பியாட்ரைஸ் பிரிஸ்மேன் (வட அமெரிக்கா) BEATRICE BRISSMAN (வட அமெரிக்கா) மௌனம் மீள மீள காத்துக் காத்திருக்கும் விதம் ... அடுத்த லூன் பறவைக் கத்தலுக்கு The way silence waits and waits ... for the next cry of the loon
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்டு ஆட்டத்தில் இந்தியாவால் ஆட்டத்தை காப்பாற்ற முடியும் மற்றும் வெல்லக் கூட முடியும் என்று மீடியா விமர்சகர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர். இதற்கு காரணம் எந்த ஒரு கிரிக்கெட் தர்க்கமோ விவேகமோ அல்ல.
இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.
ஜான் பிராண்டி John Brandi காற்றிறங்கின டயர் பசுக்கள் வெறுமனே நிற்கும் பிறகு மெல்ல திரும்பும் நோக்க flat tire the cows just stand and slowly turn to look
ஷோப்பென்ஹெர்: உள்ளிருந்து இயக்கும் ஆற்றல் - 1 ஒரு புத்தகத்தாலோ அல்லது மனிதராலோ தூண்டப்படும் முன் ஒரு மனிதனின் தேடல் எங்கிருக்கிறது? ஒரு மனிதனின் தேடல் அவனது நீண்ட சிந்தனை மரபின் அவனறியாத ஒரு தொடர்ச்சியா? ஷோப்பென்ஹெர் (1788-1860) ஒரு ஜெர்மானிய தத்துவஞானி. இவரது சோர்வுவாத கோட்பாடு தத்துவவரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஷோப்பென்ஹெரின் ஊக்க கோட்பாட்டை நாம் இவ்வாறு எளிதாக விளக்கலாம்.
செல்வராகவனின் “ ஆயிரத்தில் ஒருவன் ” எப்படி தமிழின் முதல் மாயஎதார்த்த படமோ “ நந்தலாலாவும் ” தமிழின் முதல் உருவகப் படமே. உருவகம் மிஷ்கினின் சினிமா மொழியாக என்றும் இருந்துள்ளது. காட்சியமைப்பில் இருந்து நடிப்பு வரை உருவகத்தன்மையை கொண்டு வர அவர் எதார்த்தத்தை கத்தரிக்கிறார். ” சித்திரம் பேசுதடி ” , “அஞ்சாதே ” ஆகிய படங்களில் இருந்து நாம் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் தர முடியும்.
கல்கியின் “ சுண்டுவின் சந்நியாசம் ” என்ற சிறுகதை சற்று மிகையான ஒரு வேடிக்கை கதை. கல்கியின் நகைச்சுவை அ.மித்திரன் (அல்லது சுஜாதா) போல் அல்லாது சற்று அட்டகாசமான நகைச்சுவை. மேற்சொன்ன மிகை காரணமாகவே கலைத்தன்மை குறைவாக் இருந்தாலும் இது ஒருவிதத்தில் ஒரு முக்கியமான கதை. எப்படி என்பதை பார்க்கப் போகிறோம்.