தமிழ் நாவல்களில் திணை

Image result for எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ரா
Image result for பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்


அன்புள்ள அபிலாஷ்
     நலம் என நம்புகிறேன். எஸ்.ரா சாகித்ய அகாதமி விருது பெற்றதை தொடர்ந்து அவர் நாவல்களை பற்றி தங்கள் வலைப்பூவில்‌ உரையாடலாம் என பதிவிட்டிருந்தீர்கள். நேற்று விமர்சகர் அ.இராமசாமியின் வலைதளத்தில் எஸ்.ராவின் யாமம் நாவல் தமிழின் ஐம்பெரும் நிலங்களும் மதராசபட்டினத்தில் வந்து சேர்ந்து திரிதலுற்று நவீன நிலமாக மாறுவதின் சித்திரம் உள்ளது என்ற பார்வையை முன்வைக்கிறார்.

"நவீன நிலவியல் வெளி என்பது மரபின் கலவை. நவீன வாழ்க்கை என்பது மரபடையாளங்களின் இணைவும் தொலைப்பும். தொலைந்ததிற்குள் தேடினால் அவரவர் அடையாளங்களின் பங்களிப்பும் இருக்கவே செய்யும். அதே நேரத்தில் நவீனத்துவத்திற்குள் கரைந்துவிட்ட மரபடையாளங் களைத் தேடிக் கொண்டாடிக் கொண்டிருப்பது நவீன வாழ்வாக இருக்கவும் முடியாது என்பதும் உண்மை. இந்த உண்மையை எழுதிக்காட்டியதின் வழியாக எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் அவரது நாவல்களின் முக்கியமானதாக இருப்பதோடு, நவீனத்தமிழ் வாழ்வின் முக்கியப்பதிவாகவும் ஆகியிருக்கிறது." (அ.இராமசாமி)

இந்த பார்வையாமம் பற்றிய வித்தியாசமான திறப்பை எனக்கு கொடுத்தது.யாமம் பற்றி தங்கள் பார்வை என்ன?

ஜானகிராமன்


வணக்கம் ஜானகிராமன்
ஆம் நீங்கள் சொல்வதும் பேராசிரியர் அ. ராமசாமி சொல்வதும் உண்மையே. திணைக் கோட்பாடு வழி, “யாமம் நாவலை மட்டுமல்ல, “நெடுங்குருதியையும் வித்தியாசமான கோணத்தில் படிக்க முடியும். தமிழ் நிலமும் மனமும் வேறு வேறல்ல. சில படைப்புகளில் நிலமும் மனமும் சம இடம் பிடிப்பது நடக்கிறது. பெருமாள் முருகனின் நாவல்களில் திணையின் சுபாவமும் அதன் காலத்தின் இயல்பும் அவ்வளவு துல்லியமாய் பொருந்தி வருகின்றன. ஆனால் எஸ்.ராவில் அப்படி இல்லை. ஒருவித சிதைவுற்ற கால வெளி அவர் புனைவுகளில் உள்ளது. வெக்கையிலே அங்கு காதலும் மலர்கிறது. பகலில் காதலியின் வாசம் ஒருவனை பித்துக் கொள்ள வைக்கிறது.

 கதை மாந்தரின் மனமும் நிலமும் இப்படி ஒருங்கிணையாத மகத்தான நாவல்களும் உண்டு. இது நாம் விரிவாய் மேற்கொள்ள வேண்டிய விவாதம். தொடர்ந்து பேசுவோம்!

அன்புடன்
ஆர். அபிலாஷ்Comments