“என்னங்க ‘சார்’?” கட்டுரையும் எதிர்வினையும்: தீர்வு என்ன?மின்னம்பலம் டாட்காமில் வெளியாகியுள்ள எனது கட்டுரை “என்னங்க‘சார்’?”. அக்கட்டுரை நல்ல கவனம் பெற்றுள்ளது. “சார்” விளிப்பெயரின் அரசியல், அதன் வரலாறு என்ன, அது இன்றைய சமூகத்தில் எப்படி விம்ர்சனத்துக்குள்ளாகிறது, இந்தியப் பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒன்றாக எப்படி இந்த விளிப்பெயர் மாறி உள்ளது, அது எப்படி நமது வேலையிட உறவுகளிடையே உள்ள நெருக்கத்தை குறைக்கிறது என பல விசயங்களை அக்கட்டுரையில் விவாதிக்கிறேன்.
அக்கட்டுரைக்கு இன்று வந்துள்ள எதிர்வினை இது:

அன்பிற்கினிய சந்திரன்.
தங்களின் அதென்னங்க 'சார்' சிறப்புக் கட்டுரை படித்தேன். மிக அழகாக பலவற்றையும் அலசியுள்ளீர்கள். ஆனாலும் ,அதென்னங்க 'சார்'...
எல்லோருக்கும் பயனுள்ள ஒரு தீர்வை சொல்லாமலே போய்வீட்டீர்கள்..
நன்றி.
அன்புடன்.
செழியன்.மா.
பத்திரிகையாளர்.

அன்புள்ள செழியன்
நன்றி. தீர்வை அக்கட்டுரைக்குள்ளே நீங்க காண இயலும்.
(1)  அலுவலக உறவுகள் இடையே “சார்”, “மேடம்” விளி ஒரு அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆகையால், அதை விடுத்து பரஸ்பரம் “அண்ணா”, “அக்கா”, “தம்பி” (இமையம் என்னை தம்பி எனத் தான் பிரியமுடன் அழைப்பார்) அழைப்பது நலம். ஆரம்பத்தில் அலுவலகத்தில் இப்படி ஒருவரை அழைப்பது சற்றே மலினமாய் பட்டாலும், நீண்ட நோக்கில் அதுவே பயன் தரும்.
(2)   பொதுவிட பயன்பாட்டைப் பொறுத்தமட்டில் “சார்” என்பது வெறுமனே ஒரு காலனிய எச்சம் அல்ல; அது இந்தியத் தன்மை பெற்றுவிட்ட ஒரு சொல்; நம் பண்பாட்டின் சாரத்தை தனதாக்கிக் கொண்ட சொல். ஆகையால், அதற்கெதிரான பிரச்சாரம் அவசியமற்றது.
இவையே நான் வந்தடையும் முடிவுகள்.

Comments