“இச்சை என்பது…” – பெருந்தேவி எதிர்வினை


Image result for பெருந்தேவி

 “இச்சை என்பது…” கட்டுரைக்கு கவிஞர் பெருந்தேவி முகநூலில் செய்த அபாரமான எதிர்வினையை இங்கு பகிர்கிறேன். சொல்லப் போனால், கட்டுரையில் நான் பேச இயலாத ஒரு அம்சத்தை பெருந்தேவி சரளமான கவித்துவ மொழியில் விவாதிக்கிறார். “காதலன் – காதலன் ஆல்லாதோர்” எனும் இருமையை கடந்து, சிலவேளைகளில் – காதலில் கசியும் சந்தர்பங்களில் - ஒரு பெண் மனம் இயங்க முடியும் என பேசுகிறார். முக்கியமான பார்வை இது:
ரோலான் பார்த் போல் எழுதியது போல் எழுத வேண்டியது காதல்.
-------------------
பார்த்தவுடன் காதல் என்பது myth அல்ல. அது எப்படி என்று பலர் கேட்டாலும். Gut feeling அது. ஒருவகையில் ஒரு தேர்ந்த வாசகர் அவருக்கான கவிதையைக் கண்டுணர்வது போல. கண்கள்... ஆனால், புற அழகின் பங்கு ஒரு சின்ன அளவில்தான். கண்கள் என்றதும் புற அழகு குறித்து அல்ல.அவ்வாறு கண்ணில் விழுந்து காதலில் எழும்போது (காதலில் விழுதல் என்ற வினை எனக்கு ஒவ்வாதது, உண்மையில் நாம் எழுகிறோம் அதில்.) அதைக் கவனமாகப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. காதல் சொர்க்கத்திலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் செடி. வன்முறையும் கெட்ட எண்ணங்களும் நிறைந்த சூழலில் மிகக் கவனமாகப் பராமரிக்கவேண்டிய செடி. அதைச் செய்யமுடிந்தால் (மட்டுமே) வாழும். மிகக் கடினமான விஷயம் அது.

//பார்த்ததும் காதல் என்பதே தவிர்க்க முடியாதநிதர்சனம். வேறெப்படியும் அது நிகழ முடியுமா தெரியவில்லை.//

//இப்படி பார்த்து தன்னை இழந்து காதலில் விழுந்த ஒருபெண்ணுடன் (ஆணுடன்) காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள்.அவள் (அவன்) கண்களுக்குள் உங்களை மறந்துலயித்திருக்கிறீர்கள். ஒரு சைகை, ஒரு சிறு அசைவு, ஆடையின்சலசலப்பு, முடி நெற்றியில் புரளும்பாங்கு//

//நீங்கள் உங்கள் காதலனுடன் இருக்கையில் இன்னொருஆணைக் கண்டு மனம் அலைபாய்கிறது. ஆனாலும் அந்தபேரழகனுக்காக உங்கள் காதலனான அழகனை நீங்கள்கைவிடப் போவதில்லை.//

மனம் அலைபாய்தல் என்பதை இப்படித்தான் பார்க்கிறேன். தன் காதலனோடு / காதலியோடு இருக்கும்போது பிற பெண்களும் ஆண்களும் அழகாகத் தெரியவே வாய்ப்புண்டு. அதாவது ஒருவர் மீது இருக்கும் காதல் பலரையும் நம் கண்ணில் அழகாக்கிக் காட்டுகிறது. உலகமே ரம்மியமாகிறது என்பது கிளிஷே அல்ல. அதனால், இந்த முதல் வரியின் அலைபாய்தல் தடாலென்று கைவிடுதலுக்கு எப்படி இட்டுச் செல்கிறதெனத் தெரியவில்லை.

ஏன் அலைபாய்தல் காதலோடு சேர்ந்த ஒன்றாக இருக்கக்கூடாது? இதனால் அலைபாய்தலையும் காதலையும் ஒன்றாக்கி சமப்படுத்தி நான் சொல்லவில்லை. அலைபாய்தல் ஒரு momentary good feel என்பதாக ஏன் கொள்ளக்கூடாது? …
By the way, என் காதலனோடு நான் இருக்கும்போது ஒரு பூனைக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ போனாலும் அவை ஒன்றேபோல் பேரழகாக என் கண்ணுக்குக் காட்சி தரும். உடனே என் மனதுக்குப் பிடித்துவிடும். தற்காலிகமாக என்றாலும்தான்.

அப்புறம்....அலைபாய்தல் விவகாரங்களைத் தவிர்த்து, தள்ளிவைத்துப் பார்த்தால்...தீவிரமான, genuine ஆன காதல் ஒருவரோடுதான் இருக்கவேண்டுமா, இருக்குமா என்பவை எல்லாம் ஆபத்தான, ஆனால் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

Comments