பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா? (விமர்சனம்)


Image result for பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா
   
பெண்களை பற்றி  எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.சினிமா,வேலையிடம், சமூகம் என நவீன வாழ்க்கையில் பெண்கள் எவ்வாறாக இருக்கிறார்கள்,பெண்ணுடல் சந்திக்கும் சிக்கல்கள்,உயர்பதவியில் இருக்கும் பெண்களின் சர்வாதிகாரம் என பல்வேறு தளங்களை தொட்டு பேசுகிறது.

" ஆடை ஒழுக்கம் "என்ற தலைப்பில் எழுதபட்ட கட்டுரை ஒன்றில் "ஆடை என்பது பெண்ணழகை கற்பனை செய்வதற்கான ஒரு வெளியை உருவாக்குகிறது."எந்தளவுக்கு உடலை மறைக்கிறோமோ ,எந்தளவு தொலைவில் வைக்கிறோமோ அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகமாகிறது".குறைந்த ஆடைகளுக்கும், பாலியல் கிளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.சமீபத்தில் நண்பர்களுடன் கோவாவிற்கு பயணம் சென்று போது இதை உணர்ந்தேன்.
மாமியார் மருமகள் உறவு என்ற இருமை மட்டும்தான் பொதுபுத்திக்குள் இருக்கிறது.ஆனால் மாமியார்-மருமகன் பற்றி கண்ணுக்கு புலனாக கண்ணிகள் நிறைய இருப்பதை  இளவரசன் -திவ்யா காதலை வைத்து எழுதப்பட்டிருக்கும இக்கட்டுரை இத்தொகுதியில் எனக்கு பிடித்த கட்டுரைகளில் ஒன்று.
எங்கள்  ஊரில் திருவிழாக்களின் போது  பெண்கள் பட்டுப்புடவையுடுத்தி விசேஷ அழகுடன் தெரிவார்கள்.ஆண்கள் அதற்கு பாலியல் கோணம் சூட்டி பின் தொடர்வார்கள்.பெண்ணுடலின் சிக்கல் என்ற கட்டுரை  அது "அழைப்பல்ல"  உரையாடல் அதுவும் தகுதியான ஆண்களுடனான உரையாடல்  என்கிறது.
பள்ளி ,கல்லூரிகளில் மாணவிகள் ஆசிரியர் மீது கொள்ளும் ஈர்ப்பை அணுகுவது எப்படி என்பதுநேரடி அனுபவமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த ஈர்ப்பு ஆசிரியரின் ஆளுமையினால் உருவாகிறது என்பதில்  எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இது முக்கியமான கட்டுரை.
  
பெண்களின் உளவியல் பற்றிய ஒரு குறிப்பிடதகுந்த பார்வையை இந்த புத்தகம் நமக்கு உருவாக்குகிறது.
     
                   பா.  ஜானகிராமன்,
        
                    வேதாரண்யம்.
நன்றி திரு.ஜானகிராமன். மகிழ்ச்சி. ஆழமான நுணுக்கமான வாசிப்பு.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


Comments