்ந்தது எவ்வளவு சாமர்த்தியமாக நுணுக்கமாக இந்நாவலை ஐரா லெவின் எழுதியிருக்கிறார் என்பது. ஸ்டீபன் கிங் இவரை "மர்ம நாவல்களின் ஸ்விஸ் கைக்கடிகார வல்லுநர்" என்று சிறப்பித்தது சும்மா அல்ல. லெவின் வசனங்களை எழுதும் பாணி சிலாகிக்கத்தக்கது. வசனங்களை ஒரு தகவலையோ உணர்ச்சியையோ எண்ணத்தையோ வெளிப்படுத்துவதற்காக மட்டுமன்றி ஒரு மறைமுகப் பொருள் கொண்ட விளையாட்டுத்தனம் மிக்கவையாக எழுதுவார். நாம் சுஜாதாவிடம் வசனங்களில் சுட்டித்தனத்தை மட்டும் பார்ப்போம், ஆனால் லெவின் நகைமுரணை, மறைபொருளையும் வசனங்களில் உணர்த்துவார். இவர் இதைத்தான் சொல்கிறாரா என நம்மை ஒரு கணம் சந்திக்க வைப்பார். இந்த நகைமுரண் வசனங்களில் மட்டுமல்ல கதைகூறலிலும் முக்கிய ...

நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் …

  50, 60 களில் பிறந்து அரசியல் சமூகம் பற்றி சதா அறம் , முறம் , சமூகம் , நீதி , சமூக நீதி , நீதி சமூகம் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் நான் காணும் ஒரு விசித்திர பண்பு இவர்கள் சமூகத்துக்காக இவ்வளவு கண்ணீர் சிந்துவார்களே , சரி இவர்கள் தாயுமானவர் போல இருப்பார்கள் என எண்ணி நீங்கள் நேரடியாக இவர்களிடம் போய் பேசினால் துளி அன்பைக் கூட உங்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது . எனில்   இவர்கள் நா தழுக்க பேசுகிற அந்த சமூகம் , மற்றமை என்பது யார் ? இவர்களோ நாமோ ஒருவரும் அறியாத புதிர் இது .  என்னுடைய சிறு ஊகம் என்னவென்றால் இவர்கள் தம் தலைமுறையின் ஒரு அடிப்படையான முரண்பாட்டில் உழல்பவர்கள் . அது என்னவென பார்க்குமுன்னர் நாம் நமது வரலாற்றைப் பார்க்க வேண்டும் .   வெள்ளையர்கள் இங்கு வருமுன் இங்கு பிரசித்தமாக இருந்தது பக்தி மரபு . பக்தி என்றால் உலகம் முழுக்க ஒன்று தான் - மனிதன் தான் அல்லாத ஒன்றிடம் - மற்றமையிடம் - தன்னை ஒப்புக்கொடுத்து தன்னைக் ‘ கடக்காமல் கடந்து ’ போவது ( என்னவொர...

ஆஸ்திரேலியாவின் ஹராகிரி

இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியாவுக்கு வென்று இந்தியாவுக்கு எதிராக தொடரை சமன் செய்ய ஒரு சிறந்த வாய்ப்பிருந்தது. இரண்டாவது நாள் அடித்திருந்த 63 ரன்களுடன் ஒரு 150 ரன்கள் கூட அடித்திருந்தால் போதும், அந்த இலக்கை அடைய இந்தியா தத்தளித்திருக்கும். அவர்களின் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஐம்பது சொச்சம் ரன்களுக்கு அந்த விக்கெட்டுகளை மொத்தமாக பறிகொடுத்து வெற்றிவாய்ப்பை தொலைத்தனர். (ஷ்ரேயாஸ் ஐயர் சொன்னதைப் போல) நாளின் முதல் ஒருமணி நேரத்தில் பெரோஷா கோடா மைதானத்தில் ஆடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது, அப்போது சற்று பொறுத்தாடினாலே போதும், மிச்ச செஷன்களில் அடித்தாடுவது சற்று சுலபமாகும். ஆஸ்திரேலியா டிராவெஸ் ஹெட்டை இழந்த பின்னர் ஸ்மித், லேபுஷேன் ஜோடியின் ஆட்டத்தின் போதும் அதை சரியாகவே செய்தது. ஆனால் அஷ்வின் ஓவர் தெ விக்கெட் வந்து ஒரு பந்தை லெங்க்தில் சற்று வேகமாக வீசிய போது அது அங்குள்ள இளகலான மண்ணில் பட்டு எகிறி திரும்பியது. லேபுஷேன் அத்துடன் ஸ்வீப் செய்வதை நிறுத்தி தடுத்தாடத் தொடங்கினார். ஸ்மித்தின் பதற்றமானார். ஏனென்றால் அவர்கள் அதுவரை அவ்வப்போது தடுப்பது, இறங்கி அடிப்பது, ஸ்வீப...

ஒரு துயரக் கதை

  இந்திரன் பேஸ்புக்கில் எழுதிய பதிவைப் படிக்கையில் பொன் விஜயன் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிகிறது. இந்நாட்டில் பணமில்லாமல் அரூபமான லட்சியங்களுக்காக வாழவே கூடாது. லௌகீகமே நிஜம். அதற்காகவே வாழ வேண்டும். அதற்கும் அப்பால் நேரமிருந்தால் எழுதலாம், படிக்கலாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ள கணிசமானவர்கள் பண்பில்லாதவர்கள், அறிவை விட சாப்பாடும் பொழுதுபோக்குமே பிரதானம் என நம்புகிறவர்கள். இந்தியர்கள் அடிப்படையில் நாகரிகமடையாத பாதி-மிருகங்கள். படித்தவர்கள் தான் அதிக மிருமாக வாழ்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் 1% மக்களே புத்தகம் படிப்பவர்கள். பளபளப்பாக ஆடையணிந்த, காரிலும் பைக்கிலும் பயணிக்கிற காட்டுமிராண்டிகள் இந்திய மக்கள். இவர்கள் மத்தியிலே நாம் வாழ்கிறோம். அவர்கள் பணமில்லாதவர்களை கரப்பான்பூச்சியைப் போன்றே பார்ப்பார்கள். சாரு சொல்வதைப் போல இது ஒரு சீரழிந்த சமூகம். இங்கு சுயநலமாக வாழ்ந்தால் உங்களை பெரிய ஆளாக நினைத்து அன்பு பாராட்டுவார்கள். பணமும் இருந்து தியாகமும் செய்தால் உங்களைக் கடவுளாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றுக்கும் - அன்பு, கருணை, சமூக மரியாதை - அடிப்படை இங்கு பணம் தான். இவர்கள்...