நான் தவிப்பதே இல்லை - பித்யுத் பூஷன் ஜேனா


நீ இன்றி நான்


தவிப்பதே இல்லை.
ஆனால் இந்நாட்களில், சமையலறையில் சோறும் மீன்கறியும்
நான் சமைக்கையில்
யாரும்
என் அருகே நிற்பதில்லை!
ஒரு குறிப்பிட்ட விதமாய்
நான் வெங்காயம் நறுக்கும் போது
யாரும் என்னை பரிகசிப்பதில்லை;
பாதி பொரித்துக் கொண்டிருக்கையில்
தட்டில் இருந்து மீன் துண்டுகளை
யாரும் திருடுவதில்லை!
யாருமே இல்லை!
(தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments