Thursday, February 22, 2018

பனிமனிதர்கள் - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali

என் மூதாதை, இமயத்து பனியினாலான
ஒருவன்,
சமர்கந்தில் இருந்து காஷ்மீருக்கு வந்தான்,
கடல் சமாதிகளில் சேகரித்த தன் குடும்ப சொத்தான
திமிங்கல எலும்புகளை பையில் சுமந்து கொண்டு.

அவன் முதுகெலும்பு
பனிக்கட்டி ஆறுகளில் இருந்து செதுக்கப்பட்டது,
அவன் மூச்சு ஆர்க்டிக் துருவத்திலிருந்து புறப்பட்டது,
ஆகையால் தன்னைத் தழுவும் பெண்களை உறையச் செய்தான்.
அவன் மனைவி கல் போன்ற நீராக உருகினாள்,
அவளது முதுமை
ஒரு தெள்ளிய நீராவியாதல் ஆனது.

Sunday, February 18, 2018

கண்ணாடி வளையல்களின் கனவு - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali 
அந்த இலையுதிர் பருவக் காலங்களில்
என் பெற்றோர் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட
மெல்லிய பஞ்சு மெத்தையில் வெதுவெதுப்பாய் உறங்கினர்

என் அம்மாவின் கைகளில்
உறைந்த நதிகளின் அலைகள் போல வளையல்கள்
அன்று இரவில்

பிரார்த்தனைகளுக்குப் பின்
அவள் இறங்கி தன் அறைக்கு செல்கையில்
படிக்கட்டில் பனி உடையும்
பல வருடங்களுக்குப் பின் பனிக்காலத்துள் உடையும்
சன்னமான ஒலியை கேட்டேன்

தில்லியின் ஒரு கலைந்த நினைவு - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali

1948இல் நான்
 பிறந்திருக்கவில்லை; பெயரற்ற ஒரு சாலையில்
அப்பேருந்து திரும்புகிறது

அங்கே தன் சைக்கிளில்
என் அப்பா
என்னை விட இளமையாய்

ஓக்லாவில் இறங்கிக் கொள்ளும் நான்
ஜமுனா நதியோரமாய் ஓய்வாய் நடக்கும்
என் பெற்றோர்களை கடந்து போகிறேன்

ஒரு காதல் கவிதை

கீழே வருவது எனது கோட்பாட்டு வகுப்பு ஒன்றுக்காக எழுதிய ஒரு குறிப்பு. தேவதேவனின் பிரசித்தமான “ஒரு காதல் கவிதை” கவிதையை பற்றின அலசல். இக்கவிதையில் வரும் முத்தம் உண்மையில் ஒரு முத்தம் அல்ல; மனம் சொல்லத் தவிக்கும் ஒன்றை சொல்ல முடியாது போகையில் என்னென்னமோ செய்கிறோம். நவீன வாழ்க்கையில் கட்டியணைத்து முத்தமிடுவது போல் பாலுறவு சார்ந்தது அல்ல - எதையோ ஒன்றை சொல்வதற்கான தவிப்பே. அதனாலே கட்டிப்பிடிக்க முடியாவிட்டால் காப்பியாவது குடிக்கலாம் என்கிறார் தேவதேவன். அக்கவிதை, அதன் ஆங்கில மொழியாக்கம், அதைப் பற்றின எனது குறிப்பு இனி:

ஒரு காதல் கவிதை
-       தேவதேவன்
-        
கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா

Wednesday, February 14, 2018

மதியத்தின் மீது மெல்ல சாய்ந்த படி - பாப்லோ நெருடா

 Related image
மதியத்தின் மீது மெல்ல சாய்ந்த படி என் துயரத்தின் வலைகளை
வீசுகிறேன் உன் சமுத்திர விழிகளுக்குள்.

அங்கே எனது தன்னந்தனிமை நீள்கிறது, தழலாகிறது
ஜூவாலைகளின் பெரும் உச்சத்தில்,
அதன் கரங்கள் மூழ்கும் ஒருவனுடையதைப் போன்று சுழல்கிறதடி.

Sunday, February 11, 2018

நமக்கு வாய்த்த அடிமைகள் திறமையாளர்கள்: KFCயில் இருந்து அதிமுக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரை

Image result for jayalalitha ministers prostate
கார்ப்பரேட்கள் தம் ஊழியர்கள் தனி அடையாளத்துடன், தனி வேலைத் திறனுடன், குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணத்துவத்துடன் இருப்பதை விரும்புவதில்லை. நான் சொல்வது கூகிள் / ஆப்பிள் நிறுவனத்தில் அல்ல. நம்மைப் போன்றவர்கள் வேலை பார்க்கும் சாதாரண கார்ப்பரேட் கூலி நிறுவனங்களில்.
 உங்கள் கார்ப்பரேட் நிறுவனத்தை ஒரு சலூனுடன் ஒப்பிடுங்கள். நீங்கள் விதவிதமாய் முடிவெட்டுவதில் விற்பன்னர். உங்கள் கை பட வேண்டும் என்றே வாடிக்கையாளர்கள் கூடுகிறார்கள். இதுவே உங்கள் முகம். இதற்காகவே உங்களுக்கு எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இதற்காகவே உங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து இருத்தி இருக்கிறார்கள். ஆனால் உங்கள் சலூனை ஒருநாள் நவீனப்படுத்த முடிவெடுக்கிறார்கள்.
கடையை ஏஸி பண்ணி, நல்ல இருக்கைகள் அமைத்து, வரவேற்பறை கட்டி, வண்ணமடித்து, வெளியே பெரிய முகப்பு பெயர் பலகை வைத்து பிரமாதப்படுத்துகிறார்கள். கூடுதலாய், புது ஊழியர்களையும் இருத்துகிறார்கள். எல்லாம் சரி. சிறப்பு. ஆனால் இப்போது தான் திருப்பம் ஒன்று வருகிறது.

சிவப்புப் பாவாடை

கல்லூரியில் எனது ஒரு கோட்பாட்டு வகுப்புக்காக (லக்கான்) மனுஷ்யபுத்திரனின் இந்த பிரசித்தமான கவிதையை மொழியாக்கினேன். இங்கே பகிர்கிறேன்.

சிவப்புப் பாவாடை
-       மனுஷ்ய புத்திரன்
சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொணடையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

Saturday, February 10, 2018

நிகனோர் பார்ரா: அர்த்தங்களைக் கொண்டு சூதாடியவன்

   
Image result for nicanor parra
தமிழின் சிறந்த பத்து கவிகளை ஒரு பட்டியல் இட்டோமானால் ஒவ்வொருவரின் கவிதை மொழி, அணுகுமுறை, தொனி, நிலைப்பாடு ஆகியவை தனித்துவமாய், ஒரு தனியான பாதையாய், உறைய மறுக்கும் ஒரு சொட்டு ரத்தமாய் இருப்பதைக் காணலாம். இங்கு உன்னதமான கவியாய் அறிகிற ஒவ்வொருவரும் கூட்டத்துடன் இணையாது ஒலிக்கும் தனிக்குரல்.

Tuesday, February 6, 2018

நான் சாதி பற்றி யோசித்த போது நீங்கள் அதை எழுதி இருக்கிறீர்கள்!


நான்கு வர்ணங்கள் எனும் விசித்திரம் (2)

 Related image
இரண்டாவது வகைப் படங்கள்:
இந்த வகைப் படங்களில் சாதி விட்டு சாதி கூடுபாய்வது படத்துக்கு உள்ளாகவே நிகழும். தமிழில் இதற்கு தலைசிறந்த உதாரணம் ஷங்கரின் படங்கள். ”ஜெண்டில்மேனில்மத்திய சாதியை சேர்ந்தவர் பிராமணனாக வேடம் பூண்டு வாழ்கிறார். ஆனால் வில்லனைப் பழிவாங்க சத்திரியனாய் செயல்படுகிறார். அதுவே அவரது வெற்றியின் சூத்திரம் என நம்பியார் பாத்திரம் மூலம் அப்படம் விளக்குகிறது. வில்லனை வெற்றி கொள்ள சத்திரியனின் வீரம் மட்டும் போதாது, பிராமணனின் சாணக்கியத்தனும் தேவை என நாயகனை நம்பியார் அறிவுறுத்துகிறார். இது படத்தின் மைய சேதியாகவே தொனிக்கிறது.