ஐந்து புத்தகங்களின் வெளியீடு

29-12-18 அன்று எனது ஐந்து புத்தகங்கள் சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கில்வெளியிடப்பட்டன.

“மீ டூ - சில விமர்சனங்கள்” நூலை பாரதி கிருஷ்ணகுமாரும் சரவண கார்த்திகேயனும் வெளியிட்டனர். நூல் குறித்து சரவண கார்த்திகேயன் ஆணித்தரமாய் கூர்மையாய் உரையாடினார்.
 “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு தொகுதிகளையும் பாரதி கிருஷ்ணகுமாரும் பேராசிரியர் கணேஷும் வெளியிட்டனர். நூல் குறித்து பேராசிரியர் கணேஷ் ஒரு ஆழமான செறிவான உரையை வழங்கினார். அவர் பேசி முடித்ததும் பாரதி கிருஷ்ணகுமார் என் காதில் சொன்னார், “ஒரு அற்புதமான பேராசிரியரின் உரையை வகுப்பில் அமர்ந்து கேட்டது போல இருந்தது”. 


விழாவில் பங்கேற்ற, பேசிய நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை, அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments