Skip to main content

Posts

Showing posts from June, 2011

ஸ்டான்லி க டப்பா: குடும்பத்திற்கு அப்பால் உள்ள அம்மா

“ ஸ்டான்லி க டப்பா ” வணிக சினிமாவின் வடிவொழுங்கை ஓரளவு மீற முயலும் படம் என்பதும், குழந்தைகளுக்கு க்ற்பனை மீசை ஒட்டி பேச வைக்காத படம் என்பதும், குழந்தைகளின் பெயரில் அமீர்க்கான் போன்றவர்கள் “ரஜினி அங்கிள் ” வேசம் போடாத படம் என்பதும் காட்சிகள் ஓடத் துவங்கின கொஞ்ச நேரத்திலே உங்களுக்கு புரிந்து விடும்.

லில்லிபுட் தேசத்தில் கிரிக்கெட்

ஐ.பி.எல்லை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே இயன் சேப்பல் கூறி வந்தார். ஐ.பி.எல்லை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அது ஒரு நல்ல பொழுதுபோக்காக, விளம்பர நிறுவனங்களின் வேட்டைக்களனாக, உள்ளூர் வீரர்கள் மற்றும் ஓய்வு பெறப் போகும் வீரர்களின் எதிர்காலத்தை பத்திரப்படுத்தும் மார்க்கமாக பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. ஏன் ஐ.பி.எல் வேண்டும் என்று ஒரு எளிய இந்திய கிரிக்கெட் ஆதரவாளர் கூட மூச்சுவிடாமல் பேச முடியும். ஆனாலும் நமது கண்ணாடியை கழற்றி விட்டு பார்த்தால் அது உலகக் கிரிக்கெட்டின் சத்தை உறிஞ்சி சக்கையாக்குவது புரியும்.

போனபார்ட்டின் பின்னடைவு - சார்லஸ் புக்காவஸ்கி

அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள் அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில் கதவருகே இருந்தார். திறப்பதில் இருந்து மூடும் வரை அவர் எப்போதுமே அங்கே தான் இருந்து கொண்டிருப்பார். என்னை விட அதிகமாகவே அங்கே அவர் இருந்தார், அது ஒன்றும் சாதாரண விசயமல்ல.