Skip to main content

Posts

Showing posts from October, 2011

CLT20இல் இருந்து உலக கிரிக்கெட்டுக்கு: சில பாடங்கள்

2011 CLT20 பொருளாதர ரீதியாக ஒரு சிறு பின்னடைவு தான். உள்ளூர் அணிகள் தத்தமது நகரங்களில் ஆடினால் மட்டுமே அரங்குகள் முக்கால்வாசி நிரம்பின. நட்சத்திர மதிப்பிலும் சற்று சோர்வு தான். சச்சின், சேவாக், யுவ்ராஜ், சஹீர், ரோஹித் ஷர்மா ஆகியோர் இல்லாத இந்திய அணிகள் பொதுவாக பலவீனமாகவே தோன்றின. மட்டையாட்டத்தை வலுப்படுத்த கூட கெயில், பொல்லார்டு, தில்ஷான், ஹஸ்ஸி ஆகிய ஆகியோரை நம்பி இருந்தன. இருந்தும் ஆட்டங்கள் மிக தரமானவையாக இருந்தன. காரணம், வழக்கம் போல் அயல்நாட்டு மாநில அணிகள் நன்றாக ஒருங்கிணைவுடன் ஆடியது. இந்த தொடரில் இருந்து சர்வதேச கவுன்சில் மற்றும் இந்திய வாரியத்துக்கு சில பாடங்கள் உள்ளன.

ஸ்ரீகாந்த்: சிங்கத்தின் குகையில் இருந்து எலிப்பொறிக்குள்

இங்கிலாந்தில் இந்தியா சந்தித்த கடுமையான தொடர் தோல்விகளுக்கு மோசமான தயாரிப்பும் உடல்தகுதி அக்கறையின்மையும் காரணங்களாக அனைத்து தரப்பிலும் முன்வைக்கப்படுகின்றன. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு இந்தியாவில் முதன்முதலாக ஊதியம் வழங்கப்படுகிற முதல் தேர்வுக் குழு. அதனாலே அவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் ஆரம்பத்தில் இருந்தே கூர்மையாக கண்காணிக்கப்பட்டது.