பர்வீனின் கிழங்கும் ரதியின் தொடுகையும்


Image result for ரசிகன் நாவல்

“ரசிகன்” நாவலுக்கு வந்துள்ள ஒரு எதிர்வினை:

வணக்கம் எழுத்தாளரே ..
நலம்.  நலம் வேண்டுகிறேன்.
ஐந்து நாட்களாக சாதிக்குடன் பயணித்துக்கொண்டிருந்தேன் ( என் பெயர்தான் கதைசொல்லிக்கும்! ). தீவிர இலக்கியத்தில் நான் வாசித்து முடித்த இரண்டாவது நாவல் " ரசிகன் " .  பல வகைகளிலும் என்னைப் பாதித்த கதாப்பாத்திரங்கள் நாவல் முழுவதுமே இருக்கிறார்கள். 

இந்த நாவலைப் படிக்கும்பொழுது நான் கதைப்போக்குடன் கட்டுண்டிருந்தேன்.  பர்வீணுடைய கிழங்கையும் ரதியின்  தொடுகையையும் நானும் உணர்ந்தேன்.  எனினும்,  என்னுடைய  போதுமான வாசிப்பின்மை காரணமாக இதில் விவாதிக்கப்பட்டிருக்கும் பல அரசியல் சார்ந்த கருத்துகள் எனக்குப் புரியவில்லை.  
இவற்றைச் சார்ந்து நான் படிக்க சில புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்களா ? 
க. சங்கர் 
48, Jawahar Street,
Nagarpalayam,
Gobichettipalayam,
Erode - 638 452.
அன்புள்ள க. சங்கர்
நாவலை நீங்கள் ரசித்துப் படித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்?
அந்நாவலில் தமிழ் சிறு பத்திரிகை உலகம் குறித்த ஒரு சித்திரம் வருகிறது. மேலும் சாதிக்கின் உரையாடல்களில் எண்பது, தொண்ணூறுகளில் தமிழ்ச் சூழலில் பேசப்பட்ட கோட்பாடுகள் பற்றின குறிப்புகளும் வருகின்றன.
சிறு பத்திரிகை உலகம் பற்றி அறிய வேண்டுமானால் ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூல் உதவும். உடனடியாய் படிப்பதானால் இந்த கட்டுரையை பாருங்கள் (https://azhiyasudargal.wordpress.com/2012/05/01/எழுத்து-முதல்-கொல்லிப்ப/).
கோட்பாடுகளை எளிதாய் விளக்கும் நூல்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஆனாலும் கொஞ்சம் போராடி வாசிப்பதானால் தமிழவன், எம்.ஜி சுரேஷ் ஆகியோரின் கோட்பாட்டு நூல்களை தேடி வாசிக்கலாம். ஆனாலும் கோட்பாடுகளை எளிதாய் வாசித்தறிய ஆங்கில நூல்களே சிறப்பானவை.
நன்றி!


 “ரசிகன்” நாவலை இணையம் வழி வாங்க:

உடுமலை.காம்

nammabooks.com

Comments