மரணக் கவிதைகள்


ஹைடெக்கர் குறித்த எனது ஆங்கில நூலின் ஒரு அத்தியாயத்தில் தமிழின் முக்கிய கவிஞர்களுக்கு மரணம் மீதுள்ள பிரேமையை ஹைடெக்கர் வழியாய் நாம் எப்படி புரிவது என விவாதிக்கிறேன். அதற்காக சில கவிதைகளை மொழியாக்கினேன். ஒன்று இது.
மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய ஒரு அற்புத காதல் கவிதை:
She was speaking about the
lover who was no more:
“Tomorrow is his
birthday.
Mine used to be
the first wishes bestowed 
on him.
For this,
he would wait,
lying low
from other wishers
Today he keeps absconding 
from me too
But after his death
he hasn’t aged
not even by a day.
His age is unliving
like a preserved butterfly.
When he left, 
I was a year
younger to him.
Now I am 
four years older than him.
I am perplexed 
how oneday 
when I grey
he might posture 
as young as my son.”
Death is youth.
Death is undying.
இறந்துபோன காதலனைப்
பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்:
"
நாளை அவனுக்கு
பிறந்த தினம்
எப்போதும் முதல் வாழ்த்து
என்னுடையதாகவே இருக்கும்
அதற்காகவே அவன்
யாரும் முதலில் வாழ்த்திவிடாமல்
தலைமறைவாக காத்திருப்பான்
இன்று எனக்கும் அவன்
தலைமறைவாக இருக்கிறான்
ஆனால் அவன் இறந்தபிறகு
ஒரு நாள் கூட
அவனுக்கு வயதுகூடவே இல்லை
அவன் வயது
பாடம் செய்யப்பட்ட ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அங்கேயே நின்றுவிட்டது
அவன் இறக்கும்போது
நான் அவனைவிட ஒருவயது
இளையவளாக இருந்தேன்
இப்போது அவனைவிட
நான்கு வயது மூத்தவளாக இருக்கிறேன்
எனக்கு முதுமை வரும்போது
அவன் எனக்கு மகனின் வயதில்
அதே இளமையில் நின்றுகொண்டிருப்பான் என்பது
என்னை திகைக்க வைக்கிறது"
மரணம் என்பது இளமை
மரணம் என்பது அழிவின்மை


Comments

gomathy said…
இந்த கவிதையும் இதற்கு முந்தய கவிதையும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நல்ல முயற்சி . இக்கவிதைகளுக்கு அவர்கள் கொடுத்த தலைப்புக்களையும் தரலாமே.
அன்புடன்
செல்வராஜ்