Skip to main content

Posts

Showing posts from February, 2014

ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா?

செக்ஸுக்கு பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சனை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீனமாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவது தான்.

மாணவர்களும் புத்தக வாசிப்பும்: எங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை?

கிருஷ்ண பிரபு புத்தக்க் கண்காட்சி பற்றி ஒரு முக்கிமான ஆய்வை செய்திருக்கிறார். அவர் எடுத்துக் கொண்டுள்ள சாம்பிள் சிறியது என்றால் முடிவு உண்மை. கல்லூரி மாணவர்களிடையே புத்தகக் கண்காட்சி பற்றி போதுமான விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்கிறார். அடுத்தமுறை பப்பாசி இதை கணக்கில் எடுக்கும் என நம்புவோம். எனக்கு இன்னொரு விசயமும் கவனிக்க வேண்டிதாய் படுகிறது. மாணவர்களின் அன்றாட நாள் எப்படி கழிகிறது என்பதையும் கூறுகிறார் கிருஷ்ண பிரபு. படிப்பு, கல்லூரி வகுப்புகள், அரட்டை, இசை, வீடு, சாப்பாடு, டி.வி, தூக்கம். இதுவும் உண்மை. ஆனால் இது இன்றோ நேற்றோ அல்ல பள்ளிப் பருவத்தில் இருந்தே இப்படித் தான் பழக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்போம்.

நீலப் பறவை - சார்லஸ் புக்காவஸ்கி

வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று என் இதயத்துள் உள்ளது ஆனால் நான் ரொம்பவே கண்டிப்பாய் இருக்கிறேன் அதனிடம் , சொல்வேன் , அங்கேயே இரு , யாரையும் உன்னைப் பார்க்க நான் விடப் போவதில்லை வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று என் இதயத்துள் உள்ளது ஆனால் நான் அதன் மேல் விஸ்கி ஊற்றுகிறேன் , சிகரெட் புகை இழுக்கிறேன் விபச்சாரிகளும் , பார் பணியாளர்களும் மளிகைக்கடை குமாஸ்தாக்களும் அது அங்கிருப்பதை ஒருபோதும் அறிவதில்லை.

திமுகவுக்கும் பெரியாருக்கும் சம்மந்தம் உள்ளதா?

தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதிய ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் கட்டுரையை ஒட்டி ஒரு கொந்தளிப்பான விவாதம் நடந்து வருகிறது. விமர்சகர் ஜமாலன் அக்கட்டுரைக்குப் பின் பெரியாரியம் அழிய வேண்டும் என்கிற பிராமண வலதுசாரி சக்திகளின் விருப்பம் உள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்கும் போது பெரியாருக்கும் தி.மு.கவுக்கும் எந்தளவுக்கு சம்மந்தம் உண்டு என்கிற வியப்பு நமக்கு ஏற்படுகிறது.