நன்றி இறையே!


கடந்த சில தினங்களாய் எழுதுவதில் ஒரு களைப்பு, அவநம்பிக்கை… நேற்று தூக்கத்தை தள்ளிப் போட்டு கொஞ்ச நேரம் எழுதினேன். இன்று முழுக்க எழுத மனம் ஒன்றவில்லை. 

மாலையில் நண்பர் சூர்யதாஸிடம் பேசிக் கொண்டிருந்த போது எனது சில கட்டுரைகளை பாராட்டுதலாய் குறிப்பிட்டார். அதை அடுத்து உடனே விஜய்மகேந்திரன் அழைத்து “90களின் சினிமா” நூலில் கௌதம் மேனன் பற்றின அத்தியாயத்தை வெகுவாய் சிலாகித்து பேசினார். 
குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடிக்கையில் அதற்கு ஒரு உற்சாகம் கிடைக்குமே அதைப் போல என் மனம் ஜிவ்வென ஆகி விட்டது. உதட்டில் புன்னகை நிரந்தரமாய் தங்கியிருக்க நிம்மதியாய் ஒருமணிநேரம் எழுதினேன். நான் சோர்கிற போதெல்லாம் இப்படி ஏதாவது ஒரு ஊக்கம் நிகழ்கிறது. 
நன்றி இறையே!

Comments