இருவர்: ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (3)
இக்காட்சி சிறுசிறு வாய்ப்புகள் நாடி ஆனந்தன் திரியும் அவல காலகட்டத்தை சேர்ந்தது. இங்கு அதே தாழ் கோண மிட் ஷாட் வழக்கம் போல பாத்திரத்தை கம்பீரமாய் மகத்துவமாய் காட்டாமல் நகைமுரணாய் அவனது அவலத்தை, கழிவிரக்கத்தை முன்னிறுத்துகிறதுஇக்காட்சி முடிவில் ஆனந்தன் வயிற்றுக்காக ஒரு சின்ன வேடத்தை ஏற்க முனைந்து, அதையும் இழக்கிறான்.


 அதை அடுத்து அவன் மிகுந்த ஏமாற்றத்துடன், கசப்புடன் தன் நண்பனை நாடிச் செல்கிறான். தான் சார்ந்த அமைப்பு கட்சியாக உருப்பெற்ற உற்சாகத்தில் தமிழ்ச்செல்வன் இருக்கிறான். அவனிடம் ஆனந்தன்உனக்கு வறுமையின் வலி தெரியுமா?” என கையறு நிலையில் கேட்கிறான். இதில் வரும் தாழ் மற்றும் மேல் கோண ஷாட்கள் தமிழ்ச்செல்வன் மீதான பகடியை, ஆனந்தனின் கழிவிரக்கத்தை, இப்படி வாழ்க்கை பொருத்தமற்று இருப்பதன் நகைமுரணை அழகாய் சொல்கின்றன.


மேலே உள்ள காட்சி வெகுபிரசித்தம். ஆனந்தன் தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு உணவருந்த வருகிறான். அங்கு ஆனந்தனை நாடி வரும் பெரிய ரசிகர் கூட்டம் ஒன்றின் முன் தமிழ்ச்செல்வன் அவனை அறிமுகம் செய்துஇது ஹிட்லரும் ஸ்டாலிலும் போராடி சேர்த்த மக்கள் சக்தி. இதை இன்னும் பலமடங்காய் பெருக்கி நம் கட்சியின் வளர்ச்சிக்கு நீ பயன்படுத்த வேண்டும்என கேட்கிறான். இந்த காட்சி முழுக்க மிகுந்த பதற்றத்துடன் இருக்கும் ஆனந்தன் மெல்ல மெல்ல தன்னம்பிக்கை பெற்று ஒரு தலைவனாய் உருப்பெறும் இடத்தை சந்தோஷ் சிவன் அபாரமாய் சித்தரித்திருப்பார். இந்த தாழ் கோண காட்சியில் ஆனந்தனின் பலவீனம், குழப்பம், பதற்றம் மற்றும் அவன் முன் காத்திருக்கும் பிரம்மாண்ட வரலாற்று சந்தர்ப்பம் எப்படி முரணாய் இணைந்து வெளிப்படுகிறது பாருங்கள்.

Comments