சமீபத்திய ஆஸ்கா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றான அல்பர்ட் நாப்ஸ் ( Albert Nobbs ) பால்நிலை பற்றின ஒரு சிக்கலான பிரச்சனையை சற்று மிகையான கற்பனையுடன் பேசுகிறது. அது ஒரு பெண் எத்தனை சதம் ஆண் மற்றும் பெண்ணாக இருக்கிறாள் என்பது.
ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள் ” நாவலை வாசித்து முடித்ததும் நினைவுக்கு வந்தது பிரமிளின் கவிதையொன்று. “திரை இரைச்சல் ” என்ற அக்கவிதை (நீண்ட கவிதை) “ கால்கள் ” நாவலுக்கும் இக்கவிதைக்கும் தொடர்பிருக்கிறது. “கால்கள் ” செயல் இழந்தவர்களின் உலகம் அஸ்தமனமுற்றதாகவே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அந்தக் கால்களின் கீழே உள்ள சிறகுகளை பலரும் உணர்வதில்லை. ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள் ” எனும் இந்நாவலின் மையப் பாத்திரமான மதுக்ஷராவின் சிறகுகள் அவளுடைய மனதில் இருக்கிறது. அவள் அவற்றின் மூலம் பெரும் பயணம் செய்கின்றாள்.
இந்திய கிரிக்கெட்டில் மிக அதிகமாக எதிர்பார்ப்புகளுக்கும் அதனாலே ஏமாற்றங்கள் கண்டனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளான சமகால வீரர் யுவ்ராஜ் தான். இன்று ரெய்னா, ரோஹித் ஷர்மா, மனோஜ் திவாரி, கோலி, சுவரப் திவாரி, மனிஷ் திவாரி என இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால பட்டியலில் நிறைந்துள்ள ஆர்ப்பாட்டமான அதிரடி ஆட்டமும், மீடியா தளுக்கும் மிக்க இளைய வீரர்களுக்கு ஒரு முன்னோடி அவர் தான்.
15 வருடங்களுக்கும் முன் நானும் என் மாமா பையனும் மே.இ தீவுகளில் திராவிட் சச்சினுடன் டெஸ்டில் ஆடுவதை இரவில் பார்த்துக் கொண்டிருப்போம். சச்சின் ஆடினால் கூப்பிடு என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன். எழுந்தால் அடுத்த ஓவருக்குள் ஒன்றும் நடந்திருக்காது - திராவிட் ஏமாற்றிருக்க மாட்டார். இப்படி ஓவர் விட்டு ஓவர் எனக்கு ஓய்வளித்த திராவிட் நிரந்த ஓய்வெடுக்க போவது அறிந்ததும் மிகுந்த வருத்தம்!
கால்கள் நாவல் இதுவரை தமிழ் இலக்கியம் கவனப்படுத்தாத ஒரு வாழ்வை வாசகர் முன் வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு, லட்சியம், ஆசை, நோக்கம், எதிர்பார்ப்பு என்று பல இருக்கிறது. அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். கனவை, லட்சியத்தை, நோக்கத்தை, ஆசையை, எதிர்ப்பார்ப்பை அடைந்துவிட்டார்களா யாராவது?
ஜப்பானியர்கள் மரணத்தை வாழ்தலுக்கு நிகராக நிறைவு தரும் செயலாக பார்க்கிறார்கள். அதனால் நாட்டுக்காக, மன்னனுக்காக செய்யும் உயிர்த்தியாகங்கள் ஆகட்டும், தனிநபர் தற்கொலைகள், ஜீவசமாதிகள் ஆகட்டும் அவை துர்சம்பவங்களாக பார்க்கப்படுவதில்லை.
தமிழில் இருவகையான பரீட்சார்த்த படங்கள் வருகின்றன. ஒன்று மசாலா படம் என்ற பாவனையில் வரும் பரீட்சார்த்த படம். இரண்டு உலக சினிமா என்கிற பாவனையில் வரும் மசாலா படம். தமிழில் மூன்றாவதான ஒரு தனி பரீட்சார்த்த சினிமா இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவ்வகையில் “காதலில் சொதப்புவது எப்படி ” முதல் வகை. அதே காரணத்தால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் நாம் இந்த படத்தை பற்றி பேசலாம்.