Skip to main content

Posts

Showing posts from September, 2024

நற்பேறு

நற்பேறு ஜெயம் ரவி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பரிதாபமானது. அதுவும் அவர் தன்னிடம் மிச்சமாக இருப்பது வெறும் கார் தான் எனும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு நடிகைக்கு நடந்திருந்தால்? நயந்தாராவோ திரிஷவோ தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் சுருட்டி தன்னைத் தெருவில் விட்டுவிட்டார் என்று சொன்னால் அவரை ஊரே சேர்ந்து பந்தாடியிருக்கும். ஆணுக்கு நடந்தால் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்களால் அழுதுகாட்டவும் முடியாது. ஜெயம் ரவிக்கும் விவாகரத்தாகும் வேறு மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்குமான வித்தியாசம் பின்னவர்களின் பணத்தையும் சொத்தையும் மொத்தமாக செட்டில்மெண்டின் போது பிடுங்கியிருப்பார்கள். ஜெயம் ரவிக்கு அது விவாகரத்தாகுமுன்பே நடந்திருக்கிறது. என்ன கொடுமையென்றால் நம் சமூகமே இதுதான் சரியெனும் நம்பிக்கைகொண்டிருப்பதுதான் - ஆண்களின் உழைப்பு, பணம், சொத்தெல்லாம் அவர்களுடையது அல்ல, அதை யாராவது பயன்படுத்தவேண்டும், பிடுங்கவேண்டும், அதுவே கடமையாற்றுவது, கண்ணியமாக பாசமாக இருப்பது என சமூகம் நம்புகிறது. அக்கா, தங்கை, அம்மாவுக்காக கொடுப்பது...

கே.ஆர் மீராவின் “மீராசாது” - பக்தியில் இருந்து முக்தி

“ மீராசாது ” நாவலை தமிழில் மொ . செந்தில்குமார் மொழிபெயர்த்திருக்கிறார் . தமிழில் வெகுவாக சிலாகிக்கப்பட்ட நாவல் இது . நான் மொழிபெயர்ப்பில் படிக்கவில்லை . நான் ஸ்டோரிடெல் ஒலிநூல் செயலியில் மலையாள மூலத்தில் இந்நாவலைக் ‘ கேட்டேன் ’.  1970, 80 கள் வரை வெகுஜன இலக்கியத்தில் பிரசித்தமாக இருந்த கதை வடிவம் இது : ஸ்திரிலோலனான ஒரு நாயகன் , அவனிடம் காதல்கொண்டு பித்தாகி கிட்டத்தட்ட அடிமையாகவே செயல்படும் நாயகி . நாயகன் அவளை மணமுடித்து தொடர்ந்து அவளைச் சுரண்டுகிறான் , ஏமாற்றி பல பெண்களை அனுபவிக்கிறான் . கடைசியில் நாயகிக்கு மனம் தெளிந்து அவள் அவனைத் திருத்தி அவனுடன் வாழ்வாள் ( ரமணி சந்திரனின் " மயங்குகிறாள் ஒரு மாது " நாவலை நினைத்துப்பாருங்கள் ). இக்கதைகளின் அழகே நாயகியின் ஸ்டாக்ஹோம் சிண்டிரோமும் , தன்னழிவில் அவள் கொள்ளும் பெருங்கிளர்ச்சியும்தான் . அவள் வன்மமான நாயகனை வழிபடுவதில் ஒரு கிறுக்குத்தனமும் , அதர்க்கமான அகப்பாய்ச்சலும் இருக்கும் . உன்மத்தமான இக்காதல் அன்று பல வாசகர்களைக் கட்டிப்போட்டது . இந்தக் கதையமைப்பில் எ...