எழுத்து நம்மை என்ன செய்கிறது?

 Image result for what i talk about when i talk about running
அண்ணா, 

ஒருவர் எழுத்தில் அதிக நேரம் செலவிட்ட பின்பு அவர் உணர்வுகள் மிகவும் இகியதாக மாறி விடுகின்றன. இந்த மென்மையின் நிலையில் இருந்து (முக்கியமாக) ஒரு படைப்பாளி புற உலகை எதிர் கொள்ள முடியுமா? எழுத்தும் துறவு போன்றது தானோ.
அன்புடன்
ஆர். அபிலாஷ்

அன்புள்ள அருள்
நீங்கள் சொல்வது உண்மையே. எழுத்து நம் மன அமைப்பு, நுண்ணுணர்வை, உலகை பார்க்கும் விதத்தை, மனிதர்களுடன் உரையாடும் பாணியை கண்ணுக்கு புலப்படாத மாதிரி – ஒரு தோட்டக்காரன் தன் தோட்டத்து செடிகொடிகளை திருத்தி அமைப்பது போல் – மாற்றி அமைக்கிறது. உங்கள் கேள்விக்கு வருகிறேன். எழுத்தனுபவம் நம்மை இளகிய மனம் கொண்டவர்களாய், மென்னுணர்வு மிக்கவர்களாய் மாற்றுகிறதா?
இது ஆளாளுக்கு மாறுபடும். என் அனுபவத்தில் எழுத்து ஒரு படைப்பாளியை சற்றே கொடூரமானவனாய் மாற்றுகிறது. மானுட அறத்தின் உச்சத்தில் நின்று நெக்குருக பேசும் படைப்பாளியைக் கூட நீங்கள் நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில் சகமனிதனை நோகடிப்பதில் அவர் தனி இன்பம் காண்பதை நீங்கள் கவனிக்க முடியும். எழுத்தாளர் சந்திப்புகள் எப்போதும் அடிதடி ரகளையில் முடிவதைப் பார்க்கலாம். காரணம் அவர்கள் டிராகுலாக்கள் என்பது. நானும் நீங்களும் கோரைப்பற்கள் கொண்டவர்களே. எப்போது வெளிக்காட்டுவோம் எனத் தெரியாது.

 முரகாமி What I Talk About When I Talk About Running நூலில் இதையே வலியுறுத்துகிறார். உலகின் அத்தனை தீமைகளையும் கசாப்பு செய்து தொங்க விட்டு எடையிட்டு பையிலாக்கி உங்களுக்கு தருபவனே எழுத்தாளன். அவன் கைகளும் ஆடைகளும் குருதியில் ஈரமாகி சொட்டுகின்றன. தீமையின் ஆக்கிரமிப்பால் அவன் பைத்தியமாகாமல் இருக்க உடற்பயிற்சி அவசியம் என்கிறார்.
சிலரை எழுத்து ரொம்ப குழந்தைத்தனமாக மாற்றுவதை, சிலரை காதல் பித்தர்களாய் ஆக்குவதை, சிலரை சுயமோகத்தில் திளைப்பவராய் மாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். உங்களை அது மிகவும் மென்மையானவராய், உலகின் கொடூரங்களை எதிர்கொள்ள முடியாதவராய் மாற்றி இருப்பதாய் சொல்கிறீர்கள்.
இந்நிலையில், ஒரு படைப்பாளி புற உலகை எப்படி சிக்கலின்றி எதிர்கொள்வது? இதற்கான சிறந்த பதிலை கூறத் தக்கவர் கவிஞர் யுவன் சந்திரசேகர் தான். மனிதன் எங்கெங்கு இருந்து என்னென்ன செய்கிறானோ அங்கங்கு அதுவாக மட்டும் இருந்து விட்டுப் போனால் போதும் என்பது அவர் அணுகுமுறை. அவர் ஒரே நேரம் பல விதங்களில் இருப்பார்: விடலைத்தனமாய், லௌகீகமாய், அலௌகீகமாய், ஜாலியாய், தீவிரமாய், தத்துவார்த்தமாய், சீரியசாய்…. “ஒரு படைப்பாளி வங்கியில் எல்லாம் பணி செய்வது அவனை வதைப்பதற்கு சமம் அல்லவா? ஏன் இந்தியாவில் ஒரு கவிஞன் கவிஞனாக மட்டுமே இருக்க முடிவதில்லை?” என அவரிடம் ஒருமுறை கேட்டேன். அவர் சொன்னார்:
“நான் வங்கியில் இருக்கையில் படைப்பாளி அல்ல. என் பணியை மிகுந்த ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடன் செய்வேன்.”
மனுஷ்யபுத்திரனும் இது போல் நெகிழ்வாக தன்னை வைத்துக் கொள்பவரே. ஒரு பக்கம் போனில் காதல் மொழி பேசிக் கொண்டு, தன்னைக் காண வந்துள்ள வாசகரிடம் ரொம்ப தீவிரமாய் இலக்கிய விவாதம் செய்வார். இடையிடையே சமூக விமர்சனப் பதிவொன்றை முகநூலில் பதிவேற்றுவார். இதனிடையே அவரை டிவியில் பேசக் கேட்க ஒரு போன் அழைப்பு வரும். அதற்கு பதில் அளிக்கும் போதே அவர் முகம் டிவியில் உரையாடுவதற்கான பாவனைகளை ஒத்திகை பார்க்க ஆரம்பிக்கும். இப்போது இன்னொரு ஜாலியான நண்பர் வருவார். முன்னவரிடம் தமிழ் நவீன கவிதையில் ஏன் இப்படியெல்லாம் உருவகங்களை பயன்படுத்துகிறார்கள் என பேசிக் கொண்டிருந்தவர் சட்டென புதியவரிடம் பயங்கர வேடிக்கையாக எதையாவது பேசி புது தடத்தில் சென்று விடுவார். எழுத்தாளன் எப்போதும் எழுத்தாளனாக இருக்கக் கூடாது என்பதை அவரிடம் இருந்தே நான் கற்றுக் கொண்டேன்.
நம் மன அமைப்பு அதன் இயல்பில் ஒரே சமயத்தில் பல துண்டுகளாய் உடைந்து முரணற்று இயங்கக் கூடியது. நாம் நம் மனதை அதன் இயல்பில் இருக்க அனுமதித்தால் எழுத்தனுபவம் நம் அன்றாட வாழ்வை அதிகம் சிதைக்காமல் காப்பாற்றலாம்.   
என் மன அமைப்பு சட்டென எதாவது ஒன்றில், யாராவது ஒரு மனிதரில் போதை சுகத்தைக் கண்டு அடிமையாகக் கூடியது. நான் தினமும் சில மணிநேரங்களாவது எழுதக் கூடியவன். கடந்த பத்து வருடங்களாய் அவ்வாறு எழுதி வருகிறேன். விளைவாக, என் மனம் வாழ்வனுபவத்தை உள்வாங்கும் பாணி முழுக்க மாறி விட்டது என இரு வருடங்களுக்கு முன்பு உணர்ந்தேன்.
 நான் வீட்டில் ஒரு வேலை செய்து கொண்டிருப்பேன். யாரிடமாவது ஜாலியாக உரையாடிக் கொண்டிருப்பேன். அலுவலகம் சென்று முழுகவனத்துடன் வேலை செய்வேன். ஆனால் அப்போதெல்லாம் என் மனம் என் வசம் இல்லை எனும் உணர்வு எனக்கு ஏற்படும். நான் செய்வதை சற்று தள்ளி நின்று நானே வேடிக்கை பார்க்கும் விசித்திர அனுபவம். விளைவாக எல்லா நடவடிக்கைகளிலும் நான் ரொம்ப வறட்சியாய் இருக்கும் பிரக்ஞை, உலகில் நடப்பதை எல்லாம் அர்த்தமற்றவை எனும் உணர்வு என்னை ஆக்கியமித்தது. ஆனால் எழுதும் போது மட்டும் நான் அதில் முழுக்க நானாக இருப்பேன். அது மட்டுமே உலகின் ஒரே அறுதி உண்மை எனும் எண்ணம் எனக்குள் அப்படி வலுப்பட்டது.
நான் என் முனைவர் பட்ட நெறியாளர் ரா.அழகரசனிடம் இதைப் பற்றி விவாதித்தேன். அவர் சொன்னார் “இது ரொம்ப ஆபத்தானது. நீயாகவே இதை உணர்ந்திருப்பது நல்லது. இப்படியே போனால் ஒருநாள் முழுக்க நீ உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு விடுவாய். சீக்கிரமே மீள முயற்சி செய்.”
இவ்வருட பாதியில் பெங்களூர் வந்து உதவிப் பேராசிரியாக வேலைக்கு சேர்ந்த பின்னரும் இந்த இரட்டை நிலை நீடித்தது. நான் பேசுவேன், ஆனால் நான் பேசுவதை நானே உள்ளுக்குள் இருந்து கவனித்து சிரித்துக் கொள்வேன். சரி தான், இதில் இருந்து எனக்கு மீட்சியே இல்லை போல என நினைத்துக் கொண்டேன். எழுதுவதையும் என்னால் நிறுத்த முடியாது, இப்பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. என்ன பண்ணுவது?
சமீபமாய் இப்பிரச்சனை தானாய் ஒரு முடிவுக்கு வந்தது. இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளை கற்பிக்கும் பொறுப்பை எனக்கு அளித்தார்கள். அந்த வகுப்புகள் ஒரு மலைப்பாம்பு போல் என்னை முழுங்கிக் கொண்டன. வகுப்பில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தேன். வகுப்புகள் முடிந்த பின் மனம் வருத்தமாகி ஏங்கும் அளவுக்கு வகுப்புடன் ஒன்றிப் போனேன். எனக்கு தோதான ஒரு சவாலாய் பாடங்கள் அமைந்தன. நிறைய படித்து தயாரித்து போக வேண்டி இருந்ததால் எழுத்துக்கு இணையான ஒரு திகைப்பும் கிளர்ச்சியும் எனக்கு விமர்சன வகுப்புகளில் கிடைத்தன. நான்  வேலைக்குப் போக ஆரம்பித்து எட்டு வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு அனுபவம் எனக்கு வாய்க்கிறது. என் இரட்டை நிலை அகன்று, நானே நானாக வகுப்புகளில் இருக்க ஆரம்பித்தேன்.
ஆனாலும், பிரச்சனை முழுக்க நீங்கி விடவில்லை. இந்த வகுப்புகளில் என்னை நான் தொலைக்க ஆரம்பித்த பின் என் எழுத்து வெகுவாய் குறைந்து போனது. கடந்த மாதம் நான் வெகு குறைவாகவே பிளாகில் பிரசுரிப்பதை சமீபத்தில் கவனித்தேன். ஏனெனில் ஒரு போதையில் இருந்து இன்னொன்றுக்கு என் மனம் தாவி இருக்கிறது. ஒன்றில் இருக்கையில் இன்னொன்றை மறந்து விடுகிறேன்.

நான் இனி தினமும் நான்கு மணிநேரம் எழுத ஆரம்பித்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. வகுப்பில் அதே கிளர்ச்சி இருக்குமா? எனில், இனி நான் இரண்டாய் பிரிந்து எங்கு இருப்பேன்?

Comments

Anonymous said…
Hi -Your mentality is good and below will be of help.regards

28. All Suffering is Born of Desire
Questioner: I come from a far off country. I had some inner experiences on my own and I would like to compare notes. Maharaj: By all means. Do you know yourself?
Q: I know that I am not the body. Nor am I the mind.
M: What makes you say so?
Q: I do not feel I am in the body. I seem to be all over the place everywhere. As to the mind, I can switch it on and off, so to say. This makes me feel I am not the mind.
M: When you feel yourself everywhere in the world, do you remain separate from the world? Or, are you the world?
Q: Both. Sometimes I feel myself to be neither mind nor body, but one single all-seeing eye. When I go deeper into it, I find myself to be all I see and the world and myself become one.
M: Very well. What about desires? Do you have any?
Q: Yes, they come, short and superficial.
M: And what do you do about them?
Q: What can I do? They come, they go. l look at them. Sometimes I see my body and my mind engaged in fulfilling them.
M: Whose desires are being fulfilled?
Q: They are a part of the world in which I live. They are just as trees and clouds are there.
M: Are they not a sign of some imperfection?
Q: Why should they be? They are as they are, and I am as I am. How can the appearance and disappearance of desires affect me? Of course, they affect the shape and content of the mind.
M: Very well. What is your work?
Q: I am a probation officer.
M: What does it mean?
Q: Juvenile offenders are let off on probation and there are special officers to watch their behaviour and to help them get training and find work.
M: Must you work?
Q: Who works? Work happens to take place.
M: Do you need to work?
Q: I need it for the sake of money. I like it, because it puts me in touch with living beings.
M: What do you need them for?
Q: They may need me and it is their destinies that made me take up this work. It is one life, after all.
M: How did you come to your present state?
Q: Sri Ramana Maharshi's teachings have put me on my way. Then I met one Douglas Harding who helped me by showing me how to work on the 'Who am I ?'
M: Was it sudden or gradual?
Q: It was quite sudden. Like something quite forgotten, coming back into one's mind. Or, like a sudden flash of understanding. 'How simple', I said, 'How simple; I'm not what I thought I am! I'm neither the perceived nor the perceiver; I'm the perceiving only'.
M: Not even the perceiving, but that which makes all this possible.
Q: What is love?
M: When the sense of distinction and separation is absent, you may call it love.
Q: Why so much stress on love between man and woman?
M: Because the element of happiness in it is so prominent.
Q: Is it not so in all love?
M: Not necessarily. Love may cause pain. You call it then compassion.
Q: What is happiness?
M: Harmony between the inner and the outer is happiness. On the other hand, self-identification with the outer causes is suffering.
Q. How does self-identification happen?
M: The self by its nature knows itself only. For lack of experience whatever it perceives it takes to be itself. Battered, it learns to look out (viveka) and to live alone (vairagya). When right behaviour (uparati), becomes normal, a powerful inner urge (mukmukshutva) makes it seek its source. The candle of the body is lighted and all becomes clear and bright.
Q: What is the real cause of suffering?
M: Self-identification with the limited (vyaktitva). Sensations as such, however strong, do not cause suffering. It is the mind bewildered by wrong ideas, addicted to thinking: 'I am this' 'I am that', that fears loss and craves gain and suffers when frustrated.
Very beautiful. thanks for the comment!