நான் பொதுவாக வாசகர் கடிதங்களை வெளியிடுவது அபத்தம் என நினைப்பவன். பொதுவெளியில் எழுத நினைத்தால் அதை வாசகர்களே செய்யலாம். ஆனால் மாறாக ஒரு சுவாரஸ்யமான கேள்வியை நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். படிப்பதற்கு ஒரு நல்ல கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? என் பதில் ஒரு பொது விவாதத்திற்கு தேவையானது என தோன்றுவதால் பிரசுரிக்கிறேன். இனி… பேராசிரியர் அவர்களுக்கு , நான் ஒரு குறிப்பிட்ட பல்கலையில் பட்ட படிப்பில் சேர்வதற்கு முன் தங்களின் ஆலோசனையைப் பெற விரும்புகிறேன் . அப்பல்கலை , பட்டபடிப்பு , பாடத்திட்டம் பற்றிய குறிப்பேட்டை இதனுடன் அனுப்பியிருக்கிறேன் . தங்களின் கருத்தினைக் கேட்க அலைபேசியில் அழைக்கலாம் எனில் , அலைபேசி எண் , எப்போது அழைக்கலாம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கவும் . இப்படிக்கு , சூ . தோமஸ் சூசன் உயிர்மை வாசகன் & முகநூல் நண்பன் அன்புள்ள தோமஸ் சூசன் பாடத்திட்டத்தை பார்த்தேன் . பழைய ஒன்று தான் . ஆனால் பொதுவாக அது எப்படி இருந்தாலும் ஒரு துறையை கல்லூரி அளவில் ஆழமாகவோ ஆத்மார்த்தமாகவோ கற்பது சிரமம் . கல்லூரிப்...