Skip to main content

Posts

Showing posts from March, 2018

ரஜினி: நீ நடந்தால் நடை அழகு! -

கடந்த ஐம்பதாண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை பொறுத்த மட்டில் இரு தெளிவான பாணிகள் வெற்றி கண்டுள்ளன . ஒன்று ஆரவாரமான நாடகீயமான நடிப்பு . நமது கூத்து மற்றும் மேடை நாடக மரபில் இருந்து முகிழ்த்த சிவாஜி துவங்கி , அவர் பாணியில் கமல்ஹாசன் , பின் அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் , விக்ரம் , சூர்யா ஆகியோர் இத்தடத்தில் வருகிறார்கள் . மலையாளத்தில் மம்முட்டி இதே மரபை சேர்ந்தவர் . ( இப்பாணி நடிகர்களுக்கு உடம்பை வருத்தி மாறுவேடங்களில் தோன்றவும் புதுப்புது விதங்களில் பேசவும் விருப்பம் இருக்கும் .)

100 Incidents of Being in Love - Manushya Puthiran

After I have been in love with you, a hundred things have changed or a hundred incidents are taking place in my life. 1.       I am always Recounting a lie 2.       I am awaiting something,   even in sleep 3.       Whenever I go for shopping I anticipate that there could be something You may like 4.       There is always Something I need to hide 5.       To board a bus an auto or a taxi I am always waiting, anxiously 6.       I wonder how even I could Blush 7.       I trash that which was Once very precious to me 8.       I obsess over Betrayals, always 9.       I fondle my private parts As if it were A stranger’s hand 10.   I wilt In times of rain

நான் தவிப்பதே இல்லை - பித்யுத் பூஷன் ஜேனா

நீ இன்றி நான் தவிப்பதே இல்லை. ஆனால் இந்நாட்களில், சமையலறையில் சோறும் மீன்கறியும் நான் சமைக்கையில் யாரும் என் அருகே நிற்பதில்லை! ஒரு குறிப்பிட்ட விதமாய் நான் வெங்காயம் நறுக்கும் போது யாரும் என்னை பரிகசிப்பதில்லை; பாதி பொரித்துக் கொண்டிருக்கையில் தட்டில் இருந்து மீன் துண்டுகளை யாரும் திருடுவதில்லை! யாருமே இல்லை! (தமிழில் ஆர். அபிலாஷ்)

ஸ்ரீதேவி: இந்திய சினிமாவின் குழந்தைப் பெண்

“ ஸ்ரீதேவி மறைந்தது மறைந்தது போலவே இல்லை . ஒரு அழகான பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு சென்று கதவை சாத்திக் கொண்டது போல இருக்கிறது ” என ஒரு ஸ்ரீதேவி ரசிகர் என்னிடம் சொன்னார் . நான் கவனித்த வரையில் பல ரசிகர்களின் மனநிலையும் இப்படித் தான் இருக்கிறது . ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் இன்னொரு பக்கம் இது ஒரு பொய் செய்தி என நினைக்கிறார்கள் . ஒரு நடிகர் வயதாகி நம் கண்முன்னே உருமாறி சட்டென மறையும் போது அவரைப் பற்றி நினைவில் மீட்டி சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கிறது . நடிப்பு வாழ்வின் உச்சத்தில் ஒருவர் சட்டென மாய்ந்தால் அப்போது நம்மால அரற்றி அழ முடியும் . ஆனால் ஸ்ரீதேவியோ இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக உருவாகி நீண்ட காலம் அரியணையை அலங்கரித்த பின் தானாகவே அதை விட்டகன்று மனைவியாக தாயாக எளிய வாழ்க்கை வாழ்ந்து ஒருநாள் English Vinglish (2011) எனும் படம் மூலமாக மீண்டும் திரையுலகில் கோலோச்ச திரும்பினார் . அவரது திரைவாழ்வின் இந்த இறுதிக் கட்டம் கூட வெகு அட்டகாசமாய் ஆர்ப்பாட்டமாய் பெரும் வெற்றியாய் அமைய இதை இறுதி கட்டம் என நினைக்கவே நமக்குத் தோன்றவில்லை .

மற்றொரு கடிதம்!

Writer, Forget the fore-shadowing. This aint abt gautham menon’s structural skills. For the first time, I find YOU sexist in ur narration ! If Maya had not entered Anbu selvans life, nothing would have happened to poor anbu selvan. Maybe, But… மாயா அன்பு செல்வனை சந்திக்காமல் போயிருந்தால், இந்நேரம்  Guitar  வாசித்துக்கொண்டு, பாண்டிக்கு பஸ் பிடித்து போய், Beach house  இல்,  Solitary aaga  பாட்டு பாடி விட்டு, மெட்ராஸ் வந்து தேங்காய் வாங்கி, சமைத்து சாப்பிட்டு, பிள்ளைகளுக்கு கணக்கு பாடம் சொல்லி குடுத்து விட்டு, ஏதோ ஒரு நண்பனுடன் இரவு சினிமா காட்சிக்கு விகல்பமில்லாமல் சென்று இருப்பாள்.   Alas,  நார்மலாக வாழ முடியாமல் இறந்து போயிருக்க மாட்டாள்  !

ஒரு கடிதம்

Good Morning Abilash I am a regular visitor to your website. I think, your review for the movie 'Life of Pi' brought me to your website first time. Since then, I have been reading closely everything you write. I am amazed at your ability to observe advanced & deep psychological facts portrayed in various movies. I live in California. Like you, at some point, I was also deeply drawn towards Bruce Lee and is still drawn at some level. Since I like the way you treat your subjects so well, I am eager to read your book on Bruce Lee. Can you please guide me to the right place where I can get it?    Thanks & Regards Renga Rajan வணக்கம் ரங்கராஜன் உங்கள் வாசிப்புக்கும் அன்புக்கும் நன்றி.  புரூஸ் லீ நூலை வாங்குவதற்கான தொடர்பு கண்ணிகளை கீழே தந்துள்ளேன். வாசித்து விட்டு எழுதுங்கள்: https://www.nhm.in/shop/1000000014506.html https://www.panuval.com/bruce-lee-sandaiyidaatha-sandai-veeran- 2650345 http://marinabooks.com/detailed?id=3%202...

உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (2)

    Foreshadowing தொழில்நுட்பம் இலக்கிய புனைவிலும்   சினிமாவிலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது . ஒரு வாசகன் / பார்வையாளனுக்கு ஒரு முக்கியமான வெளிப்பாட்டை செய்யும் முன் அவனை அதற்கு அவனது ஆழ்மனதில் நுணுக்கமாய் தயாரிப்பதே foreshadowing ( கவிதையில் இதை பெரும்பாலும் தொனி மூலம் செய்கிறோம் ).   முதலில் ஒரு சினிமா உதாரணம் . ” காக்க காக்க ” - தன் காதலியை மீட்க வில்லனைக் கொல்லும் நாயகன் , அம்மோதலின் வழி தன் பலவீனங்களை உணரும் ( ராமாயணக் ) கதை இது . ராமாயணத்தில் சீதை கடத்தப்பட்ட பின்பு தான் ராமனின் பலவீனங்கள் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு அவனது இமேஜ் களங்கப்படுகிறது . வாலியைக் கொன்று அவன் நல்லறத்தை மீறுகிறான் . சீதையின் அற ஒழுக்கத்தை கேள்வி கேட்டு அவளை திரும்ப அனுப்பி ஒரு ஆண்மகனாய் மேலும் பலவீனப்படுகிறான் . இப்படி களங்கப்பட்ட ராமனாகத் தான் அன்புச்செல்வன் இப்படத்தில் ( துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட , முதலிரவு அறையில் இருந்து வெளியே எறியப்பட்டு ) முதல் காட்சியில் அறிமுகமாகிறான் .

லக்கான் பற்றி ஒரு நூல்

கிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் ( PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர் , ஆல்பர்ட் காமு , பாப்லோ நெருடா , ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.

உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (1)

  குற்றப்புனைவு படங்கள் மற்றும் நாவல்களால் தூண்டப்பட்டு நடந்த குற்றங்கள் பற்றி தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன . சமீபமாய் இந்தியாவில் நடக்கும் கொலைக்குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பாய் சொல்வது என்னவென்றால் குற்றவாளிகள் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாய் செய்து தப்பிப்பது என்பது பற்றி சினிமாவில் கற்றுக் கொள்கிறார்கள் என்று .   நான் சமீபத்தைய நாளிதழில் ஒரு செய்தி படித்தேன் . ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை அது . இன்போஸிஸில் வேலை பார்த்த பெங்களூரை சேர்ந்த சதீஷ் குமார் குப்தா தன் மனைவி பிரியங்காவை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார் . கொலைக்கான காரணம் சற்று அபத்தமானது ; அற்பமானது . பிரியங்கா தன் மாமனார் மற்றும் மாமியாரை வெறுத்துள்ளார் . அவர்கள் தன் வீட்டுக்கு வரக் கூடாது என கண்டிப்பாய் கணவன் சதீஷுடம் கூறி விட்டார் . சதீஷ் தன் பெற்றோரிடம் மிதமிஞ்சிய பாசம் கொண்டவர் . அவர்களின் படம் கொண்ட லாக்கெட்டை மாலையில் கோர்த்து ...