அப்பாவின் புலிகள் மற்றும் கதை முடிவுக்கு... பற்றி பேராசிரியர் மங்களம்

Image result for அப்பாவின் புலிகள்
Finished reading your novel, kadai mudivirku... and the collection of stories, appavin puligal. 
The novel made rapid reading but much of it, i felt, was similar to arushi murder case that rocked noida/delhi some years back. Is that a coincidence or a concious take-off? 
Your stories are amazing. A touch of magical realism in many, a few are surreal but enjoyed reading each one of them. Appavin puligal was a fascinating take on dealing with grief n difficult relationship with one's father. It touched a raw nerve in me. 
Thanks so much n best wishes. 
B Mangalam

உங்கள் நாவலானகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்மற்றும் சிறுகதைத் தொகுப்பானஅப்பாவின் புலிகள்இரண்டையும் வாசித்து முடித்தேன்.
நாவல் வேகமாய் சென்றது; அதில் கணிசமான பகுதி ஆருஷி கொலை வழக்கை நினைவுபடுத்தியது. அது திட்டமிட்டே அவ்வாறு எழுதப்பட்டதா அல்லது எதேச்சையாய் அவ்வாறு அமைந்ததா?
உங்கள் கதைகள் அற்புதம். சில கதைகளில் மாந்திரிக எதார்த்தத்தையும், வேறு சிலவற்றில் சர்ரியலிசமும் கவனித்தேன்; ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். “அப்பாவின் புலிகள்கதை அப்பாவுடனான ஒருவரின் உறவில் நேரும் இழப்புணர்வையும் சிக்கல்களையும் பேசும் மனதை ஆட்கொள்ளும் கதை. என்னை வெகுவாய் சலனமடையச் செய்தது அக்கதை. வாழ்த்துக்களும் நன்றியும்.

பி. மங்களம்

Comments