ஜுரத்தில் இருக்கும் நாய் அப்பால் பாலத்தில் செல்லும் ரயிலின் அலறலுக்கு மெல்ல எழுந்து படுக்கிறது ஓசை அடங்கியதும் மூச்சு சீராகிறது பக்கத்து பால்கனியில் விளையாடும் குழந்தைகளை நோக்கி இருமுறை குரைத்து விட்டு வருகிறது தன் எஜமானனுக்காக அது காத்திருக்கவில்லை
பவுன்சரை தவிர்க்க திணறும் கோலி நடந்து வரும் மே.இ தீ கிரிக்கெட் தொடரில் மூன்று திறமையான இந்திய மட்டையாளர்கள் தம் கன்னி ஆட்டத்தை ஆடினார்கள். பத்ரிநாத்தும், மனோஜ் திவாரியும் ஒருநாள் போட்டிகளில், விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில். மூவருமே சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு சிரமமானது என்று தெரிந்து கொண்டார்கள்.