Skip to main content

Posts

Showing posts from March, 2014

“சாதி இன்று”: புது பரிமாணங்களும் விவாதங்களும்

சாதி தவறானது, அநீதியானது என்கிற சின்ன குத்தல் நமக்குள் உள்ளது. அதனாலே இங்கு சாதி குறித்து வெளிப்படையாக பேச தயங்குகிறோம். ஆனால் நம் நண்பர்களும் சுற்றமும் அலுவலக சகமனிதர்களும் என்ன சாதி என்பதை உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனென்றால் சாதி என்றால் அதிகாரம் எனபதில் தெளிவாக இருக்கிறோம். அதாவது சாதியின் ஏற்றத்தாழ்வு வேண்டாம், ஆனால் சாதியின் அடையாளம் வேண்டும் என இன்றைய தலைமுறை நினைக்கிறோம். அதற்கான இனவரைவியல் நியாயங்களைக் கூட அளிக்கிறோம். ஆக ரெண்டுமே சாதியின் அச்சாணிகள்: அதிகாரம் மற்றும் அடையாளம். சாதியை வெறுமனே சமத்துவம் மற்றும் நீதியுணர்வு சம்மந்தப்பட்ட பிரச்சனையாக பார்க்க கூடாது என கோருகிறது “சாதி இனி” எனும் புத்தகம்.

நாயைத் துரத்தும் முயல்

நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது. மனைவி கறிக்கடையில் வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி விட்டது.

மோடியும் இந்தியர்களும்: நமக்கு அறத்தில் நம்பிக்கை இல்லையா?

இன்றைய ஹிந்துவில் “ தீமையின் சகஜத்தன்மை ” ( The Banality of Evil ) என்றொரு முக்கிய கட்டுரை வந்துள்ளது. எவ்வளவு எளிதாக நம்மால் இனப்படுகொலைகள், குற்றங்களை மன்னித்து மோடி போன்றவர்களை முன்னேற்றத்தின் பெயரில் ஏற்க முடிகிறது என இக்கட்டுரை வியக்கிறது. இன்றைய காலத்தின் மிகப்பெரிய துரதிஷ்டம் நமக்கு இப்படியெல்லாம் மோடியை நியாயப்படுத்த தோன்றுவது தான். அதேவேளை இது வெறும் ஒரு காலகட்டத்தின் பிரச்சனை என நாம் சுருக்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். மோடியின் குற்றங்களை மட்டுமல்ல ராஜீவ் காந்தியின் கீழ் சீக்கியர்களை காங்கிரசார் எண்பதுகளின் இறுதியில் வேட்டையாடி கொன்றதையும் தான் எளிதில் மன்னித்து கடந்து விட்டோமே என கட்டுரையாளர் நிஸிம் கேட்கிறார். இங்கிருந்து நாம் விவாத்த்தை துவக்க வேண்டும். ஒருவேளை இந்தியர்களுக்கு அடிப்படையில் நீதி, அறம் மீதெல்லாம் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லையோ? நாம் அறம் என இன்று நினைப்பது ஒரு ஐரோப்பிய அளவுகோலோ?

உண்மை சொல்லலாமா?

 “பொன் முட்டை இடுந்ந தாறாவில்” பொய் கூறும் பூசாரி (அமிர்தாவில் வெளியான “அறிந்ததும் அறியாததும்” பத்தியின் இறுதிக் கட்டுரை) நம்முடைய கணிசமான அழுத்தங்களும் வலியும் குற்றவுணர்வில் இருந்து வருகின்றன . குற்றவுணர்வு உண்மை வெளிப்படுத்தல் பற்றின கற்பிதத்தில் இருந்து வருகிறது . உண்மையை கறுப்பு வெள்ளையாய் பார்ப்பதில் இருந்து வருகிறது . ஒன்று நாம் உண்மை என நினைக்கிற ஒன்று முக்கியமானது என்கிற ஒரு கற்பனை நமக்கு உள்ளது . பல சமயங்களில் நாம் அடக்கி வைத்திருக்கிற உண்மைகள் அற்பமாய் அசட்டுத்தனமாய் பிறருக்கு தோன்றும் . என் 18 வயதில் ரயில் பயணத்தில் ஒரு வெள்ளைக்காரரை பார்த்தேன் . இளைஞர் . நானும் குடும்பத்தோடு அல்லாமல் நண்பர்களோடு பயணித்தேன் . அதனால் அவரிடம் “ வெளிப்படையாக ” பேசிக் கொண்டிருந்தேன் . நான் அவர் எந்த வயதில் முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டார் எனக் கேட்டேன் . தயங்காமல் , பெரிய உண்மையை சொல்லுகிறோம் என்கிற சல்ஜாப்பு இல்லாமல் 14 வயதில் என்றார் . இதுவே என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டால் இவ்வளவு சாதாரணமாய் கூச்சம...

ஒரு நீண்ட நிராகரிப்பு கடிதத்திற்கு பின் - சார்லஸ் புக்காவஸ்கி - தமிழில் ஆர்.அபிலாஷ்

-       வெளியே அங்குமிங்கும் நடந்தபடி அதைப் பற்றி யோசித்தேன். கிடைத்ததிலேயே ஆக நீளமானது அக்கடிதம். பொதுவாக இத்தகைய கடிதங்கள் “மன்னிக்கவும் இது எங்கள் தரத்தில் இல்லை” என்றோ “மன்னிக்கவும் இதை பயன்படுத்த முடியவில்லை” என்றோ இருக்கும். அல்லது பெரும்பாலும் வழக்கமான அச்சிட்ட நிராகரிப்பு கடிதம் தான். ஆனால் இது தான் மிக நீளமானது, கிடைத்ததிலேயே ஆக நீளமானது. ”ஐம்பது தங்கும் விடுதிகளில் என் சாகசங்கள்” என்கிற என் கதைக்கானது அது. ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் போய் நின்று அந்த சிறு கடிதத்தை எடுத்து திரும்ப வாசித்தேன் –

கேஜ்ரிவால்: நாடகமான தர்ணா அரசியல்

(பிப்ரவரி மாத உயிர்மையில் வெளியான கட்டுரை) ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அன்னா ஹசாரே மற்றும் அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் பா.ஜ.கவின் மறைமுக ஆதரவு காரணமாய அதன் மீது அவநம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். அருந்த்தி ராய் இக்கட்சிக்கு எதிராய் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் இடதுசாரி சாய்வு கொண்டவர்கள் இடத்து கணிசமாய் தாக்கம் ஏற்படுத்தின. என் கல்லூரியில் ஆம் ஆத்மியினர் வந்து ஒரு கருத்தரங்கு நட்த்திய போதும் நான் வகுப்பில் மாணவர்களிட்த்து என் அவநம்பிக்கையையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டேன். பின்னர் அன்னா ஹசாரே விலகியது ஒரு நல்ல சகுனமாக பட்ட்து. தேர்தல் நெருங்க ஆம் ஆத்மியிர் பா.ஜ.கவிடம் இருந்தும் தம்மை விலக்கி தனி அணியாக காட்ட முற்பட்டனர். இன்று பா.ஜ.க கடுமையாக விமர்சிக்கும் இட்த்திற்கு ஆம் ஆத்மியினர் வந்துள்ளதும் அவர்களின் தனித்துவத்தையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது; இது பாராட்டுக்குரியது.

அடுத்த உலகக் கோப்பை வரை பிணம் காத்திருக்க வேண்டும்

தோனிக்கு ஸ்ரீனிவாசனுடன் உள்ள அணுக்கம், அவரது சிமிண்ட் கம்பெனியில் தோனியின் பங்கு மற்றும் சூப்பர் கிங்ஸ் தலைமை காரணமாய் இந்திய கிரிக்கெட் ஒரு எலிப்பொறியில் மாட்டி இருக்கிறது. தொடர்ந்து நான்கு வெளிநாடுகளில் நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இதற்கு முன் பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கும். எந்த அணியும் இந்தளவுக்கு தோல்விகளை பொறுக்காது. வங்கதேசம் ஆசியக்கோப்பையின் நடுவில் பாதிக்கு மேல் வீர்ர்களை மாற்றியது. ஒரு ஆட்டம் தோற்றாலே பாகிஸ்தான் வாரியம் மொத்த அணியையும் தூக்கி கடாசும். ஆனால் இந்திய அணிக்கு மட்டும் ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த உலகக்கோப்பை வரை எவ்வளவு ஆட்டங்களை நீங்கள் இழக்கலாம், நாங்கள் யாரையும் மாற்ற மாட்டோம் என்று. ஏனென்றால் இங்கே பணம் தான் முக்கியம். வென்றாலும் தோற்றாலும் பணம் குவிகிறது. பின் இருக்கவே இருக்கிறது ஐ.பி.எல். அடுத்த உலக்க் கோப்பையில் நாம் கால் இறுதியை தாண்டப் போவதில்லை (சூதாட்டக்கார்ர்கள் நினைத்தால் ஒழிய). தோற்றுத் திரும்பும் தோனிக்கு இன்னும் ஆறு மாதங்கள் வழங்கப்படும். அப்போது இங்கு மே.இ தீவுகள், நியூசி...