இன்று ஒரு வகுப்பில் ஒரு மாணவனை சுய அறிமுகம் பண்ணக் கேட்ட போது தனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றான். சரி உனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்றேன். “யாருமே இல்லை” என்றான். ஒரு கணம் சிரிப்பு வந்தாலும் அதுவே சிறந்த பதில் என உடனே தோன்றியது. நான் என் 13வது வயதில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். இப்போது ஆடுகிற வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நானும் அதே பதிலைத் தான் சொல்வேன். இந்தியாவில் சச்சினின் ஓய்வுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படவில்லை. கூடவே கும்பிளே, கங்குலி, லஷ்மண், சேவாக் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். பாகிஸ்தானில் இன்ஸமாம், அன்வர், யூனிஸ் கான், ஷோயப், அக்ரம், சக்லைனுக்குப் பின் அப்படியான வீரர்கள் தோன்றவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏ.பி.டிவில்லியர்ஸ், ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தில் பீட்டர்ஸன், மே.இ தீவுகளில் லாரா, ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாஹ், பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்ன், இலங்கையில் அரவிந்த டி சில்டா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, முரளி ஆகியோருக்குப் பிறகு கிரிக்கெட்டில் கடவுளர்களே தோன்றவில்லை. சாமான்யர்கள் அவர்களின் இடத்தை ...