Skip to main content

Posts

Showing posts from April, 2012

பிடிக்காத ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்பது

பிடிக்காத ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்பது ஒரு சுகந்த மலரை பறிக்க மனம் தடுமாறுவதைப் போல.

திருமணநாள் பரிசுகள்

திருமணநாள் பரிசுகள் குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன. வருடங்கள் முன் பின் சென்று தூசு படிந்து நிறம் மங்கி வரும் ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களைப் போல்

இனிய சேதியில் ஆரம்பமாகும் நாள்

ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள் அப்போதில் இருந்து தான் துவங்குகிறது

சச்சினும் திராவிடும் – ஒரே படகில் மேதையும் நடைமுறைவாதியும்

மேதைமையின் சிலுவை: இரு கசப்பான சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு இரு பெரும் கிரிக்கெட் ஆளுமைகள் தம் மீதுள்ள சுமையை இறக்கி இருக்கிறார்கள். சச்சின் தனது நூறாவது சதத்தை ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக அடித்து. திராவிட் எதிர்பாராத படி வழக்கமான நிதானத்துடன் தனது ஓய்வை அறிவித்து. சச்சினின் நூறாவது சதம் அவரது இதுவரையிலான எண்ணற்ற சாதனைகளில் ஒன்று மட்டும் தான்.

ரத்தக்கொழுப்பும் கெப்பாசிட்டி குறைந்த குடிகாரர்களும்

ரத்தக்கொழுப்பு பணக்காரர்களின், சோம்பேறிகளின், பருத்தவர்களின் உபாதையாக கருதப்படுவது. பரிணாமவியல் உணவு ஓய்வினோடு சம்பாதிக்கிற ஒன்றல்ல, அது உழைக்கும் இனத்தும் நிறமாக கருதப்படுகிற கறுப்பினோடு மிகுந்த தொடர்புடையது என சுட்டுகிறது.

பனித்தவளைகள், ஐஸ்வைனுடன் உருவான சர்க்கரைநோய்

சர்க்கரை நோய் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சிறுவயதில் நிறைய சர்க்கரை சாப்பிட்டது, உடம்பில் அபரிதமாய் சக்கரை இருப்பதில் இருந்து பெற்றோருக்கு இருக்கக் கூடும், கணையம் வேலை செய்யவில்லை என்பது வரை நம்மிடையே அசட்டுத்தனமான, சுவாரஸ்யமான, தகவல்பூர்வமான நம்பிக்கைகள், விளக்கங்கள் உள்ளன.