சற்று நீளமான முன்னுரை … MeToo பாலியல் தொந்தரவு , தாக்குதல் மற்றும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஒரு இயக்கம் . 2016 இல் டரானா புர்க் எனும் கறுப்பின அமெரிக்க போராளி இந்த MeToo பிரச்சாரத்தை சமூக வலைதளங்களீல் ஆரம்பித்தார் . ஒரு பதிமூன்று வயதுப் பெண் அவரிடம் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை பகிர்ந்து கொள்ள புர்க் “ நானும் தான் பாதிக்கப்பட்டேன் ” என சொல்ல நினைத்து மனதுக்குள் புதைக்கிறார் . இதைப் பின்னர் அவர் MeToo ஹேஷ்டேகில் இணையத்தில் பகிர்ந்து கொள்ள அது பற்றிக் கொள்கிறது . ஆனால் விளிம்புநிலையினரின் எல்லா பிரச்சாரங்களை போல , இதுவும் பெருமளவில் சமூக கவனம் பெற சினிமாத் துறையினர் அப்பதாகையை ஏந்த வேண்டி வந்தது .