Skip to main content

Posts

Showing posts from October, 2021

மடிக்கணினி: துள்ளித் திரிந்த காலம், இன்று படுத்து குறட்டை விடும் காலம்

அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது.  அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் கணினியை 10,000-20,000க்குள் வாங்கினால் அசல் விண்டோஸ் இயங்குதளத்தை எல்லாம் நிறுவ மாட்டார்கள். நகல் தான். அதுவும் சமர்த்தாக வேலை செய்யும். தாயிடம் பாலருந்திய நாய்க்குட்டிகளைப் போல துள்ளித் திரியும். நான் அப்போது வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் இப்படியான நகல் இயங்குதள கணினிகளே அதிகம் இருந்தன. எப்போதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஆள் வருவார்கள். அப்போது நகல் கணினிகளை அவசரமாக ஒரு தளத்தில் வைத்து பூட்டி விட்டு எங்...

எம்.ஜி.ஆர்: இது வாலிப வயசு!

எம்.ஜி.ஆர் சரோஜா தேவியை தவிர்க்கத் தொடங்கி அந்த இடத்தில் ஜெயலலிதாவை கொண்டு வந்த கதையை நாம் அறிவோம். அது ஏன் என்பதன் பின்னால் எம்.ஜி.ஆரின் பாதுகாப்பின்மை குறித்த ஒரு கதை இருக்கிறது.  சரோஜா தேவி எம்.ஜி.ஆரின் படத்தில் (நாடோடி மன்னன்) நாயகியாக அறிமுகமானாலும் தொடர்ந்து, விரைவில் தமிழில் பிரசித்தமான நடிகையாகிறார். துவக்கத்தில் பார்க்க கறுப்பாக, பேரழகிகளின் அங்க லட்சணங்கள் என தமிழ் சினிமாவில் நம்பப்படுகிற தோற்ற இயல்புகள் இல்லாமலே இருந்தார். அதனாலே அவரை நாயகி ஆக்க துவக்கத்தில் தயாரிப்பாளருக்கு அவநம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆருக்கு அவரை பிடித்துப் போக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வைத்து ஓக்கே பண்ணுகிறார். எம்.ஜி.ஆரின் தேர்வும் கணிப்பும் பொய்க்கவில்லை. சரோஜா தேவி அந்த காலத்துக்கு கனவுக்கன்னியாக மாறுகிறார். முகம், கழுத்து, கைகள் என எங்கும் களிம்புகள் பூசி தன்னை பளிச்சென்று மாற்ற முயன்று, அந்த ஒயிலான நடை, சிங்காரமான வெட்டு, தளுக்கு, கொஞ்சல் மொழி ஆகியவை கொண்டு ரசிகர்களை நிரந்தரமாக தொந்தர்வுக்குள்ளாக்கும் கனவு நாயகி ஆகிறார். ஆனால் அவருடைய நிறம் துவங்கி அவர் நடக்கிற பாணி (ஏன் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு...

காந்தியும் சீமானும் சந்திக்கும் “தாய் மதம் திரும்புங்கள்” எனும் புள்ளி

    “ வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் ஒரு சனாதனவாதி தான் .” - மகாத்மா காந்தி “ கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே .. ஒன்று ஐரோப்பிய மதம் .. இன்னொன்று அரேபிய மதம் . என்னுடைய சமயம் சைவம் . என்னுடைய சமயம் மாலியம் . என்னுடைய சமயம் சிவசமயம் . மீளணும் எனும்போது , மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிற மாதிரி திரும்பி வா .” - சீமான் சீமான் ஒரு இந்துத்துவவாதியா , அவருடைய தமிழ் தேசியம் ஆர் . எஸ் . எஸ்ஸின் தமிழிய வடிவமா என்றெல்லாம் இப்போது கேள்விகள் எழுகின்றன . தமிழன் இந்துவாக மட்டுமே இருந்தாக வேண்டும் என்பதைத் தான் தமிழன் சைவனாகவோ வைணவனாகவோ மட்டுமே இருந்தாக வேண்டும் என சீமான் கூறுகிறார் என்பது தெளிவு ; ஏனென்றால் தமிழரின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் பண்டைய தமிழகத்தில் சைவ , வைணவ மதங்கள் இருக்கவில்லை என்கிறார்கள் ; கீழடி கண்டுபிடிப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன . இருந்தும் சைவம் , வைணவமே அசலான தமிழ் மதங்கள் என சீமான் பிடிவாதம் பிடிப்பது அவருடைய அடி...