தடக்காற்று கடுமையாய் வீசியதால் , ஆற்றுத்துறைமுகத்தில் அம்மாவை படகில் ஏற சம்மதிக்க செய்ய நான் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மாவிடம் நியாயமில்லாமலும் அல்ல. நியு ஓர்லியன்சிலிருந்து வரும் நீராவிப் படகுகளின் குறுகிய மாதிரி வடிவமான இந்த படகுகளின் கேசொலின் எந்திரம் ஜுர நடுக்கத்தை படகின் மேலுள்ள எல்லாவற்றின் மேலும் கடத்தி விடக் கூடியவை.