2019 உலகக்கோப்பை அணிகள் ஒரு பார்வை: ஆஸ்திரேலியா


இம்மாதம் 30ஆம் தேதி, ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது. முதல் ஆட்டமே இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும்  இடையே. செமையாக களைகட்டப் போகும் ஆட்டம் இது. அதற்கு முன் நாம் சிறந்த ஐந்து அணிகளின் முன்னோட்டம் ஒன்றைப் பார்போம். எந்த அணிகள் வலிமையானவை, இங்கிலாந்தின் ஆட்டச்சூழலுக்கு தோதானவை. நல்ல ஆட்டநிலையில் உள்ளவை. இந்த அணிகளின் பலவீனம் என்னென்ன ஆகிய விசயங்களை இந்த முன்னோட்டத் தொடரில் பார்க்கலாம். முதலில் ஆஸ்திரேலியா.

அணி வீரர்கள்:

 1. ஆரோன் பிஞ்ச் (தலைவர்)
 2. கேரி (கீப்பர்)
 3. பேட் கம்மின்ஸ்
 4. ஜேஸன் பெர்ரண்டர்ப்
 5. நேதன் கூல்ட்டர்நைல்
 6. உஸ்மான் கவாஜா
 7. நேதன் லயன்
 8. ஷான் மார்ஷ்
 9. கிளென் மேக்ஸ்வெல்
 10. கேன் ரிச்சர்ட்ஸன்
 11. ஸ்டீவ் ஸ்மித்
 12. மிட்சல் ஸ்டார்க்
 13. மார்க்கஸ் ஸ்டாயினிஸ்
 14. டேவிட் வார்னர்
 15. ஆடம் ஸாம்பா

ஆஸ்திரேலிய அணி இப்படி இருக்க வேண்டியதல்ல. ஆரோன் பிஞ்ச் தலைவர் என்பது சற்று ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அவர் நமது தொன்மக் கதைகளில் யானை பூமாலையை போட்டதால் பரதேசி மன்னனானது போல, தலைவர் ஆனவர். அவருக்கு முன்பு ஸ்டீவ் ஸ்மித்தே தலைவர். அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் வெற்றிகரமான தலைவராகவும் இருந்தார். துணைத்தலைவரான வார்னர் உலகின் மிக ஆபத்தான துவக்க மட்டையாளர்; ஒருநாள், டெஸ்ட் மாற்றும் டி-20 போட்டிகளில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஆடுதளங்களிலும் ஜொலித்தார். இந்த இருவரும் எதேச்சையான ஒரு சிக்கலில் மாட்டி அது மிகப்பெரிய சர்ச்சையாகி பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே புரட்டிப் போட்டது.

மேலும் படிக்க: https://tamil.asiavillenews.com/article/2019-world-cup-teams-review-5993


Comments