நான் உன்னை நேசிக்கவில்லை (XVII) - பாப்லோ நெருடா


Image result for erotic painting
நான் உன்னை நேசிக்கவில்லை
ஒரு உப்பூநீர் இளஞ்சிவப்பு மலரைப் போன்றோ, புஷ்பராகத்தைப் போன்றோ
அல்லது கார்னேஷன் மலர்கள் எய்யும் தீ அம்புகளைப் போன்றோ
நான் உன்னை விரும்புகிறேன் வெறுப்பின் சில துளிகளைப் போல,
ரகசியமாய், என் நிழலுக்கும் ஆன்மாவுக்கும் நடுவே.


ஒருபோதும் மொட்டவிழாத ஒரு செடியைப் போல, ஆனால்
அவிழாத தன் இதழ்களின் ஒளியை தன்னுள் திரையிட்டு வைத்திருக்கும் ஒரு செடியைப் போல;
என் தேகத்தின் இருட்டில் வாழ்கிறது
உன் பிரியம் காரணமாய், பூமியில் இருந்து எழுந்த ஒரு தொட்டுணரும் நறுமணம்.

எப்படி, எப்போது, எங்கிருந்து – தெரியவில்லை ஆனாலும் உன்னை நேசிக்கிறேன்.
தடைகளின்றி, சிக்கல்களோ, அகந்தையோ இன்றி உன்னை இச்சிக்கிறேன்;
உன்னை நேசிக்கிறேன், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால்:

இங்கு நான் மாய்கிறேன், இங்கு நீயும் மாய்கிறாய்,
எவ்வளவு நெருக்கம் எனில், என் மார்பில் இருக்கும் உன் கரம் எனது ஆகும் அளவுக்கு
எவ்வளவு நெருக்கம் எனில், நான் உறங்கி சரிகையில் உன் கண்கள் மூடுமளவுக்கு.
(தமிழில் ஆர். அபிலாஷ்)


.


Comments