பெயரில் சாதியை ஒழிப்பது
ஒரு பழைய “நீயா நானாவின்” டிரைலரைப் பார்த்தேன். சாதியை ஒழிப்பதில்கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இது விவாதிக்கிறது. சாதியை வெளிப்படையாகபெயரொட்டாக வைத்துக் கொள்ளும் கேவலமான வழக்கம் கேரளாவில் பலருக்கும் உண்டு. இது ஏன், தமிழகத்தில் இது ஏன் இல்லை என நிகழ்ச்சியில் கரு.பழனியப்பனின், நடிகை பார்வதி நாயரும்விவாதிக்கிறார்கள்.
டிரைலரில் இந்த குறுவிவாதத்தைக் கண்ட போது எனக்குள் எண்ணம் நாம் இந்தளவுக்கு மேம்பட்டு தான்இருக்கிறோமா எனும் கேள்வி எழுந்தது.
“நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளில் பெயரில் சாதி வைப்பதில்லை என தமிழர்கள் பெருமையடித்தாலும்கொடூரமான சாதிப் படுகொலைகள், ஆணவக் கொலைகள் இங்கே தான் அதிகமாக நடந்துள்ளன. தாழ்த்தப்பட்டவர்களை பொதுவெளியில் வைத்து வெட்டுவது, கொன்று ரயில்பாதையில் கிடத்துவது, காலனிக்குதீ வைப்பது போன்ற அநீதிகள் நம்மூரில் அதிகம். மேலும், சாதிக்கொரு கட்சியையும் நாமே அங்கீகரிக்கிறோம்; அந்த சாதியின் அடிப்படையிலே இன்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன் இத்தகையசீரழிவுகளை கேரளாவில் நாம் காண்பதில்லை?
ஒரு காரணம் அங்கே சாதியை சமூகம் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பது; அதாவது சாதிஅமைப்பு இறுக்கமாக இருக்கும் போது சமரசம் நிலவும். ஆனால் தமிழகத்தில் போல இளகலாக இருக்கும்போது அதற்குள் அசைவுகளும் மேல்நோக்கிய பாய்ச்சல்களும் நடக்கும். அப்போது எதிர்ப்பும் வன்முறையும்வெடிக்கும். தமிழகத்தில் உள்ள நிலைமை “நான் உன் சாதியை கேள்விக்கு உட்படுத்த மாட்டேன், நீ என்னைமாற்றவோ என்னை விமர்சிக்கவோ முயலாதே. நீ என் பெண்ணைத் தொடாதே நானும் உன் பெண்ணைத் தொடமாட்டேன்; அது மட்டுமல்ல நீ உன் எல்லைகளைத் தாண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்; உன்உயிரைப் பறிப்பேன், உடைமைகளை எரிப்பேன், குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்.” எனும்சமரச ஒப்பந்தம். இது ஒரு அச்சுறுத்தலும் தான். தமிழகத்தில் இந்த அச்சுறுத்தல் மிக மௌனமாக ஆனால்பட்டவர்த்தமாக படமெடுத்தாடுகிறது.
இங்கு முழுமையாக வெளிப்படையாக நாம் சாதியை ஏற்க முடியாமல் தவிக்கிறோம். இதுவே பின்னர் சாதிமோதல்கள் / தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு வழிவகுத்தது - அதாவது தமிழர்கள் அரைகுறைமுற்போக்காக இருப்பதே சாதி வன்முறைக்கு வழிவழ்குத்துள்ளது. எது சாதியை பெயரில் உதறத் தூண்டியதோஅதுவே சாதிக்காக கத்தியை தூக்கவும் வைத்தது.
மேலும் நாம் பெயரில் ஒழித்து விட்டு அரசியல் களத்தில் வெளிப்படையாக அதை வைத்து அறுவடைபண்ணினோம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ராமதாஸும் அன்புமணியும். அவர்கள் தம் பெயருக்கு ஒட்டாகசாதியை வைப்பதில்லை. ஆனால் அவர்களின் அரசியல் முழுக்க முழுக்க வன்முறையால் சாதியைமுன்னெடுப்பதும், அச்சத்தால் மக்களை பிரித்து பயன்படுத்துவதும். தொண்ணூறுகளில் இப்படியான சாதிஅரசியல் ஒரு மோசமான அலையாக எழுந்து சமூகத்தை அலைகழித்தது. சாதிப்பெயரை வைத்துக் கொள்வதைவிட நாம் இதற்காகத் தான் அதிகமாக வெட்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் பார்க்கும் போது நாம் மலையாளிகளை விட மேலும் இல்லை, மோசமும் இல்லை எனப்படுகிறது! அது மூடின புண், நாம் திறந்தநிலைப் புண்.
Comments