1999-இல் மெக்ரேத்தின் பவுன்சருக்கு குனிந்து அடிவாங்கிய டெண்டுல்கருக்கு அவுட் வேறு வழங்கி இந்தியர்களின் கரிப்பையும் சாபத்தையும் தாராளமாக பெற்ற, 2009-ல் ஆட்டவீரர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிடும் சோதனை முறை செயல்படுத்தப்பட்ட போது சர்வதேச அளவில் கண்டனம் பெற்ற ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பரில் நுண்ணிய நகைச்சுவையும், வக்கணையும் கொண்ட பேட்டி. பேட்டியாளர் cricinfo.com-இன் நாகராஜ் கோல்புடி. தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் தமிழாக்கி உள்ளேன் நாகராஜ்: மட்டையாளரின் ஷாட்களால் என்றாவது வாங்கியது உண்டா? ஹார்ப்பர்: பெற்றதிலேயே மோசமான அடி மேற்கிந்திய தீவுகளில் சனத் ஜெயசூர்யாவின் ஸ்கொயர் கட். பாப்பிங் கிரீஸ் ரன் அவுட்டுக்கான டீ.வி படப்பிடிப்பு கருவிகள் ஒரு பக்கம் மட்டுமே இருந்ததால் அவற்றுக்கு இடமளிக்க நடுவர்கள் ஆஃப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த மூர்க்கமான ஷாட்டிலிருந்து விலக எனக்கு எந்த வழியும் இல்லை; நேராக அது என் நடுமார்பில் மோதியது. ஒற்றை ஓட்டம் ஒடின பின்னர் மட்டையாளர்கள் என்னிடம் வந்தனர்; ஜெயசூர்யா என்னிடம் சொன்னதெல்லாம், “உங்களால் எனக்கு 4 ஓட்டங்கள் போச்சு”. நான் சொன்னேன், “உனக்கு ஒர...