எஸ்.ராவுக்கு சாகித்ய அகாடெமி விருது

இவ்வருடம் சாகித்ய அகாடமி விருது பெறும் எஸ்.ராவுக்கு வாழ்த்துகள். நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய  தருணம் இது.
நவீன இலக்கியத்தின் சமகால நாயகர்களில் ஜெயமோகன், சாரு, இமையம், தேவதச்சன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், தமிழவன், ராஜ் கௌதமன் என பலருக்கும் அடுத்தடுத்த வருடங்களில் விருது வழங்கப்படும் எனும் நம்பிக்கையை இது விதைத்திருக்கிறது.

ஒரு தனிப்பட்ட எழுத்தாளனுக்கான மணிமுடி என நான் இதைப் பார்க்கவில்லை. விருது, சன்மானம் ஆகியவற்றை விட சமகால தீவிர இலக்கியத்துக்கான அங்கீகாரம் என்றே பார்க்கிறேன். ஏனென்றால் இதனால் எஸ்.ரா கூடுதல் புகழ் ஒன்றையும் இனி அடையப் போவதில்லை.

தனிப்பட்ட முறையில், பதின் வயதில் இருந்தே எஸ்.ராவின் மாந்திரிக எதார்த்தக் கதைகளால் வசீகரிக்கப்பட்டு தீவிர இலக்கியம் பக்கம் வந்தவன் என்ற முறையில் ஒரு வாசகனாய் நான் உவப்படைகிறேன். ஏனென்றால், "தாவரங்களின் உரையாடலை" படித்திராவிட்டால் நான் புனைவெழுத விரும்பி எழுத்தாளனாகி இருக்க மாட்டேன்.
வரும் மாதங்களில் எஸ்.ராவின் முக்கியமான நாவல்களைப் பற்றி எழுதுவேன்.
கொண்டாடுவோம்!

Comments