உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (2)

நமது மரபணுக்கள்வாழும் சூழல்உணவுப்பழக்கம்நீண்ட காலமாய் நாம் தக்க வைத்துள்ள எடை ஆகிய காரணிகள் இந்த நிர்ணயிக்கப்பட்ட எடையை வரையறுக்கின்றன.தா., எனது உடலமைப்பு என் தாய் மாமாவை ஒட்டி இருந்தால் அவரைப் போன்றே எனக்கும் 70 கிலோ எடை நிர்ணயிக்கப்படலாம்அவரைப் போன்றே எனக்கும் 40 வயதில் வழுக்கை விழலாம்ஆனால் இது இப்படி ஒரு உறவினரை மட்டும் ஒட்டி எப்போதும் அமைவதில்லைநமது குடும்பத்தில் உள்ள பலரது மரபணு சுபாவங்கள் நமக்கு வந்து சேரும்அதனாலே உங்கள் பெற்றோருக்கு நீரிழிவோ மனப்பிரச்சனையோ இல்லாவிடிலும் அது வேறு ஏதோ உறவுக்கிளைகள் வழி உங்களுக்கு வந்து சேரலாம் (காவிரி நதி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு - பல்வேறு பிரச்சனைகளுடன் - வருவது போல). எடை நிர்ணயமும் அவ்வாறு மரபணு ரீதியாய் நிகழலாம்.


ஆனால் அது மட்டுமல்லநீங்கள் வாழும் சூழலுடன் நீங்கள் செய்யும் எதிர்வினையும் இதை தீர்மானிக்கும்.தா., நீங்கள் நிறைய பப்களும் இரவு பகலாய் நுகர்வுக் கலாச்சாரத்தில் சீரழியும் பங்களூர் போன்ற ஒரு நகரத்துக்கு வருகிறீர்கள்ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்உங்கள் நண்பர்கள் தினமும் மாலையில் குடிக்கிறார்கள்இரவு வெகு தாமதமாய் தூங்க செல்கிறார்கள்துரித உணவும் தூக்கமின்மையும் அவர்களது உடல் நலனைக் கெடுக்கிறதுநீங்களும் அவர்களை பின்பற்றுகிறீர்கள்நீங்கள் பெங்களூர் வரும் போது 60 கிலோஒரே வருடத்தில் உங்கள் எடை 75க்கு தாவுகிறதுஆனால் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை 60 கிலோ தான்நீங்கள் உணவு மற்றும் வாழும் முறையை மாற்றிதினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சுலபமாய் 60 கிலோவுக்கு மீள முடியும்ஆனால் நீங்கள் சில வருடங்கள் தொடர்ந்து 75 கிலோவிலே இருக்கிறீர்கள் எனக் கொள்வோம்ஐந்தில் இருந்து பத்து வருடங்கள்மெல்ல மெல்ல 85 கிலோவுக்கு வந்த  பிறகு ஒருநாள் நீங்கள் விழிப்புணர்வு பெற்று திருந்துகிறீர்கள்நல்ல உணவுதூக்கம்தினமும் உடற்பயிற்சிநிம்மதியான மனநிலைஇப்போது நீங்கள் மீண்டும் 60 கிலோவுக்கு மீள்வது சிரமம்இப்போது உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை 75ஆக இருக்கும்இதை குத்துமதிப்பாகத் தான் சொல்கிறேன் என்றாலும் நமது எடையை உடல் இப்படித் தான் அடிக்கடி வரையறை வகுத்து நிறுத்தி வைக்கிறதுஇந்த எல்லைக்கோடு மெல்ல மெல்ல சில கிலோக்கள் மேலும் கீழுமாய் செல்லலாம்ஆனால் ஒரேயடியாய் மாறாதுஒரு சில மாதங்களில் மாறாது.

அதே நேரம்நீங்கள் கடுமையாய் முயற்சித்து 1-2 வருடங்களில் 60 கிலோவுக்கு மீள்கிறீர்கள் என வைப்போம்நீங்கள் இதே எடையை தொடர்ந்து கராறான உணவுப்பழக்கம் / உண்ணாநோன்பு மற்றும் உடற்பயிற்சி மூலம் 2 வருடங்கள் தக்க வைத்தால் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடை மீண்டும் 60க்கு வந்து விடும்அடுத்துஇரண்டு வருட லட்சுமணக் கோட்டை தாண்டி விட்டோம்இப்போது எதிர்பாராத வாழ்க்கை மாற்றங்களால் எடை 65-68 என எகிறினாலும் நீங்கள் கவலைப்பட தேவையிராதுசுலபத்தில் 60 கிலோவுக்கு பேருந்து ஏறி போய் சேர்ந்து விடலாம்ஆனால்சிலர் செய்வது போலஆறு மாதங்கள் மட்டும் டயட்ஜிம் என தேனிலவு கொண்டாடி விட்டு மீண்டும் “பழைய குருடி” என பப்குடிகொண்டாட்டம் என கிளம்பினால் எடை நகர்ந்து நகர்ந்து 75க்கு சென்று விடும்இதனால் தான் சில மருத்துவர்கள் கவலைப்படுவது போலதொடர்ந்து எடை ஏறி இறங்குவது ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தும்உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை உணர்ந்து அதை ஒன்று சரியான எடைக்கு நகர்த்தி அங்கேயே ஆணி அடித்து ஸ்தாபிக்க வேண்டும்இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம்.

இந்த புள்ளிவிபரத்தைப் பாருங்கள். Science ஆய்விதழில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை சொல்வது என்னவென்றால் நீங்கள் எடையை குறைத்த பிறகு தினமும் 100 கலோரிகளை நீங்கள் உணவில் இருந்து குறைத்தால் நிர்ணயிக்கப்பட்ட (அளவானஎடையை நீண்ட காலம் தக்க வைக்கலாம்ஆனால் இது ஒரு நிரந்தர வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்இது சிரமம் என பயின்று பார்த்தவர்களுக்குத் தெரியும்

தினமும் 900 கலோரிகள் மட்டுமே உட்கொள்வேன் என ஒருவர் கால்குலேட்டரில் கணக்கிட்டுப் பார்த்து உண்ண முடியாதுசில நாட்கள் முன்னே பின்னே போகும்பிறகு நம்மை அறியாமலே இந்த அதிக கலோரி உட்கொள்ளுதல் வழக்கமாகி விடும்அதாவது ரெண்டு கவளங்கள் கூடுதலாய் சாப்பிடுவதைஒரு ரொட்டியை கூடுதலாய் எடுத்து தட்டில் வைப்பதை நாம் எப்போதும் உணர்வதில்லைமாறாகசாக்லேட்ஐஸ்கிரீம்பிஸ்கட்கள் சாப்பிடுவதாலே கலோரிகள் அதிகரிக்கும் என நினைக்கிறோம்மிகச் சின்ன மாற்றங்களே எப்போதும் மிகப்பெரிய தேக மாற்றங்களுக்கு வழிவகுக்கும்

இன்னொரு ஆய்வு இப்படி சொல்கிறதுஇரண்டு வருடங்கள் தொடர்ந்து தினமும் நீங்கள் 170 கலோரிகளை உணவில் குறைத்தால் சுலபமாய் நீங்கள் உங்கள் நிர்ணயிக்கப்பட்ட எடையை நிறுவி விடலாம்ஆனால் இதற்கு அடுத்த வருடங்களிலும் நீங்கள் கராறாய் உண்ண வேண்டும்இதற்கு ஒரு எளிய வழி ஒருவேளை உணவை முழுக்க மாற்றுவதுஉதாரணமாய்உங்கள் காலை உணவை 5 இட்லி / தோசைகளில் இருந்து இரண்டு ஆம்லேட் அல்லது ஒரு பெரிய வாழைப்பழமாய் மாற்றி விட்டால்அதுவே பழகிப் போனால் (மீதி வேளைகளில் உண்ணும் உணவுகளிலும் கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில்) 170 கலோரிகளுக்கு மேலாகவே தினமும் குறைக்கலாம்இதை விட எளிது தினமும் 16 மணிநேர உண்ணாநோன்பு இருப்பது (இரவுணவுக்குப் பிறகு நேரடியாய் மதிய உணவு அருந்தும் வரை சாப்பிடாமல் இருப்பது).

இன்னொரு முக்கியமான விசயம் தொடர்ந்து உடலுக்கு சவால்கள் அளிப்பதுஉதாரணமாய்நீங்கள் இடைப்பட்ட உண்ணாநோன்பை தினமும் பின்பற்றுகிறவர் என்றால் சில நாட்கள் நீடித்த நோன்பை பின்பற்றுவதுதானிய உணவை பின்பற்றுகிறவர் சில மாதங்கள் பேலியோவுக்கு இடம்பெயர்ந்து பார்ப்பதுசவால்கள் தோன்றத் தோன்ற உடல் அதற்கு ஈடுகொடுக்க போராடும்இந்த போராட்டம் உடலை வலுப்படுத்தும்நான் பிறந்ததில் இருந்தே காலையில் ஒரு தட்டு பொங்கல்சட்னி சாப்பிடுகிறேன்சாகும் வரை அதை மாற்ற மாட்டேன் என அடம் பிடிக்கக் கூடாதுஇன்னொரு பக்கம் இதுவே உடற்பயிற்சிக்கும் பொருந்தும்தினமும் நடைபயில்கிறவர் மராத்தான் ஓட பார்க்கலாம்மராத்தான் ஓடுகிறவர் strength training பண்ணலாம்கும் பூகராத்தேயோகா கற்கலாம்ஜிம்மில் எடைப்பயிற்சி செய்பவர் எடையை மெல்ல மெல்ல கூட்டலாம்.தா., நீங்கள் பத்து கிலோ எடையைத் தூக்கி ஆறு மாதங்கள் பழகி விட்டால் உடலுக்கு அது சுலபமாகும்அப்போது நீங்கள் 15 கிலோ டம்பெல் எடுத்து பயில வேண்டும்தசைகளுக்கு அவ்வப்போது “அதிர்ச்சிகளை” இப்படி அளிக்க வேண்டும்நிர்ணயிக்கப்பட்ட எடையை நம் விருப்பப்படி தக்க வைக்க இவை உதவும்
சரியான நிர்ணயிக்கப்பட்ட எடையை அடைய  லெப்டின்டெஸ்டோஸ்டெரான் போன்ற ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது அவசியம்இதற்கும் உடற்பயிற்சிகாய்கனிகள் மற்றும் புரத சத்து அதிகமான உணவுகள் உதவும் என்கிறார்கள்.


எந்த ஒரு நல்ல விசயத்துக்கும் குறுக்குவழிகள் உதவாது என்பதே இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட எளிய முக்கியமான பாடம்எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு நீடித்த கராறான வாழ்க்கை முறையையும் கொஞ்சம் பிடிவாதமும் அவசியம். 3-6 ஆறு மாதங்களில் உடனடியாக ஒரு பழக்கம் பலன் தருகிறதென்றால் அது அடுத்து ஒரு முட்டுக்கட்டையை போடப் போகிறது என நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்அப்போது அத்தடையை மீற நாம் தயாராக இருக்க வேண்டும்ஒருநாள் இந்த தடையையே (set point)  நாம் நமக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள முடியும்.   

Comments