ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?ஒரு எழுத்தாளன் தன் வழி பல சமூக நம்பிக்கைகள், எண்ணங்கள், குழப்பங்கள், சிக்கல்களை கடந்து போக அனுமதிக்க வேண்டும். அவன் ஒரு சாமியாடி போல் இருக்க வேண்டும். அவன் குரலில் தெய்வமே பேசும், அப்பேச்சுக்கு சாமியாடி பொறுப்பல்ல. எழுத்தாளனைப் பொறுத்த மட்டில் சமூகம் அவன் வழி பேசுகிறது. அப்போது அவனில் பல முரண்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

 பாரதியிடம் இல்லாத முரணா சொல்லுங்கள்? சாருவின் சிறப்பே இந்த முரண்களின் கூத்தாட்டம் தான் என்பேன். ஒன்றையே தெளிவாய் உறுதியாய் கூறுபவனாய் எழுத்தாளன் இருக்க வேண்டும் என்பது ஒரு பழைய மார்க்ஸிய பார்வை.
 ஆக, இரண்டு சம்மந்தமில்லாத விசயங்களை ஒரு எழுத்தாளன் சொன்னால் நான் அதை பாராட்டுவேன், கொண்டாடுவேன். அவன் காமத்தை ஒறுத்தபடியே அதில் திளைக்கலாம். அவன் அன்பை போதித்தபடியே கடும் வெறுப்பை (நளினமாய்) முன்வைக்கும் ஆதவன் பாணியிலான கதை ஒன்றை எழுதலாம். ஒரு கட்சியை ஆதரித்தபடியே அதற்கு முழு எதிரான விமர்சனம் ஒன்றை முன்வைக்கலாம். இது ஒரு படைப்பாளியின் நெகிழ்வை, ஆற்றோட்டமான மன அமைப்பை, படைப்பூக்கமான பார்வையை காட்டுகிறது என்பது என் நம்பிக்கை. 
இத்தகையோரை நான் தயக்கமின்றி கொண்டாடுவேன்...

Comments